Just In
- 11 hrs ago
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- 12 hrs ago
அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய ஸ்கார்பியோ காரின் அறிமுகம் எப்போது? அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!
- 14 hrs ago
ரயில் இன்ஜின் ஹாரனிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா? எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
- 16 hrs ago
மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்ப அவரு வாங்கியிருக்க கார பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!
Don't Miss!
- News
தக்காளி மட்டுமல்ல காய்கறிகள் விலையும் உச்சம் தொட்டது... கவலையில் இல்லத்தரசிகள்
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Movies
கேன்ஸ் திரைப்பட விழா : மோடியை பாராட்டிய மாதவன்… எதுக்குனு தெரியுமா ?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யூஸ்டு காருக்கு பதிலா லோனர் காரை வாங்கலாம்... ஏன் தெரியுமா? இப்டி ஒன்னு இருக்கறது இவ்ளோ நாளா தெரியாம போச்சே!
லோனர் கார்களை வாங்குவதால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

கார்களை நாம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சர்வீஸ் செய்வது மிகவும் முக்கியம். அப்போதுதான் கார் நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும். ஆனால் கார் சர்வீஸ் முடிந்து வரும் வரை வேறு கார் இல்லை என்பதற்காக பலர் தங்களது காரை சர்வீசுக்கு விடுவதில்லை. அல்லது மிக அதிக அளவில் கால தாமதம் செய்கின்றனர்.

இதில் நீங்களும் ஒருவர் என்றால், லோனர் கார்களை (Loaner Car) பயன்படுத்தி கொள்ளலாம். பல்வேறு டீலர்ஷிப்கள் லோனர் கார்களை வழங்குகின்றன. உங்களது கார் சர்வீஸ் செய்யப்படும் சமயத்தில், உங்கள் பயன்பாட்டிற்காக டீலர்ஷிப் தரப்பில் வழங்கப்படும் வேறு ஒரு கார்தான் லோனர் கார். இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

ஒருவேளை உங்கள் கார் விபத்தில் சிக்கி அதனை நீங்கள் சரி செய்ய விட்டிருந்தாலும் கூட லோனர் கார்களை பயன்படுத்தி கொள்ள முடியும். உங்கள் போக்குவரத்து தடையில்லாமல் நடைபெறுவதை இந்த லோனர் கார்கள் உறுதி செய்கின்றன. ஒருவேளை உங்களுக்கு வழங்கப்படும் லோனர் பிடித்திருந்தால், டீலர்ஷிப்பிடம் இருந்து அதனை நீங்கள் வாங்கவும் செய்யலாம்.

லோனர் கார்களை வாங்குவதன் மூலம் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். குறைவான விலையில் வாங்க முடியும் என்பதுதான் லோனர் கார்களின் மிக முக்கியமான பலன். லோனர் கார்கள் பயன்படுத்தப்பட்டவை என்பதால், புதிய கார்களுடன் ஒப்பிடும்போது, அவை மிகவும் குறைவான விலையில் கிடைக்கும்.

கார் வாங்கும் பலரும் விலைக்குதான் அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர். எனவே நீங்கள் குறைந்த விலையில் கார் வாங்க முடிவு செய்திருந்தால், லோனர் கார்கள் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். இங்கே மற்றொரு ரகசியத்தையும் நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியமானது. ஒரு சில டீலர்ஷிப்களில் கார்கள் விற்பனையாகாமல் தேங்கி விடும்.

அப்படிப்பட்ட கார்களை டீலர்ஷிப்கள் வேறு வழியில்லாமல் லோனர் கார்களாக பயன்படுத்தி கொள்ளும். நீங்கள் குறைந்த விலைக்கு அடித்து பேசுவதற்கு இது ஒரு வாய்ப்பு என்பதை மனதில் கொள்ளுங்கள். லோனர் கார்கள் நல்ல கண்டிஷனில் இருக்கும் என்பது, இந்த கார்களை வாங்குவதன் மூலம் கிடைக்கும் மற்றொரு முக்கியமான நன்மை.

லோனர் கார்களை வாங்குபவர்கள் மிக குறுகிய காலமே அதனை பயன்படுத்தியிருப்பார்கள். அதன்பின் டீலர்ஷிப்பில் திரும்ப ஒப்படைத்து விடுவார்கள். அதுவும் அவர்கள் இந்த கார்களை மிகவும் கவனமாகதான் பயன்படுத்துவார்கள். ஏனெனில் இது அவர்களுடைய சொந்த கார் கிடையாது. தங்களது சொந்த காரை விட லோனர் கார்களை அவர்கள் பக்குவமாகதான் கையாள்வார்கள்.

எனவே மற்ற வழக்கமான யூஸ்டு கார்களை விட சிறப்பான கண்டிஷனில் நீங்கள் லோனர் கார்களை எதிர்பார்க்கலாம். அத்துடன் அது டீலர்ஷிப் நிர்வாகம் பராமரிக்கும் லோனர் கார் என்பதால், முறையாக பராமரிக்கப்பட்டிருக்கும். லோனர் கார் வாடிக்கையாளர்களிடம் சேவையில் இருக்கும்போது பிரச்னைகள் வரக்கூடாது என்பதற்காக, அதன் பராமரிப்பு விஷயத்தில் டீலர்ஷிப் நிர்வாகம் கவனமாக இருக்கும்.

எனவே யூஸ்டு கார் சந்தையில் வாங்கப்படும் கார்களை விட லோனர் கார்கள் மிகவும் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் யூஸ்டு கார் சந்தையில் வாங்கப்படும் கார்களின் பராமரிப்பு, அதன் உரிமையாளர்களை பொறுத்து மாறுபடலாம். ஒருவர் காரை நன்றாக பராமரித்திருக்கலாம். இன்னொருவர் பராமரிப்பு விஷயத்தில் கோட்டை விட்டிருக்கலாம்.

நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு காரை வாங்குவதுதான் உங்களுக்கு பிற்காலத்தில் எந்த பிரச்னைகளும் ஏற்படாமல் இருக்க உதவி செய்யும். குறிப்பாக சொகுசு காரை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற கனவுடையவர்களுக்கு லோனர் கார்கள் மிகச்சிறந்த தேர்வு. ஏனெனில் சொகுசு கார்களை வாங்குவதற்கு லட்சங்கள் அல்லது கோடிகளில் பணத்தை செலவிட வேண்டும்.

அதுவே லோனர் காராக பயன்படுத்தப்பட்ட சொகுசு காரை வாங்கினால் விலையை பெரிய அளவில் குறைத்து பேசி வாங்க முடியும். லோனர் கார்கள் ஃபேக்டரி வாரண்டியுடன் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. காரின் வயது மற்றும் எத்தனை கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது? என்பதை பொறுத்து, உங்களுக்கு இன்னும் நிறைய கிலோ மீட்டர்கள் வாரண்டியில் மீதி இருக்கலாம்.
Note: Images used are for representational purpose only.
-
அதிக தூரம் பயணிக்கும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! நம்ம டிவிஎஸ் தயாரிப்பு இருக்க மத்தது எதுக்குங்க!
-
அதிக ரேஞ்ச் உடன்... டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா? டீசர் வீடியோ வெளியீடு!!
-
ஸ்கோடா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் ஸ்லாவியா... ஏப்ரல் மாசம் எவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கு தெரியுமா?