மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பொதுமக்களின் இதயங்களை மீண்டும் வென்றுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில மக்களின் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார். ஆந்திர இளைஞர்களால் 'ஜெகன் அண்ணா' என கொண்டாடப்பட்டு வரும் ஜெகன் மோகன் ரெட்டியின் திட்டங்கள் ஆந்திர மாநிலத்தையும் கடந்து, இந்தியா முழுக்க கவனம் ஈர்த்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை கட்டி தழுவி ஆறுதல் கூறுவது உள்ளிட்ட அவரது செயல்பாடுகள் எளிமையின் உச்சம்.

மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் சமீபத்தில் நடந்தது. இதில், ஆளும் தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி முக்கிய எதிர்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோக வெற்றியை பெற்றது. அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.

மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

முதல்வர் அரியணையில் அமர்ந்தது முதல் ஜெகன் மோகன் ரெட்டி செயல்படுத்தி வரும் திட்டங்கள், நாடு முழுக்க அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்று வருகின்றன. சாமானியர்களுக்கான முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பார்க்கப்படுகிறார். இந்த சூழலில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக, கடந்த சனிக்கிழமை ஆந்திர மாநிலத்திற்கு வந்தார்.

மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் கவர்னர் ஈஎஸ்எல் நரசிம்மன் உள்ளிட்டோர் வரவேற்றனர். முன்னதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை வரவேற்பதற்காக, தாடேப்பள்ளியில் உள்ள தனது வீட்டில் இருந்து விஜயவாடாவில் உள்ள கண்ணாவரம் விமான நிலையத்திற்கு, ஜெகன் மோகன் ரெட்டி நேற்று முன் தினம் (ஜூலை 13) சென்று கொண்டிருந்தார்.

மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

கண்ணாவரம் பகுதியில்தான் விஜயவாடா விமான நிலையம் அமைந்துள்ளது. பொதுவாக முதல் அமைச்சர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளை வகிப்பவர்கள் பயணிக்கும் வாகனத்திற்கு பின்னால், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களுக்காக மேலும் சில கான்வாய் வாகனங்கள் அணிவகுத்து வரும். இதன்படிதான் ஜெகன் மோகன் ரெட்டியும் பயணித்து கொண்டிருந்தார்.

மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

இந்த சூழலில் விஜயவாடாவில் உள்ள பென்ஸ் சர்க்கிள் பகுதியை அடைந்தபோது, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கான்வாய் வாகனங்களுக்கு பின்னால், ஆம்புலன்ஸ் ஒன்று அவசர அவசரமாக வந்து கொண்டிருந்தது. பொதுவாக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர கால வாகனங்கள் வந்தால் மனித நேயத்துடன் ஒதுங்கி அவற்றுக்கு வழி விட வேண்டும்.

மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

எனினும் இந்தியாவில் பலர் இதனை கடைபிடிப்பது கிடையாது. இதனால் சில சமயங்களில் அவசர கால வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன. இதுபோன்ற அவலங்களை இந்தியாவில் நம்மால் அடிக்கடி பார்க்க முடிகிறது. ஆனால் அவசர கால வாகனங்கள் வந்தால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அனைவருக்கும் முன் உதாரணமாக மாறியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.

மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

தனது கான்வாய் வாகனங்களுக்கு பின்னால் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருப்பதை ஜெகன் மோகன் ரெட்டி கவனித்து விட்டார். உடனே தனது கான்வாய் வாகனங்கள் அனைத்தையும் ஓரமாக நிறுத்தும்படி உடன் வந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் மூலம் ஆம்புலன்ஸ் அப்பகுதியை எளிதாக கடப்பதை ஜெகன் மோகன் ரெட்டி உறுதி செய்தார்.

மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

இதற்காக ஜெகன்மோகன் ரெட்டி அங்கு 5 நிமிடங்கள் காத்திருந்தார். ஆம்புலன்ஸ் சென்ற பிறகுதான் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு முன் உதாரணம் என்றால் மிகையல்ல. இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து, ஜெகன் மோகன் ரெட்டியை மக்கள் மனதார பாராட்டி கொண்டிருக்கின்றனர்.

மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

உயிருக்கு போராடுபவர்களை சுமந்து வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடுவது நம் அனைவரின் கடமை. ஆனால் இதனை செய்ய சிலருக்கு மனம் வருவதில்லை. சிலருக்கு மனம் இருந்தாலும், பதற்றம் காரணமாக தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். சரி, ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு எப்படிதான் வழி விடுவது?

மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

இந்திய நகரங்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தவை. எனவே இதர வாகன ஓட்டிகள் சரியாக வழி ஏற்படுத்தி கொடுக்காவிட்டால், ஆம்புலன்ஸ் அந்த இடத்தை எளிதாக கடக்க முடியாது. ஆம்புலன்ஸின் சைரன் ஒலி உங்களுக்கு கேட்டால், மற்ற வாகனங்கள் உடனே சாலையின் இடது புறத்திற்கு (Left Side) நகர்ந்து விட வேண்டும்.

மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

இதன் மூலமாக சாலையில் வலது புறத்தில் (Right Side) நெரிசல் குறைந்து வழி கிடைக்கும். இதனை பயன்படுத்தி கொண்டு, ஆம்புலன்ஸ் அந்த இடத்தை எளிதாக கடந்து விட முடியும். ஆம்புலன்ஸ் வந்தால், அனைவரும் உடனடியாக இடது புறத்திற்கு செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். அரசாங்கமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதனை செய்ய முன் வரலாம்.

மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

அதே சமயம் இடது புறத்திற்கு ஒதுங்குவதுடன் மட்டுமல்லாமல், ஆம்புலன்ஸ் கடக்கும் வரை அங்கு போக்குவரத்தும் நிறுத்தப்பட வேண்டும். அதாவது ஆம்புலன்ஸ் அப்பகுதியை பாதுகாப்பாக கடக்கும் வரை மற்ற வாகனங்கள் அனைத்தும் இடது புறத்தில் ஒதுங்கி நிற்க வேண்டும். ஆம்புலன்ஸ் உடனேயே பயணித்து கொண்டிருக்க கூடாது.

மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

அதேபோல் ஆம்புலன்ஸ் வரும்போது இடது புறத்திற்கு ஒதுங்குவதில் நிதானமாக இருங்கள். பதற்றம் வேண்டாம். ஒரு வேளை நீங்கள் பதறினால், இன்னும் சிலர் ஆம்புலன்ஸில் செல்ல வேண்டியதாகி விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள். அத்துடன் சாலையோரங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்யாதீர்கள். சாலையோரங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.

மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

ஏனெனில் ஏராளமான வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவதால், சாலை குறுகலாகி விடுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இத்தகைய சமயங்களில் மற்ற வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்கினாலும் கூட ஆம்புலன்ஸ் கடப்பது கடினம்தான். சாலையின் இடது புறம் முழுவதையும் பார்க்கிங் வாகனங்கள் ஆக்கிரமித்திருந்தால், மற்ற வாகன ஓட்டிகளால் ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க முடியாமல் போய் விடும்.

மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்னலுக்காக நிற்க வேண்டிய அவசியமில்லை. சிக்னலை மீறி செல்லலாம். அதேபோல் ராங் சைடில் பயணிப்பதற்கு கூட ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அனுமதி உள்ளது. அதேபோல் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுப்பதற்காக நீங்களும் சிக்னலை மீறி செல்லலாம். அது தவறு கிடையாது.

மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

உங்கள் பின்னால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் ஏதேனும் இருந்தால், உங்களால் சிக்னலை மீறி செல்ல முடியும். இது சட்டப்பூர்வமானதுதான். ஆனால் இப்படி ஒரு விதி இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. அதனால் சிக்னலை கடக்கலாமா? வேண்டாமா? என அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். இனி இந்த குழப்பம் உங்களுக்கு வேண்டாம்.

மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

அதேபோல் வாகனங்களில் பயணம் செய்யும் போது கூடுமான வரை இயர் போன் பயன்படுத்தாதீர்கள். அத்துடன் அதிக சப்தத்துடன் பாடல்களை கேட்பதையும் தவிர்த்து விடுங்கள். இவற்றை நீங்கள் செய்தால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்களின் சைரன் ஒலி உங்களுக்கு கேட்காமல் போய் விடும். ஆம்புலன்ஸ் சுமந்து வருவது உங்கள் மனதுக்கு நெருக்கமானவராக கூட இருக்கலாம்.

Source: SakshiPost

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Andhra CM Jaganmohan Stops His Convoy To Make Way For Ambulance. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X