புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... விலைய மட்டும் யாருகிட்டயும் சொல்லிராதீங்க...

பிரபல நடிகர் ஒருவர் மிரட்டலான விலையில் புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... விலைய மட்டும் யாருகிட்டயும் சொல்லிராதீங்க...

சினிமா உலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் மிகவும் விலை உயர்ந்த கார் மற்றும் பைக்குகளை வாங்குவது என்பதெல்லாம் சர்வ சாதாரணமாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. அதுவும் பாலிவுட் திரையுலகம் என்றால் சொல்லவே வேண்டாம். ஹார்லி டேவிட்சன் பைக்குகள் முதல் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வரை பாலிவுட் திரையுலகினரிடம் ஏராளமான விலை உயர்ந்த வாகனங்கள் உள்ளன.

புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... விலைய மட்டும் யாருகிட்டயும் சொல்லிராதீங்க...

இந்த சூழலில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர் ஒருவர் தற்போது மிகவும் விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்கியுள்ளார். பிரபல நடிகரான ராஜ்குமார் ராவ்தான் அது. புதிய ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் (Harley Davidson Fat Bob) பைக்கை, ராஜ்குமார் ராவ் தற்போது வாங்கியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் உலகப்புகழ் பெற்ற மோட்டார்சைக்கிள் நிறுவனமாக திகழ்கிறது.

புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... விலைய மட்டும் யாருகிட்டயும் சொல்லிராதீங்க...

ஹார்லி டேவிட்சன் பைக்கை சொந்தமாக்க வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் நிச்சயமாக இருக்கும். அந்த வாய்ப்பு பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவிற்கு கிடைத்துள்ளது. அவர் வாங்கியுள்ள ஃபேட் பாப் மாடல், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் லைன் அப்பில் மிகவும் பிரபலமான மோட்டார்சைக்கிளாக திகழ்ந்து வருகிறது.

புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... விலைய மட்டும் யாருகிட்டயும் சொல்லிராதீங்க...

ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கின் மீது நடிகர் ராஜ்குமார் ராவ் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஹார்லி டேவிட்சன் இந்தியாவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஹார்லி டேவிட்சன் குடும்பத்திற்கு நடிகர் ராஜ்குமார் ராவை வரவேற்பதாகவும் அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... விலைய மட்டும் யாருகிட்டயும் சொல்லிராதீங்க...

இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும்போது, அனேகமாக இந்த இடம் நடிகர் ராஜ்குமார் ராஜ் குடியிருப்பின் பார்க்கிங் பகுதியாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கை பல்வேறு திரை படங்களில் பார்க்க முடியும். அந்த பைக்கை ராஜ்குமார் ராவ் வாங்கியிருப்பதால், அவர் ஹார்லி டேவிட்சன் ரசிகர் என்பது நமக்கு தெரியவருகிறது.

MOST READ: போலீஸ்காரரை பழி தீர்த்த மருத்துவர்... பீஹாரில் அரங்கேறிய சுவாரஷ்யமான சம்பவம்!

புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... விலைய மட்டும் யாருகிட்டயும் சொல்லிராதீங்க...

புதிய ஃபேட் பாப் மோட்டார்சைக்கிள் மாடலை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்தது. பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் 2019 ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கை வாங்கியுள்ளார். தற்போதைய தலைமுறை ஃபேட் பாப் மோட்டார்சைக்கிளில் 1,745 சிசி Milwaukee-Eight 107 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

MOST READ: சாலையில் சாதாரணமாக பைக் ஓட்டி வரும் இந்த பிரபலம் யாரென்று தெரிகிறதா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க

புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... விலைய மட்டும் யாருகிட்டயும் சொல்லிராதீங்க...

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 144 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கின் விலை 14.69 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலையை கணக்கிட்டால் இன்னும் அதிகமாக இருக்கும்.

MOST READ: விமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா? இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கிய பிரபல நடிகர்... விலைய மட்டும் யாருகிட்டயும் சொல்லிராதீங்க...

முந்தைய தலைமுறை வெர்ஷனுடன் ஒப்பிடும்போது, புதிய ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது. இதில், புதிய இன்ஜின் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றம் ஆகியவையும் அடங்கும். நடிகர் ராஜ்குமார் ராவ் தனது புதிய ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் மோட்டார்சைக்கிளை விரைவில் சாலையில் ஓட்டி வருவார் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actor Rajkummar Rao Buys New Harley Davidson Fat Bob. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X