ஒரே நாள், ஒரே பகுதி: போலீஸிடம் சிக்கிய 90ஆயிரம் பேர்... அதிர்ச்சி தகவல்...!

ஒரே நாளில், சென்னையின் ஒரே பகுதியில் மட்டும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்மீது போக்குவரத்து விதிமுறை மீறியதாக, போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை போலீஸிடம் ஒரே நாளில், ஒரே பகுதியில் மட்டும் சிக்கிய 90ஆயிரம் போர்... அதிர்ச்சி தகவல்...!

அடுக்குமாடி குடியிருப்பிற்கும், விசாலமான சாலைகளுக்கும் பெயர்போன பகுதிதான் சென்னை அண்ணாநகர். இந்த பகுதியில் ஒரு சிறிய வீடாவது கிடைத்துவிடாத, என பெரும் பணக்காரர்கள்கூட ஏங்கும் வகையில், புகழ்வாய்ந்த பகுதியாக இது இருக்கின்றது.

சென்னை போலீஸிடம் ஒரே நாளில், ஒரே பகுதியில் மட்டும் சிக்கிய 90ஆயிரம் போர்... அதிர்ச்சி தகவல்...!

அதற்கேற்ப, வணிக நிறுவனங்கள், நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் என பல அப்பகுதியில் செயல்பட்டு வருகின்றன. மேலும், சென்னையின் முக்கிய பகுதிகளும் இதுவும் ஒன்றாக இருக்கின்றது.

சென்னை போலீஸிடம் ஒரே நாளில், ஒரே பகுதியில் மட்டும் சிக்கிய 90ஆயிரம் போர்... அதிர்ச்சி தகவல்...!

இதுபோன்ற சில காரணங்களால் மக்கள் அதிகம் புழங்கும் பகுதியாக இது உள்ளது. ஆகையால், இந்த பகுதியில் நிகழும் குற்றச் சம்பவங்களையும், போக்குவரத்து விதிமீறல்களையும் தவிர்க்கும் விதமாக, சென்னை நகர போலீஸார் அப்பகுதி முழுவதிலும் ஆங்காங்கே சிசிடிவி கேமிராக்களைப் பொருத்தியுள்ளனர்.

சென்னை போலீஸிடம் ஒரே நாளில், ஒரே பகுதியில் மட்டும் சிக்கிய 90ஆயிரம் போர்... அதிர்ச்சி தகவல்...!

அந்த வகையில், அண்ணா நகரின் திருமங்களம், சாந்தி காலனி, ஜவஹர்லால் நேரு சாலை மற்றும் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 64 கேமிராக்களைப் பொருத்தியுள்ளனர். இவையனைத்தும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்தந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னை போலீஸிடம் ஒரே நாளில், ஒரே பகுதியில் மட்டும் சிக்கிய 90ஆயிரம் போர்... அதிர்ச்சி தகவல்...!

இவையனைத்தும், ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின்மூலம் ரூ. 3.5 கோடி செலவில் பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. சென்னையின் முதல் போக்குவரத்து ஒழுங்குமுறை கொண்ட மண்டலமாக, அப்பகுதியை மாற்றும்நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை போலீஸிடம் ஒரே நாளில், ஒரே பகுதியில் மட்டும் சிக்கிய 90ஆயிரம் போர்... அதிர்ச்சி தகவல்...!

இதற்காக, நவீன தொழிற்நுட்பங்களையும் ஹூண்டாய் நிறுவனம், அண்ணா நகர் போக்குவரத்து போலீஸுக்கு வழங்கியுள்ளது. அந்தவகையில், வாகனங்களின் நம்பர் பிளேட்டை தானாக அடையாளம் காணல் மற்றும் சிக்னலை மீறும் வாகனங்களை தானாக கண்டறிதல் உள்ளிட்ட ஆட்டோ இன்டலிஜென்ஸ் திறன் கொண்ட இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

MOST READ: டேங்கி லிண்டர்! ஹிந்துஸ்தான் அம்பாஸிடரின் வண்ணத்தை மெருகேற்ற கருத்து கேட்கும் ஜெர்மன் அம்பாஸிடர்!

