ஆளில்லா விமானம் தயாரிக்க மாணவர்களுக்கு உதவும் தல அஜித்

ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள மெடிக்கல் எக்ஸ்பிரஸ் -2018 யுஏவி சேலஞ்ச் என்ற போட்டியில் சென்னை எம்.ஐ.டி. கல்லூரி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்களது கண்டுபிடிப்பிற்கு ஆலோசகராக ந

By Balasubramanian

சென்னை அண்ணா பல்கலைக்கு உட்பட்ட எம்.ஐ.டி. கல்லூரி மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் நடக்கும் மெடிக்கல் எக்ஸ்பிரஸ் -2018 யுஏவி சேலஞ்ச் என்ற போட்டியில் கலந்து கொண்டனர்.

ஆளில்லா விமானம் தயாரிக்க மாணவர்களுக்கு உதவும் தல அஜித்

இப்போட்டி ஆம்புலன்ஸ் போல இன்னும் வேகமாகவும், பாதுகாப்பாகவும் அதே நேரத்தில் பல மருத்துவ வசதிகளையும் உள்ளடக்கிய வாகனத்தை வெற்றி கரமாக செய்து முடிப்பதே இந்த போட்டி.

ஆளில்லா விமானம் தயாரிக்க மாணவர்களுக்கு உதவும் தல அஜித்

இப்போட்டியின் முதல் சுற்றில் அண்ணா பல்கலை மாணவர்கள் தேர்ச்சி பெற்று இறுதி சுற்றிற்கு முன்னேறி உள்ளனர். உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மாணவர்கள பங்கேற்ற நிலையில் 55 நாடுகளில் உள்ள மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றனர் அவர்களில் நம் அண்ணா பல்கலை மாணவர்களும் அடங்குவர்.

ஆளில்லா விமானம் தயாரிக்க மாணவர்களுக்கு உதவும் தல அஜித்

ஆஸ்திரேலியாவில் உள்ள குயிண்ஸ்லேண்டில் நடக்கவுள்ள இறுதி போட்டி மிகவும் கடினமாக இருக்கும் பல நாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளதால் இதற்காக பல உழைப்புகளை செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இப்படி போட்டி கடுமையாகியுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க ஒரு சிறந்த நபரை நியமிக்க எம்.ஐ.டி. கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது. அவர்கள் தேடலில் போது சிக்கியவர் தான் நடிகர் அஜித்

ஆளில்லா விமானம் தயாரிக்க மாணவர்களுக்கு உதவும் தல அஜித்

நடிகர் அஜித் சினிமாத்துறையில் மிகவும் பிரபலமானவராக இருந்தாலும் அவருக்கு ஆட்டோ மொபைல் துறையில் அவ்வளவு பிரியம் கொண்டவர். இவர் பார்முலா 1 கார் ரேஸில் கூட கலந்து கொண்டவர். பல காயங்கள் காரணமாக கார் ரேஸில் அவரால் தெடர்ந்து செயல்பட முடியவில்லை

ஆளில்லா விமானம் தயாரிக்க மாணவர்களுக்கு உதவும் தல அஜித்

இதையடுத்து அவர் தனது ஆர்வத்தை விமானத்தின் பக்கம் திருப்பினார். ஒரிஜினல் விமானம் ஓட்டுவதற்கே லைசன்ஸ் வைத்துள்ள அஜித் தனது சொந்த முயற்சியில் பல ஆளில்லா விமானங்களை தயாரிக்க துவங்கினார்.

ஆளில்லா விமானம் தயாரிக்க மாணவர்களுக்கு உதவும் தல அஜித்

இவர் ஆளில்லா விமானங்களை இயக்கும் வீடியோக்களும் மிகவும் வைரலாக பரவியது. தமிழில் வெளியான வாமனன் என்ற படத்திற்காக கூட இவர் ஆளில்லா விமானங்களை இயங்கியிருந்தார்.

ஆளில்லா விமானம் தயாரிக்க மாணவர்களுக்கு உதவும் தல அஜித்

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள போட்டியினாது. சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ள நோயாளியின் ரத்த மாதிரியை விரைவாகவும் பாதுகாப்பாகவும் எடுத்து வர வேண்டும் என்பது தான் போட்டி. இதில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த முடிவெடுத்த கல்லூரி மாணவர்கள் அதற்காக ஆலோசனைகள் கிடைக்காமல் தவித்தனர்.

ஆளில்லா விமானம் தயாரிக்க மாணவர்களுக்கு உதவும் தல அஜித்

அவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அண்ணா பல்கலை., நிர்வாகம் நடிகர் அஜித்திடம் பேசி அந்த மாணவர்களுக்கு உதவு முன் வருமாறு கேட்டு கொண்டனர். இதை எந்த யோசனையும் இல்லாமல் நடிகர் அஜித் ஏற்று கொண்டுள்ளார்.

ஆளில்லா விமானம் தயாரிக்க மாணவர்களுக்கு உதவும் தல அஜித்

வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள போட்டியில் நடிகர் அஜித்தின் ஆலோசனைப்படி மாணவர்கள் ஒரு ஆளில்லா விமானத்தை உருவாக்கி அதன் மூலம் ரத்த மாதிரியை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர். இம்முயற்சி வெற்றி பெற்றால் அப்போட்டியில் முதல் பரிசு வெல்லும் வாய்ப்பு கூட உள்ளதாம்.

ஆளில்லா விமானம் தயாரிக்க மாணவர்களுக்கு உதவும் தல அஜித்

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் தான் நடிகர் அஜித் ஒரு ஆளிலில்லா ஹெலிகாப்டர் ஒன்றை தனது நண்பருடன் சேர்ந்து வடிவமைத்து அந்த ஹெலிகாப்டருடன் அவர் எடுத்து கொண்ட போட்டோ வெளியானது.

ஆளில்லா விமானம் தயாரிக்க மாணவர்களுக்கு உதவும் தல அஜித்

இதற்கிடையில் இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. மாணவர்களுக்கு ஆளில்லா விமானம் குறித்த ஆலோசனை வழங்க சம்மதம் தெரிவித்த நடிகர் அஜித்திற்கு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நாளில் ஒரு நாளுக்கு ரூ1,000 விதம் சம்பளமாக வழங்க முன் வந்தது.

ஆளில்லா விமானம் தயாரிக்க மாணவர்களுக்கு உதவும் தல அஜித்

முதலில் இந்த பணத்தை வாங்க மறுத்த நடிகர் அஜித் பின் இந்த பணத்தை அதே கல்லூரியில் படிக்கும் ஒரு ஏழை மாணவருக்கு உதவி தொகையாக வழங்கும் படி கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு கொண்டுள்ளார்.

ஆளில்லா விமானம் தயாரிக்க மாணவர்களுக்கு உதவும் தல அஜித்

இச்செய்தி தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. பலர் அஜித் குறித்து சமூக வலைதளங்களில் பெருமையாக பேசி வருகின்றனர். எது எப்படியோ நடிகர் அஜித் ஆலோசனைப்படி நம் மாணவர்கள் ஆளில்லா விமானத்தை செய்யும் முயற்சியில் வெற்றிபெற்று பேட்டியிலும் முதல் இடத்தை பிடிக்க நாம் வாழ்த்துவோம். உங்கள் வாழ்த்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Actor Ajith Helps MIT Students For Medical Express -2018 Compatition . Read in Tamil
Story first published: Friday, May 4, 2018, 13:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X