2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

இந்தியாவில் வரும் 2030ம் ஆண்டிற்குள் விற்பனை செய்யப்படும் எல்லா கார்களும் எலெக்ட்ரிக் அல்லது மாற்று எரி சக்தி கொண்ட வாகனமாக இருக்க வேண்டும் எனவும், தற்போது நிலவும் பெட்ரோல் டீசல் பிரச்னைகளுக்கு இது

By Balasubramanian

இந்தியாவில் வரும் 2030ம் ஆண்டிற்குள் விற்பனை செய்யப்படும் எல்லா கார்களும் எலெக்ட்ரிக் அல்லது மாற்று எரி சக்தி கொண்ட வாகனமாக இருக்க வேண்டும் எனவும், தற்போது நிலவும் பெட்ரோல் டீசல் பிரச்னைகளுக்கு இது நிரந்தர தீர்வாக அமையும் எனவும் அரசு கருதுகிறது அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சித்து வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் சுலபமாக பயன்படுத்த பல்வேறு யுக்திகளை முயற்சித்து வருகின்றனர்.

2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

அப்படியாக முயற்சித்து வரும் நிறுவனத்தில் ஓன்று தான் சன் மொபிலிட்டி, எலெட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை சோலார் மூலம் சார்ஜ் ஏற்றும் வசதி கொண்ட பேட்டரி தொழிற்நுட்பத்தை இந்நிறுவனம் செய்து வருகிறது.

2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

நவீன கால தொழிற்நுட்பத்தின் வளர்ச்சி குளித்தும், எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எந்த அளவிற்கு பலன் அளிக்கும் என்பது குறித்தும் அந்நிறவனத்தின் துணை நிறுவனம சேத்தன் மைனி கூறுகையில் : "தற்போது ஆர்ஃபிஷியல் இன்டலிஜென்ஸ் போக்குவரத்து துறையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தி வருகிறது.

2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் வாயால் சொல்லும் இடங்களுக்கு எல்லாம் கார்கள் செல்லும் என்பதை கற்பனையிலோ அல்லது கார்டூனிலோ தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் சில ஆண்டுகளிலேயே இன்று அதை தொழிற்நுட்பம் சாத்திப்படுத்தியுள்ளது.

2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

தற்போது உலக நாடுகள் எல்லாம் தங்கள் நாட்டில் உள்ள போக்குவரத்தை இன்னும் ஸ்மார்ட்டாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று ஸ்மார்ட் ஹைவேக்களும் வந்து விட்டது. ஹைவேயில் சோலார் பேனல்கள் அமைப்பது, அதன் மூலம் சாலைகளின் மேப்பின் சென்சார்களை செயல்படுத்தவது, எலெக்ட்ரிக் பேட்டரிகளை சார்ஜ் செய்வது,

2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

இனி சயின்ஸ் பிக்ஷன் சினிமாக்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை எல்லாம் பயன்படுத்த முடியாது. எல்லாம் நிகழ் காலத்திற்கே வந்து விட்டன. தற்போது இந்தியாவிலும் போக்குவரத்து நெருக்கடி மற்றும் மாசு கட்டுப்பாட்டை குறைக்க எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த அறிவுத்தப்பட்டு வருகிறது.

2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்கள் உலகத்தரம் வாய்ந்த அளவிற்கு உள்ளது. தற்போது 35 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வாகனத்திற்கு உட்புறம் மற்றும் வெளிப்புறம் பல்வேறு வித மான கனெக்டிவிட்டிகளை எதிர்பார்க்கின்றனர்.

2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

நவீனமாக தயாரிக்கப்படும் கார்களும் ஸ்மார்ட்டாக செயல்பட பல தொழிற்நுட்பங்கள் வந்து விட்டன உதாரணமாக கார் விபத்தில் சிக்கும் முன்பாக விபத்தை தவிர்க்க உங்களை எச்சரிப்பது. நீங்கள் காரை ஓட்டாமலேயே நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எந்த விட இடையூறும் இல்லாமல் கார் செல்லுவது உள்ளிட்ட பல வசதிகள் காரில் வந்து விட்டன.

2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

இந்த ரக கார்கள் எல்லாம் புத்திசாலி தனமாக மனிதன் சுயமாக சிந்திப்பது போல் சிந்தித்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக செல்லும். ஸ்மார்ட் பேட்டரி ஆப்ஷன்களும் தற்போது வந்து விட்டன. தற்போது பேட்டரியில் உள்ள சார்ஜின் அளவு, அது எவ்வளவு தூரம் பயணிக்கும் அந்த பயண தூரத்தில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷன்கள் அல்லது பேட்டரி ஸ்வைப்பிங் ஸ்டேஷன்கள் என்ன என்பது உங்களுக்கு தெரிவிக்கும்

2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

நவீனமாக உலகில் உள்ள பல நிறுவனங்கள் பேட்டரி மாற்றும் தொழிற்நுட்பத்துடன் கூடிய வகையில்தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை டிசைன் செய்து வருகின்றனர். பேட்டரியை சார்ஜ் ஏற்றவதை விட பேட்டரியை மாற்றும் தொழிற்நுட்பம் தான் சிறந்தது. இதற்கு சில நிமிடங்கள் தான் நேரம் தேவைப்படுகிறது.

