Just In
- 7 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 9 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
நடராஜன் உள்ளிட்ட 6 இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் எஸ்யூவி காரை பரிசளிக்கவுள்ளதாக, ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் பெற்ற வெற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. காயம் உள்ளிட்ட காரணங்களால் அனுபவம் வாய்ந்த முன்னணி வீரர்கள் விலகி விட, இளம் வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தேடி தந்துள்ளனர். இந்திய ரசிகர்கள் தற்போது இந்த வெற்றியை உற்சாகத்துடன் கொண்டாடி கொண்டுள்ளனர்.

இந்த சூழலில், ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று சாதனை படைத்த இளம் இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தற்போது சிறப்பு பரிசு ஒன்றை அறிவித்துள்ளார். ஆம், இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த 6 இளம் வீரர்களுக்கு, மஹிந்திரா தார் எஸ்யூவி கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.

முகமது சிராஜ், சுப்மான் கில், நடராஜன், ஷர்துல் தாகூர், நவ்தீப் ஷைனி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 6 இளம் வீரர்களுக்கு, மஹிந்திரா தார் எஸ்யூவி காரை பரிசாக வழங்கவுள்ளதாக ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் அறிவித்துள்ளார். இந்த 6 இளம் வீரர்களுக்கு ஆனந்த் மஹிந்திராவின் சொந்த செலவில், மஹிந்திரா தார் எஸ்யூவி கார்கள் பரிசளிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

இந்த செலவு மஹிந்திரா நிறுவனத்தை சேராது. 6 இளம் வீரர்களுக்கும் புத்தம் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி காரை பரிசளிப்பது தனிப்பட்ட முறையில் தனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். இந்த பரிசு இந்திய அணியின் இளம் வீரர்கள் இன்னும் சிறப்பாக விளையாடுவதற்கு ஊக்கம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இளம் வீரர்களுக்கு பரிசாக கிடைக்கவுள்ள மஹிந்திரா தார், இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஆஃப் ரோடு எஸ்யூவி கார் ஆகும். இதன் புதிய தலைமுறை வெர்ஷனை மஹிந்திரா நிறுவனம் கடந்த அக்டோபர் 2ம் தேதி இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த புதிய தலைமுறை மாடல்தான் இளம் வீரர்களுக்கு பரிசளிக்கப்படவுள்ளது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு இந்திய சந்தையில் தற்போது மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று மஹிந்திரா நிறுவனம் நினைத்திருக்குமா? என்பதே சந்தேகம்தான். புதிய தலைமுறை தார் எஸ்யூவி, அந்த அளவிற்கு இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்கான காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக இருப்பது மட்டுமே ஒரே ஒரு குறையாக உள்ளது. அந்த குறையையும் நிவர்த்தி செய்து, முன்பதிவு செய்தவர்களுக்கு புதிய தார் எஸ்யூவி காரை வெகு விரைவாக டெலிவரி கொடுப்பதற்கான முயற்சிகளை மஹிந்திரா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் சோதனைகளில் 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று இந்தியாவிற்கு புதிய தலைமுறை தார் பெருமிதம் தேடி கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக இதே மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி, குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது.