Just In
- 23 min ago
ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
- 3 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 10 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 11 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
Don't Miss!
- News
காங்கிரஸுக்கு 10 சீட்தானாம்.. கழற்றிவிட்டே தீருவது என முடிவோடுதான் இருக்கிறதா திமுக?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மறைத்து வைத்திருந்த ரகசியம் வெளியானது... 7 கோடி ரூபாய் காரை வாங்கிய பிரபல நடிகர்... யார் தெரியுமா?
பிரபல நடிகர் ஒருவர் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) காரை பற்றி நீங்கள் ஏதாவது கேள்விபட்டுள்ளீர்களா? உலகப்புகழ் பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ள முதல் எஸ்யூவி ரக கார் இதுதான். ஆம், இதற்கு முன்பாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் எஸ்யூவி ரகத்தில் எந்தவொரு காரையும் விற்பனை செய்தது கிடையாது.

இப்படி ஒரு தனி சிறப்புடன் களம் கண்டுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில், 6.8 லிட்டர் வி12 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 560 பிஎச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை வாரி வழங்க கூடியது. 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை பெற்றுள்ள இந்த காரில், 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் ஐந்தே வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறன் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருக்கு உண்டு. ஆனால் மற்ற ரோல்ஸ் ராய்ஸ் கார்களை போலவே கல்லினன் காரையும் அனைவராலும் வாங்கி விட முடியாது. ஆம், இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் உங்களுக்கு ஒரு நிமிடம் தலை சுற்றி விடும்.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் எக்ஸ் ஷோரூம் விலையே 6.95 கோடி ரூபாய். இதன் மூலம் இந்தியாவில் விற்பனையாகும் அதிக விலை கொண்ட எஸ்யூவி கார்களில் ஒன்றாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் உள்ளது. இப்படிப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தற்போது சொந்தமாக்கியுள்ளார்.

இதற்கு முன்பாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை இந்தியாவின் நம்பர்-1 பணக்காரரான முகேஷ் அம்பானி வாங்கியதாகவும், இதுதான் இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் எனவும் தகவல்கள் வெளியாயின. தற்போது அந்த வரிசையில் அஜய் தேவ்கனும் இணைந்துள்ளார். அஜய் தேவ்கன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை ஆர்டர் செய்து விட்டார்.

ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பொதுவாக வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாடிபிகேஷன் செய்தே தரப்படும். அதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும். இதன்படி சமீபத்தில்தான் அஜய் தேவ்கனுக்கு கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக பாலிவுட் நடிகர், நடிகைகள் புதிய காரை வாங்கினால், தங்கள் சமூக வலை தள பக்கங்கள் வாயிலாக அதனை வெளி உலகிற்கு அறிவித்து விடுவார்கள்.

அத்துடன் அந்த கார்களில் அவர்கள் உலா வருவதையும் கூட பார்க்க முடியும். ஆனால் அஜய் தேவ்கனை அவரது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருடன் தற்போது வரை ஒரு முறை கூட பார்க்க முடியவில்லை. இருந்தபோதும் அவரது காரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனை வைத்து சில பல ஆராய்ச்சிகளை செய்ததில், பல்வேறு புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

அஜய் என்கிற விஷால் விரூ தேவ்கன் என்ற பெயரில் இந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 18ம் தேதிதான் இந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த காருடன் அஜய் தேவ்கனை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற பாலிவுட் நட்சத்திரங்களை போலவே அஜய் தேவ்கனும் லக்ஸரி கார்களை விரும்ப கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.