இதுக்கும் ஆப்பா... சிஎன்ஜியிலும் கை வைக்க போறாங்க... வெளியாகியது விலை உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்!

சிஎன்ஜியின் விலை மிக விரைவில் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முக்கிய விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இதுக்கும் ஆப்பா... சிஎன்ஜியிலும் கை வைக்க போறாங்க... வெளியாகியது விலை உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்!

அண்மைக் காலங்களாக பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்த வண்ணமே இருக்கின்றது. அக்டோபர் மாதத்தின் முதல் நாளான இன்றும்கூட பெட்ரோல் விலையில் 25 காசுகளும், டீசல் விலையில் 30 காசுகளும் உயர்த்தப்பட்டன. இந்த பெரும் உயர்வினால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை வரலாற்றை முறியடிக்கும் வகையில் புதிய உச்சத்தை எட்டி இருக்கின்றது.

இதுக்கும் ஆப்பா... சிஎன்ஜியிலும் கை வைக்க போறாங்க... வெளியாகியது விலை உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அதிகபட்சமாக பெட்ரோல் லிட்டர் ஒன்று ரூ. 99.58க்கும், ஹைதராபாத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 106க்கும், உச்சபட்சமாக இந்தூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 110.41க்கும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதேபோன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை உயர்ந்து காணப்படுகின்றது.

இதுக்கும் ஆப்பா... சிஎன்ஜியிலும் கை வைக்க போறாங்க... வெளியாகியது விலை உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்!

இதேபோல் டீசல் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்படுகின்றது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 94.74க்கும், தலைநகர் டெல்லியில் ரூ. 90.17க்கும், மும்பையில் ரூ. 97.84க்கும், அதிகபட்சமாக ஹைதராபாத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 98.39க்கும் விற்பனையாகி வருகின்றது. இவ்வாறு வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் ஆகிய இரு எரிபொருளின் விலையும் உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் பெரும் வேதனை ஏற்படுத்தி இருக்கின்றது.

இதுக்கும் ஆப்பா... சிஎன்ஜியிலும் கை வைக்க போறாங்க... வெளியாகியது விலை உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்!

இந்த நிலையில், தற்போது மிக விரைவில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் மற்றொரு எரிபொருள் தேர்வாக இருக்கும் சிஎன்ஜியின் விலையும் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதைக் கருத்தில் மக்கள் பலர் தற்போது சிஎன்ஜியால் இயங்கும் வாகனங்களுக்கு மாற தொடங்கியிருக்கின்றனர்.

இதுக்கும் ஆப்பா... சிஎன்ஜியிலும் கை வைக்க போறாங்க... வெளியாகியது விலை உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்!

இந்த மாதிரியான சூழ்நிலையில் சிஎன்ஜி விலையிலும் அரசு கை வைக்க இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஒரு பிரிவான பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் (பிபிஏசி) செப்டம்பர் 30 அன்று வெளியிட்ட விலை அறிவிப்பின்படி இந்த தகவல் தெரிய வந்திருக்கின்றது.

இதுக்கும் ஆப்பா... சிஎன்ஜியிலும் கை வைக்க போறாங்க... வெளியாகியது விலை உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்!

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் இயற்கை வாயுவின் விலை 2.90 அமெரிக்க டாலர்களாக இருக்கின்றது. அக்டோபர் 1 முதல் மார்ச் 31 வரை இதன் விலையில் 1.11 டாலர்கள் உயர இருக்கின்றது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 90 ரூபாய் வரை உயர இருக்கின்றது.

இதுக்கும் ஆப்பா... சிஎன்ஜியிலும் கை வைக்க போறாங்க... வெளியாகியது விலை உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்!

இதன் விளைவாகவே இந்தியாவில் சிஎன்ஜியின் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையால் தற்போது மக்கள் பெருத்த சோகத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அதிக மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி இருக்கின்றனர். இதனால் இப்போதே மின்சார வாகனங்களின் விற்பனைச் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

இதுக்கும் ஆப்பா... சிஎன்ஜியிலும் கை வைக்க போறாங்க... வெளியாகியது விலை உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்!

அதேவேலையில், போதிய அளவு மின் வாகனங்களுக்கான கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தினால் மக்கள் மாற்று எரிபொருள் வாகனமாக சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் வாகனங்களின் பக்கம் திரும்பி இருக்கின்றனர். இதன் விளைவாக சிஎன்ஜி வாகனங்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதுக்கும் ஆப்பா... சிஎன்ஜியிலும் கை வைக்க போறாங்க... வெளியாகியது விலை உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்!

இந்த மாதிரியான சூழ்நிலையில் சிஎன்ஜியின் விலை உயர இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது அனைவரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக, ஆட்டோ மற்றும் கால் டாக்சி வாகன ஓட்டுனர்கள் மத்தியில் இந்த தகவல் பேரதரிச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. பொது போக்குவரத்தில் பெரும்பாலான வாகனங்கள் சிஎன்ஜிக்கு மாறி வரும் நிலையில் இத்தகைய இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுக்கும் ஆப்பா... சிஎன்ஜியிலும் கை வைக்க போறாங்க... வெளியாகியது விலை உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்!

ஆகையால், எதிர்காலத்தில் சிஎன்ஜி வாகனங்களைக் காட்டிலும் மின் வாகனங்களின் விற்பனை சற்றே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே அரசு, மக்களை மின் வாகனங்களின் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக மானியம் மற்றும் வரி சலுகை உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றது. தொடர்ந்து, தற்போது மிகப் பெரிய குறையாக இருக்கும் அடிப்படைக் கட்டமைப்பு வசதி இல்லாததைக் களைக்கும் பொருட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆகையால், மிக விரைவில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

English summary
After natural gas receives a price hike cng prices also go up
Story first published: Friday, October 1, 2021, 18:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X