கூட்டம் குமியிது... வாழ்க்கைல ஒரு தடவையாச்சும் இந்த ஹோட்டல்ல சாப்பிடணும்... காரணம் தெரிஞ்சா உடனே கௌம்பீரூவீங்க

'வாழ்க்கையில் ஒரு முறையாவது சாப்பிட்டு விட வேண்டும்' என்ற ஆசையை தூண்டும் ரெஸ்டாரெண்ட் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கூட்டம் குமியிது... வாழ்க்கைல ஒரு தடவையாச்சும் இந்த ஹோட்டல்ல சாப்பிடணும்... காரணம் தெரிஞ்சா உடனே கௌம்பீரூவீங்க

வாழ்க்கையில் ஒரு முறையாவது விமானத்தில் பறந்து விட வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் உள்ளது. குறைந்தபட்சம் விமானத்திற்குள் ஒரு முறையாவது சென்று வந்து விட வேண்டும் எனவும் பலர் ஆசைப்பட்டு கொண்டுள்ளனர். அப்படி இருக்கும்போது ஹோட்டலை போன்று, விமானத்தில் ஹாயாக அமர்ந்து சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தால் உற்சாகமாக இருக்கும் அல்லவா?

கூட்டம் குமியிது... வாழ்க்கைல ஒரு தடவையாச்சும் இந்த ஹோட்டல்ல சாப்பிடணும்... காரணம் தெரிஞ்சா உடனே கௌம்பீரூவீங்க

குஜராத் மாநிலம் வதோதரா (Vadodara) மக்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. ஆம், அங்கு விமானத்தை ரெஸ்டாரெண்ட்டாக மாற்றியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் ஏரோப்ளேன் ரெஸ்டாரெண்ட் திறக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த ஏரோப்ளேன் ரெஸ்டாரெண்ட் கடந்த அக்டோபர் 25ம் தேதி திறக்கப்பட்டுள்ளது.

கூட்டம் குமியிது... வாழ்க்கைல ஒரு தடவையாச்சும் இந்த ஹோட்டல்ல சாப்பிடணும்... காரணம் தெரிஞ்சா உடனே கௌம்பீரூவீங்க

வதோதரா நகரின் டர்சாலி பைபாஸ் பகுதியில் இந்த ஏரோப்ளேன் ரெஸ்டாரெண்ட் அமைந்துள்ளது. இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் இதற்கு முன்பு நிறைய ஏரோப்ளேன் ரெஸ்டாரெண்ட்கள் திறக்கப்பட்டுள்ளன. உலக அளவில் பார்த்தால் குஜராத்தில் தற்போது திறக்கப்பட்டிருப்பது 9வது ஏரோப்ளேன் ரெஸ்டாரெண்ட் ஆகும்.

கூட்டம் குமியிது... வாழ்க்கைல ஒரு தடவையாச்சும் இந்த ஹோட்டல்ல சாப்பிடணும்... காரணம் தெரிஞ்சா உடனே கௌம்பீரூவீங்க

இந்திய அளவில் பார்த்தால் இது 4வது ஏரோப்ளேன் ரெஸ்டாரெண்ட் ஆகும். இதன் மூலம் விமானத்தை அதிகளவில் ரெஸ்டாரெண்ட்டாக மாற்றிய நாடுகளில் ஒன்று என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. இங்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணவு சாப்பிடுபவர்களுக்கு நிச்சயமாக வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் என்பது உறுதி.

கூட்டம் குமியிது... வாழ்க்கைல ஒரு தடவையாச்சும் இந்த ஹோட்டல்ல சாப்பிடணும்... காரணம் தெரிஞ்சா உடனே கௌம்பீரூவீங்க

இந்த ரெஸ்டாரெண்ட்டை அமைப்பதற்காக பெங்களூர் நகரை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து ஏர்பஸ் 320 (Airbus 320) விமானம் ஒன்று வாங்கப்பட்டது. 1.40 கோடி ரூபாய் என்ற விலைக்கு இந்த விமானம் வாங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தின் ஒவ்வொரு பாகமும் வதோதரா நகருக்கு கொண்டு வரப்பட்டு, ரெஸ்டாரெண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

கூட்டம் குமியிது... வாழ்க்கைல ஒரு தடவையாச்சும் இந்த ஹோட்டல்ல சாப்பிடணும்... காரணம் தெரிஞ்சா உடனே கௌம்பீரூவீங்க

இந்த ஏரோப்ளேன் ரெஸ்டாரெண்ட்டை உருவாக்குவதற்கு ஒட்டுமொத்தமாக சுமார் 2 கோடி ரூபாய் செலவு ஆனதாக கூறப்படுகிறது. இந்த ஏரோப்ளேன் ரெஸ்டாரெண்ட்டில் மொத்தம் 102 பேர் அமர்ந்து உணவு உண்ண முடியும். இங்கு வருபவர்களுக்கு உண்மையான விமானத்தில் கிடைக்கும் அனுபவங்கள் நிச்சயமாக கிடைக்கும்.

