அழகு பதுமை அலியா பட்டின் அழகான கார்கள்... ரேஞ்ச் ரோவர் முதல் பிஎம்டபிள்யூ வரை...

பாலிவுட் திரையுலகின் அழகு பதுமை அலியா பட். குறுகிய காலத்தில் மிக விரைவாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார். அவர் கார்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

By Arun

பாலிவுட் திரையுலகின் அழகு பதுமை அலியா பட். குறுகிய காலத்தில் மிக விரைவாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார். அவர் கார்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பல்வேறு லக்ஸரி எஸ்யூவி, செடான் வகை கார்களை வாங்கி, தனது கேரேஜை நிரப்பியுள்ளார். அவரிடம் உள்ள கார்கள் குறித்த தகவல்களை பின்வரும் ஸ்டைலர்களில் காணலாம்.

அழகு பதுமை அலியா பட்டின் அழகான கார்கள்... ரேஞ்ச் ரோவர் முதல் பிஎம்டபிள்யூ வரை...

லேண்டு ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக்

லேண்டு ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் காரை, அலியா பட் சமீபத்தில்தான் வாங்கினார். இதன் எக்ஸ் ஷோரூம் விலை 1.6 கோடி. அலியா பட்டிடம் இருப்பதிலேயே மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி கார் இதுதான். சமீப காலமாக, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, லேண்டு ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் காரில்தான் அலியா பட் வருகிறார்.

அழகு பதுமை அலியா பட்டின் அழகான கார்கள்... ரேஞ்ச் ரோவர் முதல் பிஎம்டபிள்யூ வரை...

லக்ஸரி எஸ்யூவியான லேண்டு ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. ஆனால் 3.0 லிட்டர் வி6 டீசல் இன்ஜின் காரைதான் அலியா பட் பயன்படுத்துகிறார். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 240 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

அழகு பதுமை அலியா பட்டின் அழகான கார்கள்... ரேஞ்ச் ரோவர் முதல் பிஎம்டபிள்யூ வரை...

ஆடி க்யூ7

லேண்டு ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் காருக்கு அடுத்து அலியா பட்டிற்கு மிகவும் விருப்பமான கார் ஆடி க்யூ7 தான். லேண்டு ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் காரை வாங்குவதற்கு முன்பாக ஆடி க்யூ7 காரைதான் அலியா பட் அதிகம் பயன்படுத்தினார். இதுவும் எஸ்யூவி வகைகார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகு பதுமை அலியா பட்டின் அழகான கார்கள்... ரேஞ்ச் ரோவர் முதல் பிஎம்டபிள்யூ வரை...

டார்க் ப்ளூ நிறம் கொண்ட இந்த காரில், 3.0 லிட்டர் வி6 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 241 பிஎச்பி பவரையும், 550 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை, ஆடி க்யூ7 பெற்றுள்ளது.

அழகு பதுமை அலியா பட்டின் அழகான கார்கள்... ரேஞ்ச் ரோவர் முதல் பிஎம்டபிள்யூ வரை...

ஆடி க்யூ5

பாலிவுட் கேரியரை தொடங்கிய காலத்தில், ஆடி க்யூ5 காரைதான் அலியா பட் பயன்படுத்தினார். பழசை மறக்காத அவர் இன்னமும் கூட ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு ஆடி க்யூ5 காரில் வந்து கொண்டுதான் இருக்கிறார். அவரது மற்ற கார்களை போல், ஆடி க்யூ5 காரின் ரியர் சீட்கள் விசாலமாக இருக்காது. எனவே இந்த காரின் கோ-டிரைவர் சீட்டில்தான் பெரும்பாலும் அமர்வார்.

அழகு பதுமை அலியா பட்டின் அழகான கார்கள்... ரேஞ்ச் ரோவர் முதல் பிஎம்டபிள்யூ வரை...

இந்த பழைய தலைமுறை ஆடி க்யூ5 எஸ்யூவி காரில், 2.0 லிட்டர் TDL டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

அழகு பதுமை அலியா பட்டின் அழகான கார்கள்... ரேஞ்ச் ரோவர் முதல் பிஎம்டபிள்யூ வரை...

ஆடி ஏ6

இந்தியாவில் விற்பனையாகும் மிகச்சிறந்த லக்ஸரி செடான்களில் ஆடி ஏ6 காரும் ஒன்று. இது இந்தியாவில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. தன்னிடம் உள்ள எஸ்யூவி கார்களை தவிர இந்த செடான் வகை காரையும் அலியா பட் அடிக்கடி பயன்படுத்துகிறார்.

அழகு பதுமை அலியா பட்டின் அழகான கார்கள்... ரேஞ்ச் ரோவர் முதல் பிஎம்டபிள்யூ வரை...

ஆடி ஏ6 செடான் காரில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

அழகு பதுமை அலியா பட்டின் அழகான கார்கள்... ரேஞ்ச் ரோவர் முதல் பிஎம்டபிள்யூ வரை...

பிஎம்டபிள்யூ 7-சீரிஸ்

பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரின் ரியர் சீட்கள் மிகவும் சௌகரியமானதாக இருக்கும். இதனால் இந்தியாவில் உள்ள பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் மிகவும் பிரபலமான காராக விளங்குகிறது.

அழகு பதுமை அலியா பட்டின் அழகான கார்கள்... ரேஞ்ச் ரோவர் முதல் பிஎம்டபிள்யூ வரை...

அலியா பட்டிடம் இருப்பது 740 Ld வேரியண்ட். இதுவும் செடான் வகை கார்தான். இதில், ட்வின்பவர் டர்போசார்ஜ்டு 6-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 261 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

Source: Cartoq

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Alia Bhatt and her cars: From Range Rover to BMW 7-Series. read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X