2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

அதே நேரத்தில் நாம் சார்ஜ் தீர்ந்து போன பேட்டரியை மீண்டும் சோலார் இன்வென்டர் மூலம் சார்ஜ் ஏற்றி முழுமையாக சார்ஜ் ஏற்றியுதும் வேறு ஒருவருக்கு வழங்குகிறது. பேட்டரிகளை ஒருவருக்கு ஒருவர் மாற்றி கொண்டே இருக்கலாம். பேட்டரிகளை நிறுவனங்களே பராமரித்து சிறந்த சேவையை வழங்க முடியும்.

2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

இப்படியாக எலெக்ட்ரிக் கார்களின பேட்டரியை மாற்றும் தொழிற்நுட்பம் இந்தியாவிற்கு மிகுந்த தேவையாக இருக்கிறது. 2030ம் ஆண்டிற்கும் ஒவ்வொரு 3 கிலோ மீட்டருக்க ஒரு ஸ்வப்பிங் ஸ்டேஷன்களின் தேவை இருக்கும் என ஒரு ஆய்வு சொல்கிறது.

2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

மெட்ரோ ரயில் , ஸ்மார்ட் சிட்டி ஆகிய திட்டங்கள் இந்தியாவின் தொழிற்நுட்ப வளர்ச்சிக்கான கதவை திறந்து விட்டுள்ளது. தொழிற்நுட்ப வசதிகள் மூலம் மக்கள் தங்கள் கையில் உள்ள மொபைல் ஆப்கள் மூலமே அனைத்து விதமான டிராஸ்போர்ட்களையும் பயன்படுத்த முடியும்.

2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

எனர்ஜியை பொருத்தவரை கன்வென்ஷனல் எனர்ஜி தான் முக்கிய பங்கு வகிக்கிறது. காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்த தற்போது பேட்டரி, சோலார் சிஸ்டம், சார்ஜிங் ஸ்டேஷன் கட்டமைப்புகள், மற்றம் ஸ்வப்பிங் ஸ்டேஷன்கள் ஆகிய நிறுவனலாம். மேலும் இதில் பயன்படுத்தப்படும் எனர்ஜிகள் முற்றிலும் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் காற்று மாசுபாடு இல்லாமல் இயங்கும் தொழிற்நுட்பம்

2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

இந்த எனர்ஜி மார்கெட் வரும் 2030ம் ஆண்டிற்குள் 200 பில்லயன் டாலர் மதிப்பை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மாசு கட்டுப்பாடு மட்டும் முக்கியம் இல்லை. இந்தியர்கள் குறைந்த பராமரிப்பு செலவு, பொது போக்குவரத்திற்கு ஏற்ற தொழிற்நுட்பம் தேவைப்படுகிறது.

2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் சில சவால்களை சந்தித்து வருகின்றன. அதிக விலை, குறைவான கட்டமைப்பு வசதிகள், நீண்ட நேர சார்ஜிங் டைம் ஆகியவை தான் இந்தியாவில் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு தடையாக உள்ளது.

2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

மேலும் உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாக தயாரிப்பில் முதலீடுகள் குறைவாக உள்ளது. முக்கியமாக பேட்டரிகளின் விலைகளை குறைக்க புதிய தொழிற்நுட்பத்தை கண்டுபடிக்க பெரிய அளவில் முதலீடுகள் இல்லை. தற்போது எலெக்ட்ரிக் வாகனத்திற்கு பயன்படுத்த 13.5 கிலோ வாட்ஸ் பேட்டரி தான் அதிகபட்ச அளவு பேட்டரியாக இரக்கிறது.

2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

ஐரோப்பா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகம் பயன்படுத்த அதிக முதலீடுகளை உள்ளிடுகின்றனர். அமெரிக்காவும், ஐரோப்பாவும் இதையே தெடார்ந்து செய்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் அந்நாட்டு எலெக்ட்ரிக் வாகனதுறை 90 பில்லியன் யூரோ மதிப்பிற்கு உயர்ந்து விடும். 2030ம் ஆண்டிற்குள் அந்நாட்டில் 55 சதவீத கார்கள் எலெக்ட்ரிக் மயமாக மாறிவிடும்.

2030க்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் காணாமல் போகுமா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர பல்வேறு வாய்ப்புகள் உள்ளது. மத்திய கட்டுப்பாட்டு மையம் மூலம் மாற்று போக்குவரத்தில் தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கான ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும். இதனால் இந்தியாவில் பெட்ரோல் ,டீசல் பயன்பாடு, மற்றும் காற்று மாசுபாட்டில் உள்ள பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். " இவ்வாறு கூறினார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. ராயல் என்பீல்டை விடுங்க பாஸ்.. சிம்பு-மஞ்சிமா போல் காதலியுடன் லாங் டிரிப் அடிக்க இந்த பைக்குகள் ஓகே
  2. ரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
  3. ஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது
  4. அடுத்த ஆண்டு டெரஃப்யூஜியா டிரான்ஸ்சிஷன் பறக்கும் கார் உற்பத்தி துவங்குகிறது!
  5. தீவிரவாத அச்சுறுத்தலால் குடியரசு தலைவர் காருக்கு புது கட்டுப்பாடு.. விஐபி கலாச்சாரத்திற்கும் முடிவு
Most Read Articles
English summary
New technology drives the electric vehicle movement. Read in Tamil
Story first published: Thursday, July 19, 2018, 14:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X