அசாதாரண சூழ்நிலையை அசால்டாக கையாண்ட விமானி.. இதற்காக நிர்வாகம் அளித்த பரிசு என்ன தெரியுமா..?

மிகப்பெரிய விமானம் சூரைக் காற்றில் சிக்கி தரையிறங்க முடியமால் தவிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இதில், விமானிகளின் முயற்சியை பலர் பாராட்டி வரும் வேலையில், நிர்வாகமே எதிர்வினையாக செயலாற்றியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அசாதாரணமான சூழ்நிலையை அசால்டாக கையாண்ட விமானி.. இதற்கு நிர்வாகம் அளித்த பரிசை பற்றி அறிந்தால் கோவப்படுவீங்க!

ஒரு சில நேரங்களில் இயற்கையின் அசாதாரணமான சூழ்நிலை மிகவும் சாதாரணமானவர்களைகூட மிகப்பெரிய ஹீரோக்களாக மாற்றிவிடுகின்றன. இதற்கு இணையத்தில் உலாவும் ஒரு சில வீடியோக்களே முக்கிய சான்றாக இருக்கின்றது.

அசாதாரணமான சூழ்நிலையை அசால்டாக கையாண்ட விமானி.. இதற்கு நிர்வாகம் அளித்த பரிசை பற்றி அறிந்தால் கோவப்படுவீங்க!

அந்தவகையிலான ஓர் வீடியோதான் தற்போது டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. குறிப்பிட்ட வீடியோவில், கடுமையான சூறைக் காற்றில் சிக்கிய விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்குவதற்கு முன்னர் அந்த விமானத்தின் விமானிகள் சந்தித்த இன்னல்களைப் பற்றி விளக்கும் வகையில் அந்த வீடியோ உள்ளது.

அசாதாரணமான சூழ்நிலையை அசால்டாக கையாண்ட விமானி.. இதற்கு நிர்வாகம் அளித்த பரிசை பற்றி அறிந்தால் கோவப்படுவீங்க!

லண்டனின் ஹெத்ரோவ் விமான நிலையத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. அந்த விமானம் எதிஹட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என கூறப்படுகின்றது. இது, உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றாக இருக்கும் ஏர்பஸ் ஏ380 வகையைச் சார்ந்ததாகும்.

அசாதாரணமான சூழ்நிலையை அசால்டாக கையாண்ட விமானி.. இதற்கு நிர்வாகம் அளித்த பரிசை பற்றி அறிந்தால் கோவப்படுவீங்க!

மேலே கூறியபடி, இந்த ஏர்பஸ் ஏ380 விமானத்தை விமானிகள் கடுமையான சூரைக்காற்றில் போராடி விமானத்தை தரையிறக்க முயற்சிக்கின்றனர். குறிப்பாக, விமானம் ஓடு தளத்தை நெருங்கியபோது காற்றின் வேகம் கடுமையானதால் விமானம் குறுக்காக தரையிறங்கியது.

அசாதாரணமான சூழ்நிலையை அசால்டாக கையாண்ட விமானி.. இதற்கு நிர்வாகம் அளித்த பரிசை பற்றி அறிந்தால் கோவப்படுவீங்க!

இந்த சூழ்நிலையில், விமானத்தை குறுக்காக தரையிறக்கினால் அது பேராபத்தை விளைவித்துவிடும் என்பதால் விமானிகள், அந்த விமானத்தை கடுமையாக முயற்சித்து நேராக திருப்பினர். இருப்பினும், காற்றின் தீவிரம் மிக அதிகமாக இருந்ததால் விமானம் மீண்டும் மீண்டும் குறுக்காகவே திரும்புகின்றது.

அசாதாரணமான சூழ்நிலையை அசால்டாக கையாண்ட விமானி.. இதற்கு நிர்வாகம் அளித்த பரிசை பற்றி அறிந்தால் கோவப்படுவீங்க!

