விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு சிலர் அதிகமா தண்ணி குடிப்பாங்க! இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு சிலர் ஏன் மிகவும் அதிகமாக தண்ணீர் குடிக்கிறார்கள்? என்பதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு சிலர் அதிகமா தண்ணி குடிப்பாங்க! இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

விமானங்களில் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். கார் போன்ற மற்ற வாகனங்களில் பயணம் செய்வதை காட்டிலும் விமானங்களில் பயணம் செய்யும்போது பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. பயண நேரம் மிகவும் குறைவு என்பது மிக முக்கியமான நன்மை ஆகும். ஆனால் விமான பயணத்தில் ஒரு சில பிரச்னைகளும் இருக்கவே செய்கின்றன.

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு சிலர் அதிகமா தண்ணி குடிப்பாங்க! இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

விமான பயணத்தின்போது பயணிகளின் உடல் நிலை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது மிகவும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று. விமான உடற்பகுதியின் மூடப்பட்ட பண்பு, பரவக்கூடிய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பயணிகள் விமானத்தில் இருந்தால், மற்றவர்களுக்கும் தொற்றலாம்.

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு சிலர் அதிகமா தண்ணி குடிப்பாங்க! இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

எனினும் விமானத்தில் பயணம் செய்யும்போது உடல் நிலையை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கு பல்வேறு டிப்ஸ்கள் உள்ளன. அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் கூறியுள்ளோம். விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு இந்த தகவல்கள் பயன் அளிக்கும் என நம்புகிறோம். சரி, வாருங்கள். செய்திக்குள் செல்லலாம்.

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு சிலர் அதிகமா தண்ணி குடிப்பாங்க! இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

விமானத்தில் ஏறுவதற்கு முன்பும், விமான பயணத்தின்போதும் ஒரு சிலர் நிறைய தண்ணீர் குடிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். நீங்களும் அதற்கு உங்களை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். ஏனெனில் உலக சுகாதார நிறுவனத்தின் World Health Organization (WHO) கூற்றுப்படி, விமான கேபினின் சராசரி ஈரப்பதம் வெறும் 20 சதவீதம் மட்டுமே. எனவே விமானங்களின் கேபின் வறண்டதாக இருக்கும்.

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு சிலர் அதிகமா தண்ணி குடிப்பாங்க! இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

வறண்ட காற்றை எதிர்கொள்ளும்போது, நம் மூக்கு துவாரங்களில் இருக்கும் 'மியூகஸ் மெம்பரன்ஸ்' (Mucus Membranes) வறண்டு விடும். இதன் காரணமாக கிருமிகளால் ஏற்படும் நோய் தொற்றுகளுக்கு நாம் மிக எளிதாக ஆளாகி விடுவோம். ஆனால் அதிக தண்ணீர் குடிப்பதன் மூலமாக இந்த பிரச்னைகளை நீங்கள் எதிர்கொள்ளலாம்.

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு சிலர் அதிகமா தண்ணி குடிப்பாங்க! இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

ஏனெனில் அதிக தண்ணீர் குடிப்பது என்பது உங்கள் உடலை 'ஹைட்ரேட்' (Hydrate) செய்யும். அத்துடன் இது உங்கள் மேல் சுவாச மண்டலத்திற்கும் (Upper Respiratory System) நல்லது. எனவே விமானத்தில் பயணம் செய்வதற்கும் முன்பும், விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போதும் தண்ணீரை அதிகமாக குடியுங்கள்.

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு சிலர் அதிகமா தண்ணி குடிப்பாங்க! இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

இங்கே மற்றொரு விஷயத்தையும் தெளிவுபடுத்தி விடுகிறோம். இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள 'மியூகஸ் மெம்பரன்ஸ்' என்பது உடலின் உட்புற பாகங்களை பாதுகாக்க கூடியதாகும். தோல் எப்படி நமது உடலின் வெளிப்புறத்தை பாதுகாக்கிறதோ, அதுபோல் 'மியூகஸ் மெம்பரன்ஸ்' நம் உடலின் உட்புற பாகங்களை பாதுகாத்து வருகிறது.

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு சிலர் அதிகமா தண்ணி குடிப்பாங்க! இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

அதேபோல் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது, ஐஸில் இருக்கையை (Aisle Seat) தேர்வு செய்வதற்கு பதிலாக ஜன்னல் இருக்கையை (Window Seat) தேர்வு செய்வதன் மூலமும் உடல் நல பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். ஜன்னல் இருக்கையில் அமர்பவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு சிலர் அதிகமா தண்ணி குடிப்பாங்க! இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

ஐஸில் இருக்கையை காட்டிலும் ஜன்னல் இருக்கையில் அமர்ந்தால் எப்படி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்? என்ற சந்தேகம் உங்கள் மனதில் எழுவது புரிகிறது. ஐஸில் இருக்கையில் அமர்ந்தால், மற்ற பயணிகள் உடனான தொடர்பு அதிகரிக்கும். இதன் காரணமாக பரவக்கூடிய நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்து விடும்.

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு சிலர் அதிகமா தண்ணி குடிப்பாங்க! இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

எனவேதான் ஜன்னல் இருக்கையில் அமர்வது பாதுகாப்பானது என ஆய்வுகள் சொல்கின்றன. அதேபோன்று விமான பயணத்திற்கு முன்பு நன்றாக தூங்குவதும் அவசியம். தொழில் ரீதியாக பயணம் செய்தாலும் சரி அல்லது சுற்றுலாவிற்காக பயணம் செய்தாலும் சரி, விமான பயணங்கள் உடல் சோர்வை ஏற்படுத்த கூடியவை.

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு சிலர் அதிகமா தண்ணி குடிப்பாங்க! இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

அப்படி இருக்கும்போது, விமான பயணத்திற்கு முன்பாக பலரும் தூங்குவதில்லை. தேவையானவற்றை 'பேக்' செய்வது போன்றவற்றை கடைசி நேரத்தில் அவசர அவசரமாக செய்கின்றனர். இதில் என்ன பிரச்னை? என நீங்கள் நினைக்கலாம். போதிய தூக்கம் இல்லாவிட்டால், உடல் நலன் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு சிலர் அதிகமா தண்ணி குடிப்பாங்க! இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

சரியாக தூங்காவிட்டால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் பிரச்னைகள் ஏற்படலாம். இதனால் விமான பயணத்தின்போது நோய் ஏற்படுத்த கூடிய நுண்ணுயிரிகளை, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக எதிர்த்து போராடாது. அதாவது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்திறன் குறையும். எனவே மிக எளிதாக நோய் தொற்று ஏற்படலாம். எனவேதான் விமான பயணத்திற்கு முன்பாக போதுமான தூக்கம் அவசியமாகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Airplane travel health tips
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X