கார் கண்ணாடிக்கு உள்ளே ஒரு சிறிய கண்ணாடி இருக்கும்... எதற்காக தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

காரின் சைடு வியூ மிரர்களுக்கு உள்ளே சிறிய கண்ணாடிகளை ஏன் பொருத்துகின்றனர்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் கண்ணாடிக்கு உள்ளே ஒரு சிறிய கண்ணாடி இருக்கும்... எதற்காக தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

கார்களில் ரியர் வியூ மிரர்கள் மற்றும் சைடு வியூ மிரர்கள் ஆகியவை இருப்பது நமக்கு தெரியும். இதில், ரியர் வியூ மிரர்கள் காரின் உள்ளே வழங்கப்பட்டிருக்கும். பின்னால் வரும் வாகனங்களை டிரைவர் பார்ப்பதற்கு அவை உதவி செய்கின்றன. அதே சமயம் சைடு வியூ மிரர்கள் காரின் இருபுறமும் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றின் மூலமும் பின்னால் வரும் வாகனங்களை டிரைவர் பார்க்கலாம்.

கார் கண்ணாடிக்கு உள்ளே ஒரு சிறிய கண்ணாடி இருக்கும்... எதற்காக தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஒரு காருக்கு ரியர் வியூ மிரர்களும், சைடு வியூ மிரர்களும் மிகவும் முக்கியம். கார் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகளை ரியர் வியூ மிரர்களும், சைடு வியூ மிரர்களும் நீக்குகின்றன. ஆனால் சைடு வியூ மிரர்களை நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தால், அதற்கு உள்ளே ஒரு சிறிய மிரர் வழங்கப்பட்டிருக்கும். இந்த மிரர் எதற்கு? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கிறது.

கார் கண்ணாடிக்கு உள்ளே ஒரு சிறிய கண்ணாடி இருக்கும்... எதற்காக தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அந்த சந்தேகத்தை இந்த செய்தியில் நிவர்த்தி செய்கிறோம். சைடு வியூ மிரர்களில் வழங்கப்பட்டிருக்கும் சிறிய மிரரை, பிளைண்ட் ஸ்பாட் மிரர் (Blind Spot Mirrors) என அழைக்கின்றனர். இதனால் நமக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கின்றன? என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னால் பிளைண்ட் ஸ்பாட் என்றால் என்ன? என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியம்.

கார் கண்ணாடிக்கு உள்ளே ஒரு சிறிய கண்ணாடி இருக்கும்... எதற்காக தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அனேகமாக பிளைண்ட் ஸ்பாட் என்றால் என்ன? என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இருந்தாலும் தெரியாதவர்களுக்காக சிறிய விளக்கம். டிரைவரின் பார்வைக்கு புலப்படாத பகுதிகள்தான் பிளைண்ட் ஸ்பாட் எனப்படுகின்றன. அதாவது ரியர் வியூ மிரர் மற்றும் சைடு வியூ மிரர் மூலமாக குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே டிரைவர் பார்க்க முடியும்.

கார் கண்ணாடிக்கு உள்ளே ஒரு சிறிய கண்ணாடி இருக்கும்... எதற்காக தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்த மிரர்களில் தெரியாத பகுதிகளைதான் பிளைண்ட் ஸ்பாட் என்கின்றனர். பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களை டிரைவர்களால் பார்க்க முடியாது. ஏனெனில் அந்த பகுதிகள் ரியர் வியூ மிரர் மற்றும் சைடு வியூ மிரர்களில் கவர் ஆகாது. பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனத்தை டிரைவர் கவனிக்காவிட்டால் விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கார் கண்ணாடிக்கு உள்ளே ஒரு சிறிய கண்ணாடி இருக்கும்... எதற்காக தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் சைடு வியூ மிரர்களில் பிளைண்ட் ஸ்பாட் மிரர்கள் பொருத்தப்பட்டிருந்தால் விபத்து நடப்பதற்கான வாய்ப்புகள் குறையும். ஏனெனில் டிரைவரின் பார்வையில் இருந்து மறைந்திருக்கும் பகுதிகளை பிளைண்ட் ஸ்பாட் மிரர்கள் காட்டும். இதன் மூலம் உங்கள் பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் உள்ள வாகனங்களை நீங்கள் கண்காணித்து கொண்டே வர முடியும்.