இந்த ஒட்டுமொத்த போராட்டமும் ஹெத்ரோவ் விமான நிலையத்தில் பொருத்தியிருந்த கேமிராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவத்தில் விமானிகளின் சாதூர்யமான செயல்பாட்டை பாராட்டி மக்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

அசாதாரணமான சூழ்நிலையை அசால்டாக கையாண்ட விமானி.. இதற்கு நிர்வாகம் அளித்த பரிசை பற்றி அறிந்தால் கோவப்படுவீங்க!

ஆனால், இந்த விவகாரத்தில் விமான நிறுவனமோ எதிர்வினையில் செயல்பட்டுள்ளது. அந்த விமானிகளுக்கு விமான போக்குவரத்து நிறுவனம் மெமோ ஒன்றை வழங்கியுள்ளது.

அந்த மெமோவில் சூறைக் காற்றின் போது விமானியின் முயற்சிகள் போதுமானதாக இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அசாதாரணமான சூழ்நிலையை அசால்டாக கையாண்ட விமானி.. இதற்கு நிர்வாகம் அளித்த பரிசை பற்றி அறிந்தால் கோவப்படுவீங்க!

ஆனால் அந்த வீடியோவில், சூறைக் காற்றுக்கு எதிரான விமானிகளின் கடும் போராட்டம் தெளிவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதில் முழுமையான திருப்தியில்லாதவாறே அது கருத்து தெரிவித்துள்ளது. ஆனால், விமானிகளின் தீவிர முயற்சியை பாராட்டும் விதமாக இணைய வாசிகள் பலர் தங்களின் பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர்.

ஆனால் விமான போக்குவரத்து நிர்வாகமோ அந்த விமானியை தூற்றும் விதமாக மெமோ அனுப்பி வைத்துள்ளது. அதில், "கடந்த வாரத்தில் எங்கள் ஏ380 விமானம் மிக மோசமான சூரைக் காற்றில் சிக்கி தரையிறங்க போராடுவதை நீங்கள் அனைவரும் கண்டிருப்பீர்கள். ஆனால், எங்களின் பயிற்சித்துறையின் பார்வைக்கு இது மிவும் சாதாரணமான ஒன்றே. நாங்கள் இதை பார்க்க விரும்பவில்லை. இதையும் தாண்டி அதிகமாக விமானிகளிடத்தில் எதிர்பார்க்கின்றோம்" என தெரிவித்திருந்தது.

அசாதாரணமான சூழ்நிலையை அசால்டாக கையாண்ட விமானி.. இதற்கு நிர்வாகம் அளித்த பரிசை பற்றி அறிந்தால் கோவப்படுவீங்க!

அதாவது, அந்த கடுமையான சூரைக் காற்றிலும் மிகவும் சுலபலமாக அந்த விமானத்தை விமானிகள் தரையிறக்கியிருக்க வேண்டும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கின்றது.

ஆனால், இதுபோன்ற சமயங்களில் பல விமானங்கள் தரையிறங்க முடியாமல் மீண்டும் வானுக்கே சென்றிருப்பதை நாம் இதற்கு முன்பாக கண்டிருப்போம்.

அசாதாரணமான சூழ்நிலையை அசால்டாக கையாண்ட விமானி.. இதற்கு நிர்வாகம் அளித்த பரிசை பற்றி அறிந்தால் கோவப்படுவீங்க!

பொதுவாக, இதுபோல சூரைக் காற்றில் விமானங்களை தரையிறக்குவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அது மிகவும் ஆபத்தான ஒன்று. அதிலும், மிகப்பெரிய விமானம் என்றால் சற்று கூடுதல் சிக்கல்தான். கடந்த காலங்களில் இதுபோன்ற காரணத்தால் விமானம் தரையிறங்க வேண்டிய இடத்தை தாண்டிச் சென்று தரையிறங்கி விபத்தைச் சந்தித்த சம்பவங்கள்கூட அரங்கேறியிருக்கின்றன.

Source: Paddleyourownkanoo

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Airbus A380 Pulling Off An Extraordinary Landing At Heathrow Airport Video. Read In Tamil.
Story first published: Thursday, February 20, 2020, 16:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X