Just In
- 1 hr ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 1 hr ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 3 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சொகுசு கார்கள் வேண்டாம்... படப்பிடிப்பு தளத்திற்கு சாதாரணமாக சைக்கிளில் வரும் பிரபல நடிகை... யார்னு தெரியுமா?
பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் வந்து சென்று கொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. பெரும்பாலான நடுத்தர வர்க்க குடும்பங்களில் கூட தற்போது ஒவ்வொருவருக்கும் ஒரு இரு சக்கர வாகனமாவது உள்ளது. மோட்டார் வாகனங்கள் விரைவான பயணங்களுக்கு உதவினாலும், பருமன் உள்பட பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளன.

எனவே சைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்து தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் குழுவினர் கூட கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வரிசையில் பிரபல நடிகை ஒருவர் தற்போது தினமும் படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்று வருகிறார். ரகுல் பிரீத் சிங்தான் அந்த பிரபல நடிகை. அவர் தற்போது பாலிவுட்டில் 'மேடே' என்ற படத்தில் நடித்து வருகிறார். அஜய் தேவ்கன் உள்பட முக்கிய நட்சத்திரங்கள் பலர் இந்த படத்தில் நடித்து கொண்டுள்ளனர்.

பொதுவாக திரைப்பட நடிகர், நடிகைகள் பலர் சொகுசு கார்களில்தான் படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து செல்கின்றனர். ஆனால் ரகுல் பிரீத் சிங் சற்று வித்தியாசமாக 'மேடே' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு தினமும் சைக்கிளில் வந்து சென்று கொண்டுள்ளார். இதற்காக அவர் தினமும் 12 கிலோ மீட்டர் வரை சைக்கிள் ஓட்டுகிறார்.

ரகுல் பிரீத் சிங் சைக்கிள் ஓட்டி செல்லும் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ரகுல் பிரீத் சிங்கின் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர். ரகுல் பிரீத் சிங் தினமும் சைக்கிள் ஓட்டி செல்வது போக்குவரத்து நெரிசல் அவ்வளவாக இல்லாத பகுதியாகும். இருந்தாலும் ரகுல் பிரீத் சிங்கின் பாதுகாப்பிற்காக கார் ஒன்று அவருடனே வருகிறது.

ரகுல் பிரீத் சிங் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில் ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாகதான் தற்போது படப்பிடிப்பு தளத்திற்கு தினமும் சைக்கிளில் சென்று வருகிறார். அவரது இந்த முயற்சி சைக்கிள் ஓட்டுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

மோட்டார் வாகனங்கள் அதிகரித்து கொண்டே வருவதால், மக்களுக்கு உடல் பருமன் போன்ற பிரச்னைகள் மட்டுமின்றி காற்று மாசுபாடு போன்ற பிரச்னைகளும் ஏற்படுகிறது. எனவே உலகின் பல்வேறு நாடுகள் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டுடன், சைக்கிளின் பயன்பாட்டையும் ஊக்குவித்து வருகின்றன.

இதன் மூலம் காற்று மாசுபாடு பிரச்னைக்கு முடிவு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சைக்கிள் பயன்பாடு பெரிதாக ஊக்குவிக்கப்படுவதில்லை. இதனையும் அரசு கவனத்தில் கொண்டால் சிறப்பாக இருக்கும்.