ஜெய் ஜெகன்... ஆந்திர மக்களின் வங்கி கணக்கில் குவியும் பெரும் தொகை! எவ்ளோனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க

பிற மாநில மக்களுக்கு பொறாமை ஏற்படும் வகையில், ஆந்திர மக்களின் வங்கி கணக்குகளில், பெரும் தொகையை அம்மாநில அரசு செலுத்தி வருகிறது.

ஜெய் ஜெகன்... ஆந்திர மக்களின் வங்கி கணக்கில் குவியும் பெரும் தொகை! எவ்ளோனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க

உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா வைரஸின் கோர பிடியில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. மனித குலத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது.

ஜெய் ஜெகன்... ஆந்திர மக்களின் வங்கி கணக்கில் குவியும் பெரும் தொகை! எவ்ளோனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க

முன்னதாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள் பலர் வேலை இழந்தனர். ஏனெனில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் இந்தியாவில் பொது போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

ஜெய் ஜெகன்... ஆந்திர மக்களின் வங்கி கணக்கில் குவியும் பெரும் தொகை! எவ்ளோனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க

இதனால் பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என எந்தவிதமான பொது போக்குவரத்து வாகனங்களும் இயங்கவில்லை. இதில், கடுமையான பாதிப்பை சந்தித்தது ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள்தான். ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள் பலர் தினசரி வருமானத்தை நம்பி உள்ளனர். ஆனால் திடீரென வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டதால், அவர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

ஜெய் ஜெகன்... ஆந்திர மக்களின் வங்கி கணக்கில் குவியும் பெரும் தொகை! எவ்ளோனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க

தற்போது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்களுக்கு மட்டுமே இது மகிழ்ச்சியான செய்தி. ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அதிரடி நடவடிக்கையால், அம்மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள் உள்ளம் நெகிழ்ந்து போயுள்ளனர்.

ஜெய் ஜெகன்... ஆந்திர மக்களின் வங்கி கணக்கில் குவியும் பெரும் தொகை! எவ்ளோனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க

ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய முதல் அமைச்சராக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த 2019ம் ஆண்டு மே மாத கடைசியில் பதவியேற்று கொண்டார். அரியணை ஏறியதும் அதிரடியான பல திட்டங்களை ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்தார். இதில், பல திட்டங்கள் நாடு முழுவதும் கவனம் பெற்றன.

ஜெய் ஜெகன்... ஆந்திர மக்களின் வங்கி கணக்கில் குவியும் பெரும் தொகை! எவ்ளோனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க

அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாயை அலவன்ஸாக வழங்குவதுதான் இந்த பிரம்மாண்டமான திட்டத்தின் நோக்கம்.

ஜெய் ஜெகன்... ஆந்திர மக்களின் வங்கி கணக்கில் குவியும் பெரும் தொகை! எவ்ளோனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க

இன்ஸ்சூரன்ஸ் பிரீமியம், லைசென்ஸ் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்காக அவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். எனவே ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள் மத்தியில் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் பலர் தற்போது பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.

ஜெய் ஜெகன்... ஆந்திர மக்களின் வங்கி கணக்கில் குவியும் பெரும் தொகை! எவ்ளோனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க

இதனால் அவர்களுக்கு உதவும் வகையில், 4 மாதங்களுக்கு முன்னதாகவே, தற்போது ஆந்திர பிரதேச மாநில அரசு ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா திட்டத்திற்கான நிதியை விடுவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 2.62 லட்சம் பயனாளிகளுக்கு, ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதனால் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.

ஜெய் ஜெகன்... ஆந்திர மக்களின் வங்கி கணக்கில் குவியும் பெரும் தொகை! எவ்ளோனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க

ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா திட்டத்தின் கீழ், 2,62,493 பயனாளிகளுக்கு 262.49 கோடி ரூபாயை அரசு டிரான்ஸ்பர் செய்துள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பயனாளிகள் உடன் டிஜிட்டல் முறையில் நடந்த கூட்டத்தின்போது, ஜெகன் மோகன் ரெட்டி இதனை தெரிவித்தார்.

ஜெய் ஜெகன்... ஆந்திர மக்களின் வங்கி கணக்கில் குவியும் பெரும் தொகை! எவ்ளோனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க

இந்த பணத்தை உண்மையான காரணங்களுக்கு, பயனுள்ள வகையில் பயன்படுத்தும்படி பயனாளிகளிடம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கேட்டு கொண்டுள்ளார். அதற்கு பதிலாக மது குடிப்பதற்கு இந்த பணத்தை செலவழிக்க கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அப்படி மது அருந்தினால் பயணிகள் மற்றும் டிரைவர் இருவருக்குமே ஆபத்து ஏற்படும் எனவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஜெய் ஜெகன்... ஆந்திர மக்களின் வங்கி கணக்கில் குவியும் பெரும் தொகை! எவ்ளோனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால், நீண்ட இடைவெளிக்கு பின் பொது போக்குவரத்து வாகனங்களை இயக்க அனுமதி கிடைத்துள்ளது. இதன்படி தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பஸ்கள் ஓட தொடங்கியுள்ளன. அத்துடன் ஆட்டோ, டாக்ஸிகளை இயக்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட பயணிகள்தான் பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஜெய் ஜெகன்... ஆந்திர மக்களின் வங்கி கணக்கில் குவியும் பெரும் தொகை! எவ்ளோனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க

இந்த கட்டுப்பாடுகள் தவிர, மக்களும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சமே இதற்கு காரணம். எனவே சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதனால் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களுக்கு தற்போதும் பெரிய அளவில் வருமானம் இல்லை.

ஜெய் ஜெகன்... ஆந்திர மக்களின் வங்கி கணக்கில் குவியும் பெரும் தொகை! எவ்ளோனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க

இப்படிப்பட்ட சூழலில், அரசிடம் இருந்து ஆந்திர ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்களுக்கு கிடைத்துள்ள 10,000 ரூபாய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொரோனா அச்சத்தால் வரும் காலங்களில், சொந்த வாகனங்களின் பயன்பாடே அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கார் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Andhra Government Releases Rs.10,000 Financial Assistance To Each Of 2.62 Lakh Auto, Taxi Drivers. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X