கூட்டம் குமியிது... வாழ்க்கைல ஒரு தடவையாச்சும் இந்த ஹோட்டல்ல சாப்பிடணும்... காரணம் தெரிஞ்சா உடனே கௌம்பீரூவீங்க

ஏனெனில் இந்த ரெஸ்டாரெண்ட்டின் சர்வர்கள் மற்றும் ஊழியர்கள், விமானங்களில் பணியாற்றுபவர்களை போலவே உடையணிந்துள்ளனர். மேலும் உண்மையாகவே பறக்கும் விமானங்களில் செய்யப்படுவதை போன்று தொடர்ச்சியான அறிவிப்புகளும், இந்த ஏரோப்ளேன் ரெஸ்டாரெண்ட்டில் செய்யப்படுகின்றன. எனவே உண்மையான விமான அனுபவம் கிடைக்கும் என்பது உறுதி.

கூட்டம் குமியிது... வாழ்க்கைல ஒரு தடவையாச்சும் இந்த ஹோட்டல்ல சாப்பிடணும்... காரணம் தெரிஞ்சா உடனே கௌம்பீரூவீங்க

இதெல்லாம் ஓகே... என்னென்ன வகையான உணவுகள் இந்த ஏரோப்ளேன் ரெஸ்டாரெண்ட்டில் கிடைக்கும்? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். நீங்கள் ரசித்து ருசித்து சாப்பிடுவதற்காக இங்கு வகை வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. பஞ்சாபி, சைனீஸ், இத்தாலியன், மெக்ஸிகன் மற்றும் தாய் வகை உணவுகளை நீங்கள் இங்கே ரசித்து ருசித்து சாப்பிடலாம்.

கூட்டம் குமியிது... வாழ்க்கைல ஒரு தடவையாச்சும் இந்த ஹோட்டல்ல சாப்பிடணும்... காரணம் தெரிஞ்சா உடனே கௌம்பீரூவீங்க

தற்போது வதோதரா நகரை சேர்ந்த பலர் இந்த ஏரோப்ளேன் ரெஸ்டாரெண்டிற்கு படையெடுத்து வருவதாக கூறப்படுகிறது. வதோதரா மட்டுமின்றி, குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் இந்த ஏரோப்ளேன் ரெஸ்டாரெண்ட்டில் சாப்பிட விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் என்பதுதான் இதற்கு காரணம்.

கூட்டம் குமியிது... வாழ்க்கைல ஒரு தடவையாச்சும் இந்த ஹோட்டல்ல சாப்பிடணும்... காரணம் தெரிஞ்சா உடனே கௌம்பீரூவீங்க

உலகின் தலைசிறந்த விமான நிறுவனங்களில் போயிங் மற்றும் ஏர்பஸ் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. இதில் ஏர்பஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற ஒரு விமானத்தை ரெஸ்டாரெண்ட்டாக மாற்றியுள்ளதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு முறையாவது இந்த ஏரோப்ளேன் ரெஸ்டாரெண்ட்டிற்கு சென்று விட வேண்டும் என சமூக வலை தளங்களில் பலர் தெரிவித்து வருகின்றனர்.

கூட்டம் குமியிது... வாழ்க்கைல ஒரு தடவையாச்சும் இந்த ஹோட்டல்ல சாப்பிடணும்... காரணம் தெரிஞ்சா உடனே கௌம்பீரூவீங்க

கொரோனா வைரஸ் பரவலுக்கு பின் இந்தியாவின் மற்ற பல்வேறு துறைகளை போலவே ஹோட்டல் துறையும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. பலர் ஹோட்டல்களை மூடி விட்டு வேறு தொழிலுக்கு மாறியுள்ளனர். அப்படி இருக்கும்போது இந்த ஏரோப்ளேன் ரெஸ்டாரெண்ட்டின் உரிமையாளர் வித்தியாசமான ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Airplane restaurant opened in gujarat here are all the details
Story first published: Thursday, October 28, 2021, 13:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X