கார் கண்ணாடிக்கு உள்ளே ஒரு சிறிய கண்ணாடி இருக்கும்... எதற்காக தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அத்துடன் பாதுகாப்பில் எவ்விதமான சமரசமும் செய்து கொள்ளலாம் நீங்கள் லேன் மாற முடியும். பிளைண்ட் ஸ்பாட் மிரர்கள் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களை தெளிவாக பார்க்க முடியும் என்பதுதான் இதன் முக்கியமான நன்மை. பிளைண்ட் ஸ்பாட் மிரர்கள் உங்களுக்கு கூடுதல் விஸிபிலிட்டியை வழங்குகின்றன.

கார் கண்ணாடிக்கு உள்ளே ஒரு சிறிய கண்ணாடி இருக்கும்... எதற்காக தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

சைடு வியூ மிரர்கள் தவற விடும் பகுதிகளில், அதாவது பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் மற்ற வாகனங்கள் மற்றும் பாதசாரிகளை உங்களால் மிக தெளிவாக பார்க்க முடியும். வளைவுகளில் திரும்பும்போதும், லேன் மாறும்போதும், மற்ற வாகனங்களை ஓவர்டேக் செய்யும்போதும், பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் உள்ள வாகனங்கள் மீது மோதி விடாமல் இருப்பதற்கு பிளைண்ட் ஸ்பாட் மிரர்கள் உதவி செய்கின்றன.

கார் கண்ணாடிக்கு உள்ளே ஒரு சிறிய கண்ணாடி இருக்கும்... எதற்காக தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அத்துடன் உங்களை சுற்றி என்னனென்ன வாகனங்கள் எல்லாம் வந்து கொண்டுள்ளன? என்பதை தெரிந்து கொள்ளவும் பிளைண்ட் ஸ்பாட் மிரர்கள் உதவி செய்கின்றன. பிளைண்ட் ஸ்பாட் மிரர்கள் இருந்தால், மற்ற வாகனங்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவில் இடைவெளியை பராமரித்து கொண்டு, உங்களால் மிகவும் பாதுகாப்பாக காரை ஓட்ட முடியும்.

கார் கண்ணாடிக்கு உள்ளே ஒரு சிறிய கண்ணாடி இருக்கும்... எதற்காக தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அத்துடன் உங்கள் காரை பாதுகாப்பாக பார்க்கிங் செய்வதற்கும் பிளைண்ட் ஸ்பாட் மிரர்கள் உதவி செய்யும். காரை பார்க்கிங் செய்வதற்கு உண்மையில் நல்ல திறன் வேண்டும். இந்த திறன் இல்லாமல் பலர் தடுமாறி வருகின்றனர் என்பதுதான் உண்மை. அதுவும் ஒரு சிலர் பார்க்கிங் செய்யும் திறன் இல்லாமல் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

கார் கண்ணாடிக்கு உள்ளே ஒரு சிறிய கண்ணாடி இருக்கும்... எதற்காக தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதில் நீங்களும் ஒருவர் என்றால், பிளைண்ட் ஸ்பாட் மிரர்கள்தான் உங்களுக்கான தீர்வு. பிளைண்ட் ஸ்பாட் மிரர்கள் இருக்கும்பட்சத்தில் மற்ற வாகனங்கள் அல்லது பொருட்களின் மீது மோதி விடாமல் உங்களால் காரை பாதுகாப்பாக பார்க்கிங் செய்ய முடியும். அதேபோல் பார்க்கிங் பகுதியில் இருந்து காரை மிகவும் பாதுகாப்பாக வெளியே எடுக்கவும் செய்யலாம்.

கார் கண்ணாடிக்கு உள்ளே ஒரு சிறிய கண்ணாடி இருக்கும்... எதற்காக தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

உலகில் தினந்தோறும் ஏராளமான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதற்கு பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களை சரியாக கவனிக்க தவறி விடும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. ஆனால் இதுபோன்ற சாலை விபத்துக்கள் நடைபெறாமல் இருப்பதை, சைடு வியூ மிரர்களுக்கு உள்ளே இருக்கும் பிளைண்ட் ஸ்பாட் மிரர்கள் உறுதி செய்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Advantages of blind spot mirrors
Story first published: Thursday, August 5, 2021, 17:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X