Just In
- 30 min ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 1 hr ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 2 hrs ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 3 hrs ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
Don't Miss!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
30 வயசுதான்! அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய கோடீஸ்வரர்! இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க
அரபு நாட்டில் மாஸ் காட்டி வரும் இந்திய இளைஞர் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பா அசந்து போய்ருவீங்க.
இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வரர் அடல் சஜன். தற்போது ஐக்கிய அரபு எமீரகத்தில் வசித்து வரும் அடல் சஜன், டனுபே ஹோம் (Danube Home) நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். இவருக்கு 30 வயது மட்டுமே ஆகிறது. மிக இளம் வயதிலேயே குடும்ப தொழில் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டு விட்டது.
தொழிலில் கொடி கட்டி பறப்பதால், ஆடம்பரமான வாழ்க்கையை அடல் சஜன் வாழ்ந்து வருகிறார். அவருக்கு கார்களை ஓட்டுவது என்றால், மிகவும் பிடிக்கும். அவரே அதை பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார். அதுவும் அறிமுகம் இல்லாத இடங்களுக்கு செல்வது என்றால், அடல் சஜனுக்கு கொள்ளை பிரியம். அப்படி ஏதேனும் ஒரு இடத்திற்கு சென்றால், திரும்பி வர கூகுள் மேப்பைதான் அடல் சஜன் பயன்படுத்துவார்.
தொழிலதிபர்கள் என்றாலே மிக விலை உயர்ந்த கார்களை வாங்கி குவிப்பது வாடிக்கைதான். அதுவும் அடல் சஜன் போன்று கார் ஆர்வலர்களாக இருக்கும் தொழிலதிபர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்களது வீட்டில் மிகவும் விலை உயர்ந்த மற்றும் அரிய கார்கள் பல அணிவகுத்து நிற்கும். அப்படி அடல் சஜன் வைத்திருக்கும் கவர்ச்சிகரமான கார்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் (Rolls Royce Phantom)
பெரும் கோடீஸ்வரர்களின் வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காராவது நிச்சயமாக இருக்கும். இதன்படி அடல் சஜனிடமும் ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்ளது. நீல நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரை அடல் சஜன் வைத்துள்ளார். இந்த காரில் சொகுசு வசதிகளுக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இல்லை.
லம்போர்கினி கல்லார்டோ (Lamborghini Gallardo)
லம்போர்கினி நிறுவனத்தில் இருந்து வெளிவந்த மிக பிரபலமான கார்களில் ஒன்று கல்லார்டோ. உலகின் அனைத்து மூலைகளிலும் இந்த கார் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்துள்ளது. இதில், அடல் சஜனும் ஒருவர். முதலில் இந்த காரைதான் அடல் சஜன் தனது தினசரி பயன்பாட்டிற்கு மிக நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தார்.
ஆனால் புதிய கார்கள் வர வர லம்போர்கினி கல்லார்டோ காரை பயன்படுத்துவதை அடல் சஜன் குறைத்து கொண்டார். எனவே தற்போது பெரும்பாலான நேரம் லம்போர்கினி கல்லார்டோ கார் கராஜில்தான் நின்று கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் பிரபல மனிதர்கள் ஒரு சிலரிடம் லம்போர்கினி கல்லார்டோ கார் இருக்கிறது.
ஃபெராரி கலிபோர்னியா டி (Ferrari California T)
ஃபெராரி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் அழகான கார்களில் கலிபோர்னியா டி மாடலும் ஒன்று. கடந்த 2014ம் ஆண்டு ஃபெராரி நிறுவனம் இந்த காரை அறிமுகம் செய்தது. ஆனால் தற்போது இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. ஃபெராரி கலிபோர்னியா டி காரின் தோற்றம் நிச்சயமாக அனைவரையும் கவர்ந்திழுக்கும்.
அடல் சஜனின் பெற்றோர், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு ஃபெராரி கலிபோர்னியா டி காரை பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது. அடல் சஜனிடம் இருக்கும் ஃபெராரி கலிபோர்னியா டி சிகப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அடல் சஜனின் ஃபேவரைட் கார் இதுதான். மற்ற கார்களை காட்டிலும், இந்த காரில் பயணிப்பதைதான் அடல் சஜன் அதிகம் விரும்புவார்.
பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீடு கன்வெர்டபிள் (Bentley Continental GT Speed Convertible)
மிக இளம் வயதில் இருந்தே கன்வெர்டபிள் கார்கள் மீது அடல் சஜன் அதிக ஆர்வம் கொண்டவராக உள்ளார். அடல் சஜனின் பெற்றோர், அவரது திருமண நாளை முன்னிட்டு, பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீடு கன்வெர்டபிள் காரை அவருக்கு பரிசளித்துள்ளனர். இது கஸ்டமைஸ் செய்யப்பட்ட காராகும். அடல் சஜனிடம் இருக்கும் விலை உயர்ந்த கார்களில் இதுவும் ஒன்று.
பென்ட்லீ பென்டைகா (Bentley Bentayga)
அடல் சஜன் பென்ட்லீ பென்டைகா காரையும் பயன்படுத்தி வருகிறார். ஆனால் இந்த காருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. எனினும் கல்ப் நியூசுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், வார நாட்களில் பென்ட்லீ பென்டைகா காரை எடுத்து கொண்டு, அலுவலகம், கூட்டங்களுக்கு செல்வதை தான் விரும்புவதாக அடல் சஜன் கூறியுள்ளார்.
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!