இனி ஆந்திராவுக்கு செல்லனும்னா இது கட்டாயம்!! வந்தது புதிய உத்தரவு...

அவசரகால பாஸ் (e-pass) வைத்திருந்தால் தான் மாநிலம் விட்டு அடுத்த மாநிலத்திற்கு பயணிக்க முடியும் என்ற நிலைமை கொரோனா வைரஸ் நமது நாட்டில் பரவ ஆரம்பத்தில் நேரத்தில் இருந்தது.

இனி ஆந்திராவுக்கு செல்லனும்னா இது கட்டாயம்!! வந்தது புதிய உத்தரவு...

ஆனால் இப்போது இவ்வாறான நடவடிக்கைகள் இந்தியாவின் சில மாநிலங்களில் இல்லை. நமது அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்திலும் இல்லாமல் தான் இருந்தது.

இனி ஆந்திராவுக்கு செல்லனும்னா இது கட்டாயம்!! வந்தது புதிய உத்தரவு...

ஆனால் தற்போது மீண்டும் ஆந்திராவில் இந்த ஊரடங்கு காலத்தில் வாகனத்தில் பயணிப்பதற்கான பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக டிஜிபி டி கௌதம் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் சமீபத்தில் தான் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டது.

இனி ஆந்திராவுக்கு செல்லனும்னா இது கட்டாயம்!! வந்தது புதிய உத்தரவு...

இதனால் கடந்த ஞாயிற்று கிழமையே ஊரடங்கு உத்தரவுகளை மதித்து பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதை டிஜிபியும், கமிஷ்னர் பதினி ஸ்ரீனிவாசுலுவும் சில போலீஸ் அதிகாரிகளுடன் முக்கிய நகர்புற பகுதிகளில் பார்வையிட்டனர்.

இனி ஆந்திராவுக்கு செல்லனும்னா இது கட்டாயம்!! வந்தது புதிய உத்தரவு...

அப்போது பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மதித்து நடப்பதாகவும், நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை எந்தவொரு பிரச்சனையுமின்றி அமல்படுத்துவதில் தங்களது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர் எனவும் போலீஸ் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.

இனி ஆந்திராவுக்கு செல்லனும்னா இது கட்டாயம்!! வந்தது புதிய உத்தரவு...

இ-பாஸ் குறித்து பேசிய அவர்கள், "ஊரடங்கு உத்தரவின்போது நண்பகல் 12 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 6 மணி வரையில் மாநிலத்திற்குள் நுழைவதற்கும், பயணிப்பதற்குமான விதிமுறைகள் குறித்து ட்விட்டர் மற்றும் எங்களது பிற உதவி எண்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து ஏராளமான கோரிக்கைகளை நாங்கள் பெற்று வருகிறோம்.

இனி ஆந்திராவுக்கு செல்லனும்னா இது கட்டாயம்!! வந்தது புதிய உத்தரவு...

இதனை தொடர்ந்து தான் இ-பாஸ் முறையை கொண்டுவர நாங்கள் முடிவு செய்தோம். மேற்கூறப்பட்ட அவசர காலத்தில் பயணிப்பதற்கான பாஸ் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை நாங்கள் உருவாக்கி வருகின்றோம்.

இனி ஆந்திராவுக்கு செல்லனும்னா இது கட்டாயம்!! வந்தது புதிய உத்தரவு...

இ-பாஸ்களை சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியிடம் இருந்து யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ளலாம். இருந்தாலும், அவசியமான அவசர பயணங்களை மட்டுமே மேற்கொள்ளுங்கள் என பொதுமக்களை நான் கேட்டு கொள்கிறேன்" என கூறியுள்ளனர்.

இனி ஆந்திராவுக்கு செல்லனும்னா இது கட்டாயம்!! வந்தது புதிய உத்தரவு...

கொரோனா வைரஸ் குறித்து பரவும் வதந்திகளுக்கு பதிலளித்த டிஜிபி, இவ்வாறான வதந்திகளை தற்போதைய சூழலில் சமூக வலைத்தள பக்கங்களில் பரப்புவோர் எவராயினும் அவர்கள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.

இனி ஆந்திராவுக்கு செல்லனும்னா இது கட்டாயம்!! வந்தது புதிய உத்தரவு...

சமீபத்தில் தான் கோவிட்-19 குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக ஆந்திர எதிர்கட்சி தலைவர் என்.சந்திரபாபு நாய்டு மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. ஊரடங்கின் போது எதாவது விதிமீறல்கள் நடப்பின் உடனே போலீஸாரை 100 அல்லது 112 என்ற அழைப்புபேசி எண்களை பயன்படுத்தி அழைக்குமாறு மக்களை டிஜிடி கேட்டு கொண்டுள்ளார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Police to issue e-passes for entry into Andhra Pradesh. Read All Details In Tamil.
Story first published: Wednesday, May 12, 2021, 2:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X