ஒரு சில சமயங்களில் மட்டும்தான் தரிசனம் கிடைக்கும்! விமானங்களின் றெக்கைகளில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

விமானங்களின் இறக்கைகளில் மறைந்துள்ள ஒரு ரகசியம் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு சில சமயங்களில் மட்டும்தான் தரிசனம் கிடைக்கும்! விமானங்களின் றெக்கைகளில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

விமானங்களின் இறக்கைகளை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால், உங்களுக்கு ஒரு விஷயம் தெரியவரும். இறக்கைகளின் நுனிப்பகுதி சற்று வளைந்து இருக்கும் என்பதுதான் அந்த விஷயம். விமானங்களின் இறக்கைகளில் வளைந்து இருக்கும் இந்த பகுதியை, ஆங்கிலத்தில் விங்லெட் (Winglet) என்று அழைக்கின்றனர்.

ஒரு சில சமயங்களில் மட்டும்தான் தரிசனம் கிடைக்கும்! விமானங்களின் றெக்கைகளில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

மிகவும் பழைய விமானங்களில் எல்லாம் இந்த விங்லெட்கள் இருக்காது. எனினும் இன்றைய நவீன யுகத்தின் நிறைய விமானங்களில் நம்மால் விங்லெட்களை அதிகமாக காண முடிகிறது. ஏர்பஸ் ஏ330 (Airbus A330), ஏர்பஸ் ஏ340 (Airbus A340) மற்றும் ஏர்பஸ் ஏ350 (Airbus A350) போன்ற விமானங்களில் நீங்கள் விங்லெட்களை காணலாம்.

ஒரு சில சமயங்களில் மட்டும்தான் தரிசனம் கிடைக்கும்! விமானங்களின் றெக்கைகளில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

அத்துடன் போயிங் 737 மேக்ஸ் (Boeing 737 MAX) போன்ற விமானங்களின் இறக்கைகளிலும் கூட நீங்கள் விங்லெட்களை பார்க்கலாம். கடந்த 1992ம் ஆண்டுதான் விமானங்களில் முதல் முறையாக விங்லெட்கள் இடம்பெற தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடைப்பட்ட 30 ஆண்டுகளில் ஏராளமான விமானங்களில் விங்லெட்கள் வந்து விட்டன.

ஒரு சில சமயங்களில் மட்டும்தான் தரிசனம் கிடைக்கும்! விமானங்களின் றெக்கைகளில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

சரி, விமானங்களில் ஏன் விங்லெட்கள் வழங்கப்படுகின்றன? என்ற சந்தேகம் உங்களுக்கு தற்போது வரலாம். உங்களின் இந்த சந்தேகத்திற்கு இந்த செய்தி தொகுப்பு விடையளிக்கிறது. 'ட்ராக்' (Drag) எனப்படும் இழுவையை குறைக்க வேண்டும் என்பதற்காகதான், விமானங்களின் இறக்கைகளில் விங்லெட்கள் கொடுக்கப்படுகின்றன.

ஒரு சில சமயங்களில் மட்டும்தான் தரிசனம் கிடைக்கும்! விமானங்களின் றெக்கைகளில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

விமானங்கள் டேக்-ஆஃப் ஆகும்போதும், லேண்டிங் செய்யப்படும்போதும் சுழல் காற்று மிகவும் வலிமையாக இருக்கும். இந்த சுழல் காற்று, விமானங்களிடம் இருந்து ஆற்றலை திருடுகின்றன என்று கூட சொல்லலாம். அதாவது விமானங்கள் மிகவும் சிரமப்பட்டுதான் முன்னேற வேண்டியிருக்கும். எனவே விமானங்களின் இன்ஜின்கள் அதிக எரிபொருளை நுகரும்.

ஒரு சில சமயங்களில் மட்டும்தான் தரிசனம் கிடைக்கும்! விமானங்களின் றெக்கைகளில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

இதுபோன்ற சமயங்களில் இழுவையை குறைப்பதற்காகவே, விமானங்களின் இறக்கைகளில் விங்லெட்கள் வழங்கப்படுகின்றன. விமானங்களின் இழுவையை குறைப்பதன் மூலமாக விமானங்களின் இன்ஜின்கள் நுகரக்கூடிய எரிபொருளின் அளவையும் சேர்த்தே விங்லெட்கள் குறைக்கின்றன. இதன் மூலம் விமானங்களின் மைலேஜ் அதிகரிக்கும்.

ஒரு சில சமயங்களில் மட்டும்தான் தரிசனம் கிடைக்கும்! விமானங்களின் றெக்கைகளில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

விங்லெட்கள் காரணமாக விமானங்களின் மைலேஜ் 5 சதவீதம் வரையில் அதிகரிப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் எரிபொருள் செலவு ஓரளவிற்கு குறையும் என்பதால், விமான நிறுவனங்கள் கணிசமான தொகையை லாபமாக சம்பாதிக்க முடியும். எனவேதான் இன்றைய காலகட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் புதிய விமானங்களில் விங்லெட்கள் இடம்பெறுகின்றன.

ஒரு சில சமயங்களில் மட்டும்தான் தரிசனம் கிடைக்கும்! விமானங்களின் றெக்கைகளில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

விமானங்களின் செயல்திறனை மேம்படுத்துவதுடன், விமானங்கள் தனித்துவமான தோற்றத்தை பெறவும் விங்லெட்கள் உதவி செய்கின்றன. ஆம், உண்மையிலேயே விங்லெட்களுடன் கூடிய விமானங்கள் மிகவும் அழகாகவே காட்சியளிக்கின்றன. விமான நிறுவனங்கள் விங்லெட்களை விரும்புவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

ஒரு சில சமயங்களில் மட்டும்தான் தரிசனம் கிடைக்கும்! விமானங்களின் றெக்கைகளில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி மிகவும் பழைய விமானங்களில் எல்லாம் விங்லெட்கள் இருக்காது. எனினும் விங்லெட்கள் மூலம் நிறைய நன்மைகள் கிடைப்பதால், பழைய விமானங்களிலும் தற்போது விங்லெட்களை விமான நிறுவனங்கள் பொருத்துகின்றன. அதாவது பைக் மற்றும் கார்களை போல் விமானங்களையும் அவை மாடிஃபிகேஷன் செய்கின்றன.

ஒரு சில சமயங்களில் மட்டும்தான் தரிசனம் கிடைக்கும்! விமானங்களின் றெக்கைகளில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

இதற்கிடையே விங்லெட்களின் தொழில்நுட்பத்தில் தற்போது பல்வேறு புதுமைகளையும் விமான உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக புகுத்தி வருகின்றன. மடித்து வைத்து கொள்ளக்கூடிய வகையிலான விங்லெட்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இது சமீப ஆண்டுகளில் விங்லெட்களின் தொழில்நுட்பத்தில் கண்டறியப்பட்ட புதுமைகளில் ஒன்றாகும்.

ஒரு சில சமயங்களில் மட்டும்தான் தரிசனம் கிடைக்கும்! விமானங்களின் றெக்கைகளில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!

தேவைப்படும் சமயங்களில் இந்த விங்லெட்கள் விரிவடைந்திருக்கும். தேவையில்லாத சமயங்களில் மடித்து வைத்து கொள்ளப்படும். பார்ப்பதற்கு ஏதோ மிகவும் சிறிய விஷயம் போல் இருந்தாலும், விங்லெட்களுக்கு பின்னால் மறைந்துள்ள இந்த நன்மைகள் உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்க கூடியவையாகதான் இருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Airplane winglets benefits
Story first published: Friday, September 23, 2022, 19:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X