கொரோனா எதிரொலி: விமானங்களில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றம்.. இனி எந்த நோயும் நாடுவிட்டு நாடு பரவாது!

இனி எந்தவொரு தொற்று வியாதியும் நாடுவிட்டு நாடு பரவாமல் இருக்கும் விதமாக புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கு தனியார் நிறுவனம் ஒன்று காப்புரிமை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா எதிரொலி: விமானங்களில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றங்கள்.. இனி எந்த நோயும் நாடுவிட்டு நாடு பரவாது..

ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது ஒற்றை உயிர் கொல்லி வைரஸ் கொரோனா. இந்த வைரஸ் ஆரம்பத்தில் சீனாவின் வுஹான் நகரத்தில் மட்டுமே காணப்பட்டது. ஆனால், தற்போது உலகம் முழுவதிலும் பரவி காணப்படுகின்றது. முன்பெல்லாம், ஒரு வைரஸ் தொற்று குறிப்பிட்ட பகுதியில் கண்டறியப்பட்டால், அது அந்த சமூகத்தில் மட்டுமே பரவி காணப்படும்.

கொரோனா எதிரொலி: விமானங்களில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றங்கள்.. இனி எந்த நோயும் நாடுவிட்டு நாடு பரவாது..

ஆனால், உலகளவில் பரந்து விரிந்து காணப்படும் வணிகம், அதிநவீனத்துவம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் சர்வசாதரணமாக வெளிநாடுகளுக்கு சென்று வர ஆரம்பித்துள்ளனர். இதனால், குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் வைரஸ் உலக நாடுகளுக்கும் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வழியிலேயே உயிர் கொல்லி வரைஸ் கொரோனாவும் உலக நாடுகள் அனைத்திற்கும் பரவியிருக்கின்றது.

MOST READ: கவாஸாகியின் முதல் எலெக்ட்ரிக் பைக்கின் பெயர், வீடியோக்கள் வெளியீடு

கொரோனா எதிரொலி: விமானங்களில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றங்கள்.. இனி எந்த நோயும் நாடுவிட்டு நாடு பரவாது..

இதற்கு விமான போக்குவரத்தே மிக முக்கியமான காரணம் ஆகும். கொரோனா வைரஸ் தொற்றை உலக நாடுகள் முழுவதிற்கும் பரப்பியதில் இதன் பங்கே தலையோங்கி இருக்கின்றது. விமானத்தின் மூலம் அந்தந்த நாடுகளுக்கு திரும்பியவர்களின் மூலமாகவே இத்தகைய ஆபத்தான நிலை உலக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை உருவாக்கிய விமான போக்குவரத்தின் பாதுகாப்பு வழிமுறைகள் எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படலாம் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

கொரோனா எதிரொலி: விமானங்களில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றங்கள்.. இனி எந்த நோயும் நாடுவிட்டு நாடு பரவாது..

இந்நிலையில், இத்தாலியைச் சேர்ந்த அவியோ இன்டீரியர்ஸ் என்ற நிறுவனம் இதற்கான காப்புரிமையை ஏற்கனவே பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விமானத்தில் பயணிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உள்கட்டமைப்பை கண்ணாடிகளால் மாற்றியமைப்பதற்கான உரிமம்தான் அது. இந்த கட்டமைப்பு விமானத்தில் அமர்ந்திருப்போரின் சமூக இடைவெளியை உறுதிச் செய்ய உதவும்.

MOST READ: திணறிய ஸ்கார்பியோ.. அசால்ட் செய்த டாடா டியோகா.. டாடா, டாடாதான்யா.. இத அடிச்சிக்க ஆளே இல்லை...!

கொரோனா எதிரொலி: விமானங்களில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றங்கள்.. இனி எந்த நோயும் நாடுவிட்டு நாடு பரவாது..

அதாவது, சக பயணிக்கு அருகில் இருக்கும் மற்றொரு பயணிக்கு எந்தவொரு வியாதி தொற்று இருந்தாலும், அவரால் அது மற்றொருவருக்கு பரவாத வகையில் மறைப்பு கண்ணாடிகள் உருவாக்குவதற்கான காப்புரிமையைதான் அவியோ இன்டீரியர்ஸ் பெற்றிருக்கின்றது.

கொரோனா எதிரொலி: விமானங்களில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றங்கள்.. இனி எந்த நோயும் நாடுவிட்டு நாடு பரவாது..

இம்மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளும் விதமாக வாகன போக்குவரத்து நிறுவனங்கள் சில, மைய இருக்கையை காலியாக விட்டுவிட்டு மற்ற இரு முனை இருக்கைகளில் மட்டும் பயணிகளை அமர அனுமதித்து வருகின்றன.

