விலையை கேட்டதும் தலையே சுத்துது... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல நடிகரின் மனைவி... யார்னு தெரியுமா?

பிரபல நடிகரின் மனைவி ஒருவர் மிகவும் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விலையை கேட்டதும் தலையே சுத்துது... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல நடிகரின் மனைவி... யார்னு தெரியுமா?

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ராம் சரண் (Ram Charan). எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் சரண் நடித்திருந்தார். ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து இந்த படத்தில் அவர் ஒரு கலக்கு கலக்கியிருந்தார். இதன் காரணமாக தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் ராம் சரண் பிரபலமாகியுள்ளார்.

விலையை கேட்டதும் தலையே சுத்துது... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல நடிகரின் மனைவி... யார்னு தெரியுமா?

இந்த சூழலில் ராம் சரணின் மனைவியான உப்பசனா காமினேனி (Upasana Kamineni) தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வாங்கியிருப்பது ஆடி இ-ட்ரான் (Audi e-tron) கார் ஆகும். இது ஆடி நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ள விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தம் புதிய காரை வாங்கியிருக்கும் தகவலை, உப்பசனா காமினேனியே உறுதி செய்துள்ளார்.

விலையை கேட்டதும் தலையே சுத்துது... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல நடிகரின் மனைவி... யார்னு தெரியுமா?

தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த புதிய காரை வாங்கியுள்ளதற்காக உப்பசனா காமினேனிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய சந்தையில் ஆடி நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டே இ-ட்ரான் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வந்து விட்டது.

விலையை கேட்டதும் தலையே சுத்துது... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல நடிகரின் மனைவி... யார்னு தெரியுமா?

இந்திய சந்தையில் இ-ட்ரான் 50 (e-tron 50), இ-ட்ரான் 55 (e-tron 55) மற்றும் இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் 55 (e-tron Sportback 55) என மொத்தம் 3 வேரியண்ட்களில் இந்த எலெக்ட்ரிக் கார் கிடைக்கிறது. இதில், ஆடி இ-ட்ரான் 55 மற்றும் ஆடி இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் 55 ஆகிய 2 வேரியண்ட்களிலும், ட்யூயல் எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை 300 kW பவரையும், 664 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

விலையை கேட்டதும் தலையே சுத்துது... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல நடிகரின் மனைவி... யார்னு தெரியுமா?

இந்த 2 வேரியண்ட்களிலும், 95kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்புதான் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால், 359 கிலோ மீட்டர்கள் முதல் 484 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும். அதேபோல் இந்த 2 வேரியண்ட்களும் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.7 வினாடிகளில் எட்டி விடும்.

விலையை கேட்டதும் தலையே சுத்துது... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல நடிகரின் மனைவி... யார்னு தெரியுமா?

மறுபக்கம் ஆடி இ-ட்ரான் 50 வேரியண்ட்டின் எலெக்ட்ரிக் மோட்டார்கள் 230 kW பவரையும், 540 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த வேரியண்ட்டில், 71kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 264-379 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலையை கேட்டதும் தலையே சுத்துது... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல நடிகரின் மனைவி... யார்னு தெரியுமா?

இந்த வேரியண்ட், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 6.8 வினாடிகளில் எட்டி விடும். ஆடி இ-ட்ரான் 50 வேரியண்ட் தற்போதைய நிலையில் 1.01 கோடி ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஆடி இ-ட்ரான் 55 வேரியண்ட் 1.17 கோடி ரூபாய் என்ற விலையிலும், ஆடி இ-ட்ரான் 55 ஸ்போர்ட்பேக் வேரியண்ட் 1.19 கோடி ரூபாய் என்ற விலையிலும் கிடைக்கிறது.

விலையை கேட்டதும் தலையே சுத்துது... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல நடிகரின் மனைவி... யார்னு தெரியுமா?

இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதுதவிர இ-ட்ரான் ஜிடி (e-tron GT) மற்றும் ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி (RS e-tron GT) ஆகிய மாடல்களையும் ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதில், இ-ட்ரான் ஜிடி மாடல் 1.80 கோடி ரூபாய் என்ற விலையிலும், ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி மாடல் 2.05 கோடி ரூபாய் என்ற விலையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவையும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

விலையை கேட்டதும் தலையே சுத்துது... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல நடிகரின் மனைவி... யார்னு தெரியுமா?

ஆனால் ராம் சரணின் மனைவி உப்பசனா காமினேனி எந்த மாடலை வாங்கியுள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை. தற்போது திரையுலக பிரபலங்கள் பலரும் ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் காரை வாங்கி வருகின்றனர். இதில், மகேஷ் பாபு மிகவும் முக்கியமானவர். தெலுங்கு திரையுலகின் மற்றொரு முன்னணி நடிகரான மகேஷ் பாபு வெகு சமீபத்தில்தான் ஆடி இ-ட்ரான் காரை வாங்கினார்.

விலையை கேட்டதும் தலையே சுத்துது... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல நடிகரின் மனைவி... யார்னு தெரியுமா?

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. இந்திய சந்தையை பொறுத்தவரையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிதான், அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக இருந்து வருகிறது. டாடா நிறுவனம் சமீபத்தில் இதன் புதிய மாடலை, டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Actor ram charan wife buys audi e tron electric car details here
Story first published: Saturday, May 28, 2022, 18:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X