சென்னைக்கு வந்த உலகின் பிரம்மாண்ட சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருக்கும் செய்தி பரபரப்பாக ஊடகத்தினரால் பகிரப்படுகிறது. அன்டனோவ் ஏஎன்