ஆனால், இது எந்தளவிற்கு பயனளிக்கும் என தெரியிவில்லை. அதேசமயம், அவியோ இன்டீரியர்ஸ் நிறுவனத்தின் புதுவிதமான பாதுகாப்பு முயற்சி நல்ல பலனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

MOST READ: ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் மாடலின் புதிய சேலன்ஞ் வெர்சன் விற்பனைக்கு வருகிறது..!

கொரோனா எதிரொலி: விமானங்களில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றங்கள்.. இனி எந்த நோயும் நாடுவிட்டு நாடு பரவாது..

இதற்காக அவியோ இன்டீரியர்ஸ் நிறுவனம் கண்ணாடி திரைகளைப் பயன்படுத்த இருக்கின்றது. இது இரு பயணிகளுக்கும் இடையே இருக்கும் நேரடி தொடர்பை தடுத்து முகத்தை மறைக்க உதவும். குறிப்பாக வைரஸ் மற்றும் பாக்டீரிய தொற்றுகளில் இருந்து காப்பாற்றும்.

இந்த புதிய அமைப்புகுறித்த தகவலை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆகையால், இனி வரும்காலங்களில் விமானங்களில் இதுமாதிரியான பாதுகாப்பு வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொரோனா எதிரொலி: விமானங்களில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றங்கள்.. இனி எந்த நோயும் நாடுவிட்டு நாடு பரவாது..

இந்த அம்சத்தைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் அந்நிறுவனம், அது பயணிகளுக்கு எந்தவொரு இடையூறையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் அதிகம் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக, வியாதி தொற்றை தவிர்க்கும் நோக்கில் மட்டுமே பெட்டி வடிவிலான கண்ணாடிகளை அது விமானங்களில் புகுத்த இருக்கின்றது. இது வைரஸ் தொற்றை தவிர்க்குமே தவிர கண் தொடர்பை தடுக்காது.

MOST READ: இணையத்தில் லீக்கான 2020 ஹோண்டா சிட்டி மாடலின் உட்புற புகைப்படங்கள்...

கொரோனா எதிரொலி: விமானங்களில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றங்கள்.. இனி எந்த நோயும் நாடுவிட்டு நாடு பரவாது..

மேலும், எந்தவொரு நெருக்கமான உணர்வையும் ஏற்படுத்தாத வாகையில் இருக்கையின் மேற் மற்றும் பக்கவாட்டு பகுதிகளை மூடியவாறு அந்த கண்ணாடி பெட்டிகள் நிறுவப்பட இருக்கின்றன.

இதுமட்டுமின்றி, தனிப்பட்ட விமானத் தேவைகளுக்கு ஏற்ப, பல்வேறு அளவில் இந்த பாதுகாப்பு அமைப்பை தயாரிக்க அவியோ இன்டீரியர்ஸ் திட்டமிட்டு வருகின்றது. தொடர்ந்து, ஒளி புகும் மற்றும் ஒளி புகா ஆகிய ரகத்திலும் இந்த கண்ணாடி பெட்டகங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொரோனா எதிரொலி: விமானங்களில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றங்கள்.. இனி எந்த நோயும் நாடுவிட்டு நாடு பரவாது..

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை ​​அவியோ இன்டீரியர்ஸ் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், இதன் தயாரிப்பிற்கான காப்புரிமையையும் அது ஏற்கனவே பெற்றுள்ளது. தொடர்ந்து, அது உற்பத்திக்கு செல்ல தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.

கொரோனா எதிரொலி: விமானங்களில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றங்கள்.. இனி எந்த நோயும் நாடுவிட்டு நாடு பரவாது..

தற்போது உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நிலவுவதால் அனைத்து விமான போக்குவரத்து சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் இயக்கம் இந்தியாவில் வருகின்ற 3ம் தேதிக்கு பின்னரே தெரியும். ஆனால், அதற்கு முன்பாக விமான நிறுவனங்கள் அனைத்தும் அவியோ நிறுவனத்தைப் போல் பாதுகாப்பு அம்சங்களைக் கூட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

கொரோனா எதிரொலி: விமானங்களில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றங்கள்.. இனி எந்த நோயும் நாடுவிட்டு நாடு பரவாது..

இதனடிப்படையில், புதிய விதிகளை அவை தனித்துவமாக உருவாக்கி வருகின்றன. குறிப்பாக, பாதுகாப்பு கவசங்களை அணிந்தவாறு பயணித்தல், வெளிப்படையாக இரும்புவது மற்றும் தும்புவதைத் தவிர்க்க அறிவுறுத்துதல் உள்ளிட்டவற்றை அவை மேற்கொம்டு வருகின்றன. தொடர்ந்து விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக சிறிய பரிசோதனை உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ள விமான நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

Image Courtesy: Aviointeriors

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Airplane Seats Will Get Protective Glass Shield Soon. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X