பல லட்சம் மதிப்புள்ள பைக்குகளை தேடிபிடித்து கைப்பற்றிய போலீஸார்... அட இதுதாதன் காரணமா...?

கடந்த காலங்களில் ராயல் என்பீல்டு பைக்குகள்மீது மோற்கொள்ளப்பட்டதைப்போன்ற நடவடிக்கையை தற்போது விலையுயர்ந்த பைக்குகள்மீது போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

பல லட்சம் மதிப்புள்ள பைக்குகளை தேடிபிடித்து கைப்பற்றிய போலீஸார்... அட இதுதாதன் காரணமா...?

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதங்கள் ஏற்படாக் கூடாது என்பதற்காக, பல்வேறு கட்டுப்பாடுகளை ஒவ்வொரு மாநில போலீஸாரும் விதித்தனர். குறிப்பாக, புத்தாண்டு தினத்தில் அதிகம் நடைபெறும் சாலை விபத்துகளைத் தவிர்ப்பதற்காகவே கடுமையான விதிகளைப் போலீஸார் பிறப்பித்திருந்தனர்.

பல லட்சம் மதிப்புள்ள பைக்குகளை தேடிபிடித்து கைப்பற்றிய போலீஸார்... அட இதுதாதன் காரணமா...?

அதில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, ஆபத்தை விளைவிக்கின்ற வகையில் வாகனத்தை இயக்குதல் மற்றும் பைக் ரேஸ் வைப்பது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளுக்கு முரண்பாடான செயல்பாடுகளுக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், ஒரு சில வாகன ஓட்டிகள் இதை ஒரு பொருட்டாகவே கண்டுக் கொள்ளாமல் விதிமீறலில் ஈடுபட்டனர்.

பல லட்சம் மதிப்புள்ள பைக்குகளை தேடிபிடித்து கைப்பற்றிய போலீஸார்... அட இதுதாதன் காரணமா...?

புத்தாண்டை எஞ்ஜாய் செய்வதற்காகவே இவ்வாறு செய்ததாக வாகன ஓட்டிகள் நியாயக் கதை கூறினாலும், அதிக பின்விளைவுகளை ஏற்படுத்த வழி வகுக்கும் என்பதே போலீஸார் குற்றம் சாட்டாக இருக்கின்றது. தொடர்ந்து, விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு எதிராகவும் புத்தாண்டு தினத்தில் அவர்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தனர்.

பல லட்சம் மதிப்புள்ள பைக்குகளை தேடிபிடித்து கைப்பற்றிய போலீஸார்... அட இதுதாதன் காரணமா...?

அந்தவகையில், அஹமதாபாத் போலீஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகுறித்த தகவல்களி தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக அவர்கள் பதிவிட்ட புகைப்படங்கள் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளன.

பல லட்சம் மதிப்புள்ள பைக்குகளை தேடிபிடித்து கைப்பற்றிய போலீஸார்... அட இதுதாதன் காரணமா...?

அஹமதாபாத் போலீஸார், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்த கையோடு, அதனை நடைமுறையில் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவ்வாறு, அவர்கள் பணியை மேற்கொண்டிருந்தபோது விதிமுறையை மீறிய வாகனங்களை பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொண்டனர்.

பல லட்சம் மதிப்புள்ள பைக்குகளை தேடிபிடித்து கைப்பற்றிய போலீஸார்... அட இதுதாதன் காரணமா...?

குறிப்பாக, விலையுயர்ந்த உயர் ரக வாகனங்களைப் பிடித்த போலீஸார் அவற்றை கையோடு பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். இதில், பைக் மட்டுமின்றி சில விலையுயர்ந்த கார்களும் சிக்கியுள்ளன.

பல லட்சம் மதிப்புள்ள பைக்குகளை தேடிபிடித்து கைப்பற்றிய போலீஸார்... அட இதுதாதன் காரணமா...?

இதற்கு, அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிகளவு சப்தத்தை வெளிப்படுத்தும் சைலென்சர்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான உதிரிபாகங்களே முக்கிய காரணமாக இருக்கின்றன. சந்தைக்கு பிறகான சைலென்சர்கள் அதிக ஒலியை எழுப்பக் கூடியவையாக இருக்கின்றன. அவை, சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி பாதசாரிகளுக்கும் பெரும் இடையூறாக அமைகின்றது.

பல லட்சம் மதிப்புள்ள பைக்குகளை தேடிபிடித்து கைப்பற்றிய போலீஸார்... அட இதுதாதன் காரணமா...?

