இத கேள்விபட்டிருக்க மாட்டீங்க... வானில் பறக்கும் விமானங்களிலும் ஹாரன் இருக்கும்... எதற்காக தெரியுமா?

வானில் பறக்கும் விமானங்களிலும் கார், பைக் போன்று ஹாரன்கள் இருக்கும். அது எதற்காக? என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இத கேள்விபட்டிருக்க மாட்டீங்க... வானில் பறக்கும் விமானங்களிலும் ஹாரன் இருக்கும்... எதற்காக தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த வாகன ஓட்டிகளிடம் ஏகப்பட்ட கெட்ட பழக்கங்கள் இருக்கின்றன. தேவையே இல்லாமல் ஹாரனை ஒலிப்பது அதில் ஒன்று. சாலையில் செல்லும்போது, மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை எச்சரிக்கை செய்வதற்காகவே ஹாரன்கள் கண்டறியப்பட்டன. ஆனால் இந்திய வாகன ஓட்டிகள் அதன் பயன்பாட்டை அப்படியே மறந்து விட்டனர்.

இத கேள்விபட்டிருக்க மாட்டீங்க... வானில் பறக்கும் விமானங்களிலும் ஹாரன் இருக்கும்... எதற்காக தெரியுமா?

அனாவசியமான நேரங்களில் ஹாரன்களை ஒலிக்கும் பழக்கம் பெரும்பாலான வாகன ஓட்டிகளிடம் உள்ளது. இதனால் எழும் சத்தம் மற்ற வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் எரிச்சலையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. ஹாரன் சத்தத்தால் ஏற்படும் எரிச்சல் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு இடையே வாக்குவாதம், தகராறு போன்றவை நடப்பதும் இந்திய சாலைகளில் வாடிக்கையாகி விட்டது.

இத கேள்விபட்டிருக்க மாட்டீங்க... வானில் பறக்கும் விமானங்களிலும் ஹாரன் இருக்கும்... எதற்காக தெரியுமா?

இன்றைய தேதியில் டூவீலர், கார், பஸ் மற்றும் லாரி என அனைத்து வகையான வாகனங்களிலும் ஹாரன்கள் இருக்கின்றன. ரயிலிலும் கூட ஹாரன்கள் உள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் தரையில் பயணிப்பவை. எனவே ஹாரன்கள் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் ஆகாய மார்க்கமாக பறக்கும் விமானங்களிலும் கூட ஹாரன்கள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

இத கேள்விபட்டிருக்க மாட்டீங்க... வானில் பறக்கும் விமானங்களிலும் ஹாரன் இருக்கும்... எதற்காக தெரியுமா?

விமானங்களில் ஹாரன்கள் இருக்குமா? இருக்காதா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. விமானங்களில் நிச்சயமாக ஹாரன்கள் இருக்கும். ஆனால் வானில் பறந்து கொண்டிருக்கும்போது பறவைகளை எச்சரிக்கை செய்வதற்காகவோ அல்லது மற்ற விமானங்களை எச்சரிக்கை செய்வதற்காகவோ அவை பயன்படுத்தப்படுவதில்லை.

இத கேள்விபட்டிருக்க மாட்டீங்க... வானில் பறக்கும் விமானங்களிலும் ஹாரன் இருக்கும்... எதற்காக தெரியுமா?

'கம்யூனிகேஷன்' பணிகளுக்காக மட்டுமே விமான ஹாரன்கள் பயன்படுத்தப்படுகின்றன. விமானங்களில் உள்ள சமிக்ஞை அல்லது எச்சரிக்கை அமைப்பை, சாதாரண வாகனங்களில் இருக்கும் ஹாரன்களுடன் ஒப்பிடலாம். அதாவது விமானங்கள் வானில் பறப்பதற்கு முன்னதாக பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.

இத கேள்விபட்டிருக்க மாட்டீங்க... வானில் பறக்கும் விமானங்களிலும் ஹாரன் இருக்கும்... எதற்காக தெரியுமா?

இதன் ஒரு பகுதியாக விமானத்தின் காக்பிட்டில், க்ரவுண்ட் இன்ஜினியர்கள் வேலை செய்வார்கள். அப்போது தரையில் இருக்கும் சக ஊழியர்களை சிக்னல் மூலமாக அவர்களால் தொடர்பு கொள்ள முடியும். இதைதான் விமானத்தின் ஹாரன் என குறிப்பிடுகின்றனர். விமானங்களின் காக்பிட்டில் உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் பேனலில் சிறிய பட்டன் ஒன்று வழங்கப்பட்டிருக்கும்.

இத கேள்விபட்டிருக்க மாட்டீங்க... வானில் பறக்கும் விமானங்களிலும் ஹாரன் இருக்கும்... எதற்காக தெரியுமா?

இதில், "Ground" அல்லது "GND" என குறிப்பிடப்பட்டிருக்கும். இதை அழுத்தினால், ஹாரனை போன்று ஒலி எழுப்பும். இதன் மூலமாக தரையில் உள்ள சக ஊழியர்களை காக்பிட்டில் உள்ள க்ரவுண்ட் இன்ஜினியர்கள் தொடர்பு கொள்ளலாம். அதே நேரம் சில சமயங்களில் தரையில் உள்ள இன்ஜினியர்கள், காக்பிட்டில் உள்ள சக பணியாளர்களை தொடர்பு கொள்ள விரும்புவார்கள்.

இத கேள்விபட்டிருக்க மாட்டீங்க... வானில் பறக்கும் விமானங்களிலும் ஹாரன் இருக்கும்... எதற்காக தெரியுமா?

விமானத்தின் முன் பகுதியில் நோஸ் வீலுக்கு (Nose Wheel) அருகே உள்ள ஒரு சிறிய காம்பார்ட்மெண்ட்டில் இருக்கும் பட்டன் மூலமாக அவர்களால் இதனை செய்ய முடியும். இந்த காம்பார்ட்மெண்ட்டில் ஹெட்செட்டை செருகுவதன் மூலமாக, காக்பிட் உடன் அவர்களால் நேரடியாக கம்யூனிகேட் செய்ய முடியும். எனவே விமானங்களின் ஹாரன் என்பது பெரும்பாலும் கம்யூனிகேஷனுக்காகவே பயன்படுகிறது.

இத கேள்விபட்டிருக்க மாட்டீங்க... வானில் பறக்கும் விமானங்களிலும் ஹாரன் இருக்கும்... எதற்காக தெரியுமா?

விமானங்களின் ஹாரன்கள் தொடர்பான உங்கள் சந்தேகங்கள் நிவர்த்தியாகி இருக்கும் என நம்புகிறோம். எனவே விமானங்களில் ஹாரன்கள் இருக்கிறதா? இல்லையா? என உங்களிடம் இனிமேல் யாராவது கேட்டால், கண்டிப்பாக இருக்கும் என்றே பதில் சொல்லுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Does Airplane Have Horn?. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X