விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!

விமான பணிப்பெண்களின் சம்பளம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!

விமானத்தின் ஊழியர்களில் விமான பணிப்பெண்கள் மிகவும் முக்கியமானவர்கள். நமது விமான பயணம் பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும் இருப்பதில் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. அவர்கள் நமக்கு பல்வேறு விதங்களிலும் சேவையாற்றி வரும் நிலையில், விமான பணிப்பெண்களாக இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதை இந்த செய்தியில் கூறியுள்ளோம்.

விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!

விமான பணிப்பெண்கள் தங்கள் பணியின் ஒரு பகுதியாகவே உலகின் பல்வேறு இடங்களுக்கும் இலவசமாக சென்று வர முடியும். இடையில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கலாம். அதாவது ஒரு நகரத்திற்கு சென்று விட்டால், அடுத்த விமானத்திற்கு குறிப்பிட்ட நேரம் இடைவெளி இருக்கும். சில சமயங்களில் நாள் கணக்கில் கூட இந்த இடைவெளி அமையும்.

விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!

எனவே அவசரம் இல்லாமல் அவர்கள் சுற்றி பார்க்கலாம். இது பணியின்போது கிடைக்கும் ஓய்வு. இதுதவிர முழுமையான விடுமுறை காலங்களில், இலவசமாகவோ அல்லது குறைவான கட்டணத்திலோ அவர்களால் விமானங்களில் பயணிக்க முடியும். ஒரு சில விமான நிறுவனங்கள், விமான பணிப்பெண்கள் விடுமுறையில் இருக்கும் சமயங்களில், தங்கள் விமானங்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கின்றன.

விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!

அதே நேரத்தில் ஒரு சில விமான நிறுவனங்கள், வேறு நிறுவனத்தில் பணியாற்றும் விமான பணிப்பெண்களுக்கும் தள்ளுபடி விலையில் டிக்கெட்களை வழங்குகின்றன. எனவே ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் விமான பணிப்பெண், வேறு நிறுவனத்தின் விமானத்தில், மிகவும் குறைவான கட்டணத்தில் பயணம் செய்ய முடியும்.

விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!

விமான பணிப்பெண்களுக்கு மட்டுமல்லாது, விமான பணிப்பெண்களின் குடும்பத்தினர்களுக்கும் கூட விமான நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. ஒரு சில விமான நிறுவனங்கள், விமான பணிப்பெண்களின் குடும்பத்தினரையும் தங்கள் விமானங்களில் இலவசமாகவே பயணம் செய்ய அனுமதிக்கின்றன.

விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!

விமான பணிப்பெண்களின் பெற்றோர், கணவர் மற்றும் குழந்தைகள் இந்த வாய்ப்பை பெற முடியும். விமான பணிப்பெண்களின் குடும்பத்தினர் மட்டுமல்லாது, நண்பர்களுக்கும் கூட சலுகைகள் கிடைக்கின்றன. ஒரு சில விமான நிறுவனங்கள், விமான பணிப்பெண்களுக்கு பாஸ்களை வழங்குகின்றன. வருடத்திற்கு இவ்வளவு என குறிப்பிட்ட எண்ணிக்கையில் விமான பணிப்பெண்களுக்கு பாஸ்கள் கிடைக்கும்.

விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!

இந்த பாஸ்களை விமான பணிப்பெண்கள் தங்கள் நண்பர்களுக்கோ, அல்லது இதர குடும்ப உறுப்பினர்களுக்கோ வழங்க முடியும். இதன் மூலம் அவர்களாலும் விமானத்தில் இலவசமாக பயணம் செய்ய முடியும். ஒரு விமான பணிப்பெண்ணாவது நமக்கு தோழியாக இருந்தால் பரவாயில்லையே என நீங்கள் மனதில் நினைப்பது புரிகிறது!

விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!

விமான பணிப்பெண் வேலையை செய்வதால் கிடைக்கும் மற்றொரு நன்மை, தினமும் புதிய நபர்களை சந்திப்பது ஆகும். உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மனிதர்களிடமும் பேசும் வாய்ப்பு விமான பணிப்பெண்களுக்கு கிடைக்கிறது. தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என உலகின் பிரபலமான மனிதர்கள் பலரிடமும் அவர்களுக்கு அறிமுகம் கிடைக்கும்.

விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!

இப்படிப்பட்ட மனிதர்களை நேரில் பார்ப்பதே அரிதான விஷயம். அப்படி இருக்கும்போது அவர்களின் அறிமுகம் கிடைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. விமான பணிப்பெண்களுக்கு இருக்கும் மற்றொரு நன்மை, உணவு செலவுக்கான பணத்தை திரும்ப பெற்று கொள்வது. விமான பணிப்பெண்கள் விமானத்திலேயே சாப்பிட்டு கொள்ளலாம்.

விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!

இதுதவிர பயணத்தின்போது வெளியிடங்களில் உணவுக்கு ஆகும் செலவையும் கூட ஒரு சில விமான நிறுவனங்கள் திரும்பி வழங்குகின்றன. எனவே விமான பணிப்பெண்கள் ஒரு நகரத்திற்கு சென்றால், அடுத்த விமானத்திற்கு நேரம் இருக்கிறது என்றால், ஊர் சுற்றி பார்க்கலாம். அத்துடன் அங்குள்ள ஹோட்டல்களில் இலவசமாகவே பல்வேறு புதிய உணவுகளையும் ருசி பார்க்கலாம்.

விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!

அதேபோல் ஒரு நகரத்திற்கு சென்று விட்டால், அடுத்த விமானத்தில் பணிக்கு திரும்பும்வரை, ஹோட்டலில் தங்கும் சூழல் விமான பணிப்பெண்களுக்கு ஏற்படும். பணியின்போது இப்படிப்பட்ட சூழல் உருவானால், ஹோட்டல் கட்டணத்தையும் விமான நிறுவனங்களே வழங்கி விடும். விமான பணிப்பெண்கள் இந்த சமயத்தில் ஹோட்டலில் நன்றாக ஓய்வு எடுத்து கொள்ளலாம்.

விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!

கூடுதல் நேரம் இருந்தால், சுற்றி பார்க்கலாம். அதாவது கூடுதல் நேரம் இருக்கிறது எனும்பட்சத்தில், ஊர் சுற்றி பார்ப்பதற்கு இலவசமாகவே உணவு மற்றும் ஹோட்டல் வசதிகளை விமான பணிப்பெண்களால் பெற்று கொள்ள முடியும். இவையெல்லாம் தவிர விமான பணிப்பெண்களுக்கு, விமான நிறுவனங்கள் நல்ல சம்பளத்தையும் வழங்குகின்றன.

விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!

விமான பணிப்பெண்களின் சராசரி சம்பளம் ஒரு வருடத்திற்கு சுமார் 25 லட்ச ரூபாய் முதல் 30 லட்ச ரூபாய் வரை என கூறப்படுகிறது. ஆனால் விமான பணிப்பெண்களின் அனுபவம் மற்றும் அவர்களின் பணியாற்றி வரும் விமான நிறுவனங்கள் ஆகியவற்றை பொறுத்து இந்த எண்கள் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Advantages of being a flight attendant
Story first published: Wednesday, August 10, 2022, 21:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X