ஆகையால், போக்குவரத்துத்துறை போலீஸாருக்கு இதுகுறித்து தொடர் புகார்களை பாதசாரிகள் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகின்றது. எனவே, இவற்றிற்கு எதிராக தீவிர கண்கானிப்பில் ஈடுபட்ட போலீஸார். ஜனவரி 1ம் தேதியன்று பெருவாரியான தடை செய்யப்பட்ட சைலென்சர்களைப் பொருத்திய பைக்குகளைப் பறிமுதல் செய்தனர்.

பல லட்சம் மதிப்புள்ள பைக்குகளை தேடிபிடித்து கைப்பற்றிய போலீஸார்... அட இதுதாதன் காரணமா...?

இந்தவகை சைலென்சர்கள் அதிக சத்தத்தை வெளிப்படுத்துவதுடன், திடீர் திடீரென நாட்டு வெடிகுண்டு வெடிப்பதைப் போன்ற ஒலியை வெளிப்படுத்தும். இது இதயம் பலவீனமானவர்கள், குழந்தைகள் மற்றும் பறவைகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும்.

ஆகையால், சந்தைக்கு பிறகான கருவிகளைப் பயன்படுத்த இந்திய மோட்டார் வாகன சட்டம் துளியளவும் அனுமதிப்பதில்லை.

பல லட்சம் மதிப்புள்ள பைக்குகளை தேடிபிடித்து கைப்பற்றிய போலீஸார்... அட இதுதாதன் காரணமா...?

தற்போது அஹமதாபாத்தில் பிடிபட்டுள்ள பல பைக்குகள் விலையுயர்ந்த பைக்குகளாகவே காட்சியளிக்கின்றன. அந்தவகையில், சுஸுகி ஹயபுசா, ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் பையர்பிளேட், கேடிஎம் மற்றும் ராயல் என்பீல்டு உள்ளிட்ட பைக்குகளே அதிகம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இத்துடன், மாடிஃபை செய்யப்பட்ட மஹிந்திரா தார் காரும் அடங்கும்.

பல லட்சம் மதிப்புள்ள பைக்குகளை தேடிபிடித்து கைப்பற்றிய போலீஸார்... அட இதுதாதன் காரணமா...?

ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர் பொருத்தியிருந்தது, பதிவெண் இல்லாமல் சுற்றித்திரிந்தது என விதிமுறை மீறல்கின்கீழ் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். இதுகுறித்த தகவலை அஹமதபாத் போலீஸார் டுவிட்டர் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பல லட்சம் மதிப்புள்ள பைக்குகளை தேடிபிடித்து கைப்பற்றிய போலீஸார்... அட இதுதாதன் காரணமா...?

பொதுவாக சந்தைக்குப்பிறகான அனைத்து எக்சாஸ்ட் கருவிகளும் மிக மிக அதிக ஒலியை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டவையாக காட்சியளிக்கின்றன. அதேசமயம், வெளிநாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படும் அதிக செயல்திறன் கொண்ட பைக்குகளில் அவை கம்பெனியின் மூலமாகவே வழங்கப்படுகின்றன. இவற்றையும் இந்தியாவின் பொதுசாலையில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல லட்சம் மதிப்புள்ள பைக்குகளை தேடிபிடித்து கைப்பற்றிய போலீஸார்... அட இதுதாதன் காரணமா...?

குறிப்பாக அவை ரேஸ் டிராக்கில் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில், இவை அரசாங்கம் நிர்ணயித்த மதிப்பை காட்டிலும் அதிக சத்தத்தை உருவாக்குகின்றன. இதனாலயே அஹமதாபாத் போலீஸார் இந்த சைலென்சர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையைத் தொடுத்துள்ளனர்.

பல லட்சம் மதிப்புள்ள பைக்குகளை தேடிபிடித்து கைப்பற்றிய போலீஸார்... அட இதுதாதன் காரணமா...?

இதுபோன்று, அதிக ஒலியை எழுப்பிய பைக்குகள் கைப்பற்றப்படுவது முதல் முறை அல்ல. முன்னதாக ராயல் என்பீல்டு பைக்குகளை மட்டுமே குறி வைத்து இதுபோன்ற வேட்டைகள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கான ராயல் என்பீல்டு பைக்குகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டதை நாம் நமது டிரைவ்ஸ் தமிழ் தளத்தில் பார்த்திருப்போம். ஆனால், சூப்பர் பைக்குகளுக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ahmedabad Police Seized High-End Motorcycles For Using Loud Exhausts. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X