சைக்கிள் விலையில் புத்தம் புதிய கார்! மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் சொன்ன ஆச்சரிய தகவல்! நம்பவே முடியலயே!

இந்த காலத்தில் கார்களின் விலை (Car Price) கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் அந்த காலங்களில் எல்லாம் புதிய கார்களின் விலை எவ்வளவு இருந்தது? என்று தெரிந்தால் நீங்கள் கண்டிப்பாக ஆச்சரியப்படுவீர்கள். ஏனெனில் தற்போது காருக்கு ஒரு உதிரி பாகம் வாங்கும் விலையில், அந்த காலத்தில் ஒரு புதிய காரையே வாங்கி விடலாம்.

இந்த சூழலில், மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra), அந்த காலத்தில் கார்களின் விலை எப்படி இருந்தது? என்பதை தற்போது நமக்கு தெரியப்படுத்தியுள்ளார். பிரபலமான சமூக வலை தளங்களில் ஒன்றான டிவிட்டரில், ஆனந்த் மஹிந்திரா மிகவும் ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர். அதில் தற்போது புதிய பதிவு ஒன்றை ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அந்த கால கார்களின் விலை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் நமக்கு தெரியவந்துள்ளன.

சைக்கிள் விலையில் புத்தம் புதிய கார்! மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் சொன்ன ஆச்சரிய தகவல்! நம்பவே முடியலயே!

50 வருஷத்துக்கு முன்னாடி!

ஆனந்த மஹிந்திரா டிவிட்டரில் தற்போது நியூஸ் பேப்பர் கட்டிங் ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த 1972ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி, அன்றைய கால கட்டத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் விலை உயர்வு குறித்த செய்தி இதில் அடங்கியுள்ளது. அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் (Hindustan Motors) மற்றும் ஃபியட் (Fiat) உள்ளிட்ட நிறுவனங்கள் எல்லாம் எப்படி தங்களது பிரபலமான கார்களின் விலைகளை உயர்த்தின? என்பதை இந்த நியூஸ் பேப்பர் கட்டிங் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

இவ்ளோதான் ரேட் ஏறுச்சா!

இன்றைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, அந்த காலகட்டத்தில் கார்களின் விலைகள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் மிகவும் குறைவாக இருந்துள்ளன. ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador) காரின் விலை அப்போது 160 ரூபாய் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஃபியட் 1100டி (Fiat 1100D) காரின் விலை 300 ரூபாய் உயர்ந்துள்ளது. இது விலை உயர்வுதான். அந்த காலகட்டத்தில் கார்களின் விலை எவ்வளவாக இருந்தது? என்பது தெரிந்தால் இன்னும் ஆச்சரியம் அடைவீர்கள்.

சைக்கிள் விலையில் புத்தம் புதிய கார்! மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் சொன்ன ஆச்சரிய தகவல்! நம்பவே முடியலயே!

சைக்கிள் வாங்கற காசுல கார்!

அந்த காலகட்டத்தில் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரின் விலை வெறும் 16,946 ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் ஃபியட் 1100டி காரின் விலையோ வெறும் 15,946 ரூபாய் மட்டும்தான். இன்றைய காலகட்டத்தில் இந்த விலைக்கு ஒரு புதிய சைக்கிளை மட்டுமே வாங்க முடியும். அல்லது காருக்கு உதிரி பாகங்களை வேண்டுமானால் வாங்கலாம். இந்த விலைக்கு புதிய கார் எல்லாம் வாங்க முடியாது.

ஆனால் அந்த காலத்தில் இது பிரீமியம் விலைதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த காலகட்டத்தில் பணக்காரர்களால் மட்டுமே இவ்வளவு விலை கொடுத்து புதிய காரை வாங்க முடிந்திருக்கும். இதில், ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரானது, இந்திய சாலைகளை ஆட்சி செய்த கார் ஆகும். இந்திய சாலைகளை விட்டு பிரிந்து விட்டாலும், இன்னமும் இந்திய மக்களின் மனங்களை ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் ஆட்சி செய்து கொண்டுதான் இருக்கிறது.

மீண்டும் விற்பனைக்கு வருகிறதா அம்பாஸிடர்?

ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார் மீண்டும் விற்பனைக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்திய மக்கள் பலரிடமும் காணப்படுகிறது. அதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை என மறுக்க முடியாது. ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் மீண்டும் விற்பனைக்கு வருமா? என்ற கேள்விக்கு காலத்தால்தான் சரியான பதிலை சொல்ல முடியும்.

அந்த நாள் ஞாபகம்!

இதற்கிடையே தற்போது பகிர்ந்துள்ள செய்திதாள் வெளியான சமயத்தில், ஆனந்த் மஹிந்திரா கல்லூரியில் படித்து கொண்டிருந்துள்ளார். வழக்கமாக அவர் பஸ்ஸில்தான் கல்லூரிக்கு செல்வாராம். எனினும் எப்போதாவது அவரது அம்மாவின் நீல நிற ஃபியட் காரை ஆனந்த் மஹிந்திரா ஓட்டுவாராம். இந்த காரை ஓட்டுவதற்கு, ஆனந்த் மஹிந்திராவிற்கு எப்போதாவதுதான் அனுமதி கிடைக்குமாம். இந்த தகவல்களையும் ஆனந்த் மஹிந்திரா தனது ட்வீட் மூலம்தான் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Anand mahindra car price hindustan ambassador
Story first published: Thursday, February 2, 2023, 11:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X