‘இந்தியாவின் ஓட்டுனர்-இல்லா மோட்டார்சைக்கிள்’- நகைச்சுவையாக இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

சட்டத்திற்கு புறமாக மோட்டார்சைக்கிள் ஓட்டிய நபரின் வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பை கிளப்பிய இந்த வீடியோவினை பற்றி இனி தொடர்ந்து பார்ப்போம்.

‘இந்தியாவின் ஓட்டுனர்-இல்லா மோட்டார்சைக்கிள்’- நகைச்சுவையாக இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

அபாயகரமான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பிரபலமாகிவிடும். இதற்கு உதாரணங்களாக பல வீடியோக்களை இதற்குமுன் நம் செய்திதளத்தில் பார்த்துள்ளோம். அவ்வாறான வீடியோக்களில் ஒன்று தான் தற்போது மஹிந்திரா க்ரூப்பின் சேர்மன் ஆனந்த் மஹிந்திராவின் பார்வையில் பட்டுள்ளது.

‘இந்தியாவின் ஓட்டுனர்-இல்லா மோட்டார்சைக்கிள்’- நகைச்சுவையாக இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

ஆனந்த் மஹிந்திரா இணையத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடிய தொழிலதிபர் என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இணையத்தில் வைரலாகும் விஷயங்களை அவ்வப்போது தனது டுவிட்டர் பதிவில் பதிவிடுவார். இம்முறை வேறொருவது பதிவிற்கு தனது கருத்தை தெரிவிப்பதுபோல் இந்த வீடியோவினை பகிர்ந்து கொண்டுள்ளார்.

‘இந்தியாவின் ஓட்டுனர்-இல்லா மோட்டார்சைக்கிள்’- நகைச்சுவையாக இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்து கொண்டுள்ள வீடியோவினை பதிவிட்டவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை கிண்டலடிக்கும் விதமாக இதனை வெளியிட்டுள்ளார். உலகளவில் பிரபலமான அமெரிக்க எலக்ட்ரிக் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்திய சந்தையில் நுழைய கடந்த சில ஆண்டுகளாக திட்டமிட்டு வருகிறது.

‘இந்தியாவின் ஓட்டுனர்-இல்லா மோட்டார்சைக்கிள்’- நகைச்சுவையாக இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

தொழிற்சாலை நிறுவதற்கான இடம் இந்தியாவில் கர்நாடகாவில் அமைய உள்ளதாக கூட கூறப்பட்டது. ஆனால் எதிலிலும் இதுவரையில் முடிவு எட்டப்படவில்லை. டெஸ்லாவின் ஓட்டுனர் இல்லா கார் சேவைக்கு பல தரப்பட்ட மக்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ஆக மொத்தத்தில் ஆளில்லாமல் இயங்கும் டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் உலகளவில் பிரபலமாகிவிட்டன.

‘இந்தியாவின் ஓட்டுனர்-இல்லா மோட்டார்சைக்கிள்’- நகைச்சுவையாக இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

டெஸ்லாவின் ஆளில்லாமல் இயங்கும் வாகனங்களை குறிப்பிட்டுதான் அஜயிட்டா என்ற இணையவாசி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். ஆனந்த் மஹிந்திரா இதற்கு, "இது எனக்கு பிடித்துள்ளது... நான் ஒரு பயணி, நண்பர்களே... டிரைவர் அவரது இருப்பிடத்தில் இல்லை" என நகைச்சுவையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது பிரபல இந்தி பாடலாம்.

இந்த வீடியோவினை ஆனந்த் மஹிந்திராவை போல் சிலர் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும், பலர் இந்த நபரது செயலுக்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். ஏனெனில் இவ்வாறான ஸ்டண்ட்களுக்கு அரசாங்கம் அனுமதி அளிப்பது இல்லை. இத்தனைக்கும் இந்த நபர் ஹெல்மெட் கூட அணியவில்லை. இதையெல்லாம் பார்த்து கொதிந்து போன சிலர் உடனடியாக இந்த நபருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என குரல் எழுப்பியுள்ளனர்.

‘இந்தியாவின் ஓட்டுனர்-இல்லா மோட்டார்சைக்கிள்’- நகைச்சுவையாக இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

இவ்வாறு பலர் எதிர்ப்பு தெரிவிப்பதை பார்த்த ஆனந்த் மஹிந்திரா, "ஆம் நான் சரியாக தான் கூறியுள்ளேன். நான் பயணி, ஓட்டுனர் அவரது இருப்பிடத்தில் இல்லை, ஹெல்மெட்டும் இல்லை" என சமாளித்து மற்றொரு ட்விட்டை பதிவிட்டுள்ளார். இவ்வாறான ஸ்டண்ட்களை யாரும் கனவில் கூட நினைத்து பார்க்க வேண்டாம்.

‘இந்தியாவின் ஓட்டுனர்-இல்லா மோட்டார்சைக்கிள்’- நகைச்சுவையாக இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

ஏனெனில் இவ்வாறான செயல்களினால் எந்தவொரு பயனும் இல்லை. நமக்கு காயம் ஏற்படுவது மட்டுமின்றி, மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும். சாதாரண பயணங்களின்போதே ஹெல்மெட் அணியாதது குற்றமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் இத்தகைய சட்டத்திற்கு புறம்பான மோட்டார்சைக்கிள் பயணிகளின்போது நிச்சயம் ஹெல்மெட் கட்டாயம் அணிந்திருத்தல் வேண்டும்.

‘இந்தியாவின் ஓட்டுனர்-இல்லா மோட்டார்சைக்கிள்’- நகைச்சுவையாக இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

ஒருவேளை இந்த நபர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தால், ஹெல்மெட் அணியாததை முக்கிய குற்றமாக எடுத்து கொள்வர். போலீஸார் இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் எங்களது கருத்தாகும். ஏனெனில் இவரை போன்று எல்லாரும் பொது சாலையில் ஸ்டண்ட் செய்ய ஆரம்பித்தால் நாடு தாங்காது.

‘இந்தியாவின் ஓட்டுனர்-இல்லா மோட்டார்சைக்கிள்’- நகைச்சுவையாக இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

அதுமட்டுமில்லாமல் சாலையில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதும் அரசாங்கத்தின் கடமை ஆகும். ஏனெனில் கடந்த ஆண்டில் பதிவான சாலை விபத்துகளில் இறந்தோரின் எண்ணிக்கை 1.20 லட்சமாகும். இவ்வாறான செயல்களை உலகிற்கு வெளிக்காட்டுவதில் இணையம் மிக முக்கிய பங்காற்றுகிறது. உதாரணத்திற்கு இந்த நிகழ்வு கூட யாரோ ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிடவில்லை என்றால் நமக்கு தெரிந்திருக்காது.

‘இந்தியாவின் ஓட்டுனர்-இல்லா மோட்டார்சைக்கிள்’- நகைச்சுவையாக இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

இதனால் இந்த நபர் மேலும் மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக நடந்து கொள்ளலாம். ஆனால் உண்மையில் இணையமும் இவ்வாறான செயல்களுக்கு ஒரு காரணமாகும். அதாவது, இந்த நபருக்கு இவ்வாறான யோசனை தோன்றி இருப்பதற்கே வேறொருவர் பதிவு செய்த வீடியோ தான் காரணமாக இருக்கக்கூடும்.

‘இந்தியாவின் ஓட்டுனர்-இல்லா மோட்டார்சைக்கிள்’- நகைச்சுவையாக இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

இவ்வாறான விதிகளை மீறுவோரின் வீடியோக்களை சமீப காலமாக அடிக்கடி பார்த்து வருகின்றோம். கடந்த செப்டம்பர் மாதத்தில் இதய நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸை கிட்டத்தட்ட 5 கிமீ தூரத்திற்கு வழி மறித்தவாறு கார் ஓட்டிய இன்னோவா கார் உரிமையாளர் நெட்டிசன்களின் எதிர்ப்பை பெற்றிருந்தார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Anand mahindra shares bike stunt video on twitter details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X