சென்னை போலீஸிடம் ஒரே நாளில், ஒரே பகுதியில் மட்டும் சிக்கிய 90ஆயிரம் போர்... அதிர்ச்சி தகவல்...!

இவையனைத்தும் பொருத்தப்பட்டு, சில நாட்களே ஆன நிலையில், அவை தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மேலும், இதன் கன்ட்ரோல்கள் அண்ணாநகர் ரவுண்டனா அருகில் உள்ள போக்குவரத்து கண்கானிப்பு மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை போலீஸிடம் ஒரே நாளில், ஒரே பகுதியில் மட்டும் சிக்கிய 90ஆயிரம் போர்... அதிர்ச்சி தகவல்...!

இந்நிலையில், கடந்த வாரத்தின் ஒரே நாளில் மட்டும், அதாவது, வெறும் 24 மணி நேரத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக கூறி, சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளின் மீது, அண்ணாநகர் போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்யதுள்ளனர்.

MOST READ: இந்தியாவில் 300சிசி மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்குகிறது 22 கிம்கோ நிறுவனம்!

சென்னை போலீஸிடம் ஒரே நாளில், ஒரே பகுதியில் மட்டும் சிக்கிய 90ஆயிரம் போர்... அதிர்ச்சி தகவல்...!

அதில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியது, அதி வேகம், சிக்னலை மீறியது, வெள்ளை கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்தியது, தவறான பாதையில் சென்றது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவையனைத்தும், சென்னையின் ஓர் சிறு பகுதியான அண்ணா நகரில் மட்டும் ஒரே நாளில் அரங்கேறியவையாகும்.

சென்னை போலீஸிடம் ஒரே நாளில், ஒரே பகுதியில் மட்டும் சிக்கிய 90ஆயிரம் போர்... அதிர்ச்சி தகவல்...!

போக்குவரத்து போலீஸாரின் இந்த புதிய சிஸ்டம், தேசிய தகவல் மையத்துடன் இணைந்து செயல்படுவதால், விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு இ-செல்லாண் அவரவர்களின் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதில், முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து வாகன ஓட்டிகளும் 24 மணி நேரங்களில் அபராதத் தொகையைச் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

MOST READ: யமஹாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்... புதிய தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம்!

சென்னை போலீஸிடம் ஒரே நாளில், ஒரே பகுதியில் மட்டும் சிக்கிய 90ஆயிரம் போர்... அதிர்ச்சி தகவல்...!

மேலும், இதில் மிகப்பெரிய குற்றங்களாக கருதப்படுபவர்கள், நீதிமன்றத்திற்கு சென்று, குறிப்பிட்ட ஆவணங்களைச் சமர்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவற்றை மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை போலீஸிடம் ஒரே நாளில், ஒரே பகுதியில் மட்டும் சிக்கிய 90ஆயிரம் போர்... அதிர்ச்சி தகவல்...!

ஏற்கனவே சென்னையின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில், சில செயல்பாட்டில் உள்ளன. பல கேமிராக்கள் பெயருக்காக பொருத்தப்பட்டதைப் போன்று வேலை செய்யாமல் இருக்கின்றன.

சென்னை போலீஸிடம் ஒரே நாளில், ஒரே பகுதியில் மட்டும் சிக்கிய 90ஆயிரம் போர்... அதிர்ச்சி தகவல்...!

ஆகையால், இவையனைத்தையும் ஒழுங்குபடுத்தி, அண்ணாநகர் பகுதியில் மேற்கொண்டதைப் போன்று கடும் நடவடிக்கை மேற்கொண்டால் பல லட்சம் விதிமீறல் வாகன ஓட்டிகள் சிக்குவதுடன், போக்குவரத்து விதிமீறல்களை தவிர்க்க வழிவகை செய்யும் என தெரிகிறது. ஆகையால், இதுபோன்ற கடும் நடவடிக்கை சென்னை முழுவதும் கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
AnnaNagar Police Books 90k Traffic Offenders In 1 Day. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X