நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

முதல் நாள் வேலைக்கு சுமார் 16 மைல்கள் நடந்தே வந்த மாணவனுக்கு, அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஆச்சரியம் அளிக்கும் வகையிலான பரிசை வழங்கி அசத்தினார்.

By Arun

முதல் நாள் வேலைக்கு சுமார் 16 மைல்கள் நடந்தே வந்த மாணவனுக்கு, அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஆச்சரியம் அளிக்கும் வகையிலான பரிசை வழங்கி அசத்தினார். நெகிழ்ச்சியான இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

அமெரிக்க நாட்டில் உள்ள அலபாமா மாகாணத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் வால்டர் கேர். இவருக்கு 20 வயதுதான் ஆகிறது. நியூயார்க் நகரில் உள்ள பெல்காம் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் பிரபலமான பெல்கூப்ஸ் என்ற மூவிங் கம்பெனியில் வால்டர் கேருக்கு வேலை கிடைத்தது.

நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

ஒரு நிறுவனம் அல்லது வீட்டில் உள்ள பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கான சேவையை மூவிங் கம்பெனிகள் வழங்கி கொண்டிருக்கின்றன. இந்த வகையில் வால்டர் கேருக்கான முதல் அசைன்மெண்ட் ஜென்னி ஹேடன் லாமே என்பவரின் வீட்டில் வழங்கப்பட்டிருந்தது.

நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

2003ம் ஆண்டு மாடல் நிஸ்ஸான் அல்டிமா காரை, வால்டர் கேர் வைத்துள்ளார். ஆனால் முதல் நாள் வேலைக்கு செல்வதற்கு முந்தைய நாள் மாலை, வால்டர் கேரின் நிஸ்ஸான் அல்டிமா கார் திடீரென மக்கர் செய்ய தொடங்கியது. எவ்வளவு முயன்றும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை.

நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

விடிந்தால் வேலைக்கு செல்ல வேண்டும். அதுவும் முதல் நாள் என்பதால், விடுமுறை எடுக்க வாய்ப்பே இல்லை. தாமதமாகவும் செல்ல முடியாது. எனவே நண்பர்களின் வாகனம் மூலம் வேலைக்கு செல்லலாம் என வால்டர் கேர் முடிவெடுத்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக வால்டர் கேருக்கு உதவி கிடைக்கவில்லை.

நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

வேறு என்ன செய்வது? என யோசித்து கொண்டிருந்த நேரத்தில், நடந்தே சென்றால் என்ன? என்ற சிந்தனை வால்டர் கேருக்கு உதித்தது. முதல் அசைன்மெண்ட் வழங்கப்பட்டுள்ள ஜென்னி ஹேடன் லாமேவின் வீட்டிற்கு நடந்து சென்றால், எவ்வளவு நேரம் ஆகும்? என வால்டர் கேர் கணக்கிட தொடங்கினார்.

நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

ஜென்னி ஹேடன் லாமேவின் வீடு சுமார் 20 மைல் தொலைவில் இருந்தது. காலை 8 மணிக்கு முன்பாக அவர் அங்கு இருக்க வேண்டும். ஆனால் நடந்து சென்றால் 7 மணி நேரம் ஆகும். இருந்தபோதும் நடந்தே செல்வது என்ற துணிச்சலான முடிவை வால்டர் கேர் எடுத்தார்.

நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

நள்ளிரவு நேரத்தில் கும்மிருட்டையும் பொருட்படுத்தாமல், துணிச்சலாக நடந்தே சென்றார் வால்டர் கேர். சுமார் 14 மைல்கள் நடந்து சென்றிருப்பார். அப்போது அதிகாலை 4 மணி இருக்கும். அந்த நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வால்டர் கேரை நிறுத்தி விசாரித்தனர்.

நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

வேலைக்கு நடந்து சென்று கொண்டிருக்கிறேன் எனக்கூறிய வால்டர் கேரை, போலீசார் நம்பவில்லை. இதை நம்புவது கடினம்தான் என வால்டர் கேரும் போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர் முழு கதையையும் போலீசாரிடம் வால்டர் கேர் கூறினார்.

நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

இதன்பின் வால்டர் கேருக்கு, போலீசார் உணவு ஏற்பாடு செய்தனர். அதை சாப்பிட்டு விட்டு சில நிமிடங்கள் மட்டுமே ஓய்வு எடுத்த வால்டர் கேர் மீண்டும் நடைபோட தொடங்கினார். இப்போது 2 மைல்கள் சென்றிருப்பார். அப்போது மீண்டும் ஒரு போலீஸ் அதிகாரி, வால்டர் கேரை வழிமறித்து நிறுத்தினார்.

நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

நீங்கள் வால்டர் கேரா? என அந்த போலீஸ் அதிகாரி கேட்டார். நமது பெயர் இவருக்கு எப்படி தெரியும்? என வால்டர் கேர் திகைத்து போனார். எனினும் ஆமாம் எனக்கூறினார். உடனே தனது காரில் ஏறும்படி, வால்டர் கேரை அந்த அதிகாரி கேட்டு கொண்டார்.

நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

அதிகாலை 4 மணியளவில் வால்டர் கேரை நிறுத்தி விசாரித்த போலீஸ்காரர்கள்தான், இந்த அதிகாரியை அனுப்பியிருப்பார்கள் போல. ஏனெனில் உங்களை எப்போது வேண்டுமானாலும் செக் செய்வோம் என அவர்கள் அப்போதே வால்டர் கேரிடம் கூறியிருந்தனர்.

நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

பின்னர் வால்டர் கேரை காரில் ஏற்றிக்கொண்ட அந்த அதிகாரி நேராக ஜென்னி ஹேடன் லாமேவின் வீட்டிற்கு சென்றார். அங்கு வால்டர் கேரை இறக்கி விட்டார். பின்னர் லால்டர் கேரின் கதையை, ஜென்னி ஹேடன் லாமே மற்றும் அவரது கணவர் கிரிஷ் ஆகியோரிடம் அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

இதைக்கேட்டதும் அவர்கள் நெகிழ்ந்து போனார்கள். பின்னர் தனக்கு வழங்கப்பட்ட பணியை வால்டர் கேர் சிறப்பாக செய்து முடித்தார். வால்டர் கேரின் மன உறுதி, கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக முடிக்கும் பாங்கு ஆகியவற்றால், ஜென்னி ஹேடன் லாமே ஈர்க்கப்பட்டார்.

நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

உடனடியாக வால்டர் கேரின் கதையை பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வெளியிட்டார். அது வைரலாக பரவியது. அப்படி இருக்கையில், பெல்கூப்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியை மட்டும் அந்த போஸ்ட் எப்படி எட்டாமல் இருக்கும்?

நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

வால்டர் கேர் குறித்த ஜென்னி ஹேடன் லாமேவின் போஸ்ட்டை பார்த்து விட்டு பெல்கூப்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லூக் மார்க்ளினும் நெகிழ்ந்து விட்டார். இதன்மூலம் லூக் மார்க்ளினின் மனதில் வால்டர் கேர் இடம்பிடித்து விட்டார்.

நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

பின்னர் வால்டர் கேரை சந்திப்பது என மார்க்ளின் முடிவு செய்தார். அப்போது அவருக்கு ஏதேனும் ஒன்றை பரிசளிக்க வேண்டும் என முடிவு செய்தார். தனது போர்டு எஸ்கேப் காரையே, வால்டர் கேருக்கு பரிசளித்து விட்டால் என்ன? என்ற சிந்தனையும் அவருக்குள் உதித்தது.

கார் பழுது ஆனதால்தானே வால்டர் கேர் நடந்தே பணிக்கு வந்தார். அதனால் அவருக்கு தனது காரையே வழங்குவது என லூக் மார்க்ளின் முடிவு செய்தார். இதன்படி வால்டர் கேரை சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி காரையும் பரிசாக வழங்கினார்.

நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

கடந்த 2005ம் ஆண்டு ஏற்பட்ட காத்ரினா சூறாவளியால், வால்டர் கேர் தனது குடும்ப வீட்டை இழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவருக்கு நிதி திரட்டும் முயற்சியிலும் ஜென்னி ஹேடன் லாமே ஈடுபட்டார்.

நெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..

2,000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே இலக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், வால்டர் கேருக்கு 8,500 அமெரிக்க டாலர்கள் வெறும் ஒரே நாளில் வந்து குவிந்தது. இதனிடையே பெல்காம் போலீசாரும், வால்டர் கேரை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்று சொல்வார்களே... அது வால்டர் கேருக்கு நன்றாக பொருந்தும்..

Source:Bellhops

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
American Young Man walks 16 MILES to first day of work. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X