மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான மிகப்பெரிய விமானம் ஒன்று மேம்பாலத்தின்கீழ் சிக்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

உலகின் ஆபத்து நிறைந்த சாலைகள் அதிகம் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்றாக இருக்கின்றது. மேலும், நாட்டில் அரங்கேறும் பெரும்பாலான விபத்துகளுக்கு அத்தகைய தரமற்ற சாலைகளே முக்கிய காரணமாக இருக்கின்றன.

இதன்காரணமாகவே, மத்திய அரசு அண்மைக் காலங்களாக புதிய சாலைகளைக் கட்டமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றது.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

அந்தவகையில், கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சாலை உட்கட்டமைப்பு நிறைய முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. அவ்வாறு, நாட்டின் பல முக்கிய சாலைகளில் மேம்பலாம் மற்றும் உயர்ந்த சாலைகள் என பல பரிணாம வளர்ச்சிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இருப்பினும், ஒரு சில பகுதிகளில் மிகப் பெரிய அளவிலான வாகனங்கள் நுழைய மிகவும் சிரமத்தைச் சந்திக்கின்றன.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

குறிப்பாக, மிகப்பெரிய எந்திரங்கள், கன்டெய்னர்கள், இரயில் எஞ்ஜின்கள், விமானம் மற்றும் ராக்கெட்டுகளின் பாகங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு வரும் வாகனங்கள் அதீத சிரமத்திற்கு உள்ளாகின்றன. இவைகள், மிக உயரமாகவும், அளவில் மிகப் பெரியதாக இருப்பதன் காரணத்தால் வளைவுகளில் திரும்ப முடியாமலும், மேம்பாலங்களின் கீழ் நுழைய முடியாமலும் சிக்கித் தவிக்கின்றன.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

இத்தகைய ஓர் சம்பவம்தான் தற்போது மேற்குவங்க மாநிலத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான துர்காபூர் அதிவேக நெடுஞ்சாலையில் அரங்கேறியுள்ளது.

பொதுவாக, உயரம் அதிகம் நிறைந்த கன்டெய்னர்கள் மற்றும் சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்கள் உயரம் குறைந்த மேம்பலாத்தின் ஊடாக நுழைந்து வரும்போது பெரும் சிரமத்திற்குள்ளாவதுடன், சில நேரங்களில் அதில் கொண்டு வரப்படும் சரக்கும் சேதமடைந்து விடுகின்றது. இதுமட்டுமின்றி, மேம்பாலத்தையும் லேசாக பதம் பார்த்துவிடுகின்றது அந்த வாகனம்.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

ஆனால், இத்தகைய சூழலைத் தவிர்ப்பதற்காக இங்கு வேறுவிதமான திறன் கையாளப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவை, வி6 நியூஸ் வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் கடைசியாக காணலாம்.

முன்னதாக, வீடியோ குறித்த தகவலை இங்கே பார்த்துவிடலாம். மேம்பாலத்தின் கீழ் சிக்கியிருக்கும் விமானமானது ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட இந்த விமானம் மறு சுழற்சி செய்வதற்காக வேறொரு இடத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

இந்தநிலையில்தான், இத்தகைய சூழலில் அந்த விமானம் சிக்கியது. இதனால், செய்வதறியாத தவித்த அந்த டிரக்கின் ஓட்டுநர், அதற்கான அதிகாரிகள் வரும் வரை வாகனத்தை நகர்த்த முடியாமல் காத்திருந்தார். இதனால், அந்த சாலையில் பல நேரங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மேம்பாலத்துடன் உராய்ந்தாவறு இருந்த விமானத்தை வெளியேற்றுவதற்காக சரக்கு லாரியின் அனைத்து வீல்களிலும் இருந்த டயரை நீக்க முடிவு செய்தனர். அதன்படியே, லாரியின் அனைத்து வீல்களில் இருந்தும் டயர்களில் காற்று வெளியேற்றப்பட்டு, டயர்கள் நீக்கப்பட்டன. தொடர்ந்து, மற்றுமொரு லாரியைக் கொண்டு விமானம் ஏற்றப்பட்டிருந்த டிரக் மிதமான வேகத்தில் நகர்த்தப்பட்டு வெளியேற்றப்பட்டது.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

பொதுவாக, இதுபோன்று பெரிய ரக வாகனங்கள் மேம்பாலத்தில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, பாலங்களின் முன்பாக இரும்பு கம்பிகள் நிறுவப்பட்டிருக்கும். இது, மேம்பாலத்தை சேதத்தில் காக்க உதவும். அதுமட்டுமின்றி, மேம்பாலத்திற்கு முன்னதாக இருக்கும் இரும்பு கம்பிகளைப் பார்க்கும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனம் அதில் நுழையுமா என்பதை பரிசோதித்துக் கொள்ளவும் உதவும்.

மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

இதனை பெரும்பாலான நெடுஞ்சாலை மேம்பலாத்தின் முன் நம்மால் காண முடிவதில்லை. ஆகையால், வாகன ஓட்டிகள் அதன் உயரத்தை கணக்கிடுவதில் சிரமம் கொள்கின்றனர். மேலும், சிக்கலிலும் சிக்கிவிடுகின்றனர்.

இதுபோன்ற காரணத்தினாலயே விமானத்தை ஏற்றி வந்த டிரக்கின் டிரைவர் இத்தகைய சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த சம்பவத்தில் லாரிக்கும், அதில் ஏற்றப்பட்டிருந்த விமானம் மற்றும் மேம்பாலத்திற்கு எத்தகைய சேதம் ஏற்பட்டது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Air India Scrappage Aircraft Gets Stuck Under A Bridge. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X