அமெரிக்கத் தமிழர்களே உஷார்... சரக்கு போட்டு காரை எடுத்தால் இனி நடக்கப்போவது இது தான்...

அமெரிக்காவில் மது போதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வாகனங்களிலேயே டிரைவர் மது போதையிலிருந்தால் வாகனம் செயல்படுவதைத் தடுக்கும் கருவிகளை அமெரிக்காவில் விற்பனையாகும் அனைத்து கார்களிலும் பொருத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.

அமெரிக்கத் தமிழர்களே உஷார்... சரக்கு போட்டு காரை எடுத்தால் இனி நடக்கப்போவது இது தான்...

அமெரிக்காவில் நடக்கும் சாலை விபத்துக்களை நேரடியாக அமெரிக்காவின் நேசனல் டிரான்ஸ்போர்ட் சோஃப்டி போர்டு (NTSB) விசாரணை நடத்துகிறது. ஒவ்வொரு விபத்து ஏன் நடந்தது. எப்படி நடந்தது, இது போன்ற விபத்துக்கள் இது நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆய்வு செய்துவருகிறது. இந்த போர்டு அமெரிக்க அரசுக்கு அமெரிக்காவில் உள்ள கார்களில் டிரைவர் மது குடித்திருக்கிறாரா எனக் கண்காணிக்கும் கருவியைக் கட்டாயமாக்கப் பரிந்துரை செய்தது.

இந்நிலையில் அமெரிக்க அரசும் இதை ஏற்றுத் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் (NHTSA) மூலம் வரும் 2026ம் ஆண்டிற்கும் அமெரிக்காவில் உள்ள எல்லா கார்களுக்கும் இதைக் கட்டாயமாக்க உத்தரவிட்டது. இந்நிலையில் NTSB சமீபத்தில் அமெரிக்க அரசிடம் இதை 2026ம் ஆண்டிற்கு முன்பாகவே செய்ய வேண்டும், அதுவும் மிகவும் வேகமாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்படி தற்போது அமெரிக்க அரசு கார்களில் ப்ரீத் அனலைசர் மூலம் காரின் இக்னீஷியனை ஆன் செய்வது மற்றும் டிரைவர் டிடெக்ஷன் சிஸ்டம் மூலம் டிரைவர் மது போதையிலிருந்தால் காரை ஸ்டார்ட் செய்யாமல் தடுப்பது ஆகிய கருவிகளைக் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவில் இனி விற்பனையாகும் புதிய கார்களில் ப்ரீத் அனலைசர் இருக்கும்.

டிரைவர் ப்ரீத் அனலைசரில் ஊதிய பின்பே காரை ஸ்டார்ட் செய்ய முடியும். அப்படி ஊதும் போது அவர் மது போதையில் இருப்பது தெரியவந்தாலும் கார் ஸ்டார்ட் ஆகாது. இது மட்டுமல்ல கார் ஸ்டார்ட் ஆனவுடன் டிரைவரை கண்காணிக்கும் கேமரா ஆன் ஆகும் இதில் டிரைவரின் முகத்தை டிடெக்ட் செய்து அவர் மது போதையில் இருக்கிறாரா இல்லை என்பதைக் கண்காணிக்கும் ஒரு வேலை ப்ரீத் அனலைசரில் அவர் மது போதையில் இல்லாமல் இருந்து கார் ஸ்டார் ஆனாலும் இந்த கேமராவில் அவர் மது போதையில் இருப்பது தெரியவந்தாலும் கார் உடனடியாக ஸ்டாப் ஆகிவிடும்.

அமெரிக்காவைப் பொருத்தவரை 21 வயது மற்றும் அதற்கு அதிகமாக வயதுடையவர்கள் 0.08-0.03 வரை அளவு கொண்ட மதுவை உட்கொண்டு வாகனம் ஓட்ட மட்டுமே அனுமதியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2020ம் ஆண்டு மொத்தம் 11,654 பேர் மது போதையால் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அந்நாட்டில் ஒட்டு மொத்தமாக நடந்த சாலை விபத்து மரணங்களில் 30 சதவீதம் ஆகும். அதனால் அதைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது விரைவில் அமெரிக்காவில் உள்ள கார்களில் கட்டாயம் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Most Read Articles
English summary
American govt plans to mandate drink driving interlock system in new cars
Story first published: Wednesday, September 28, 2022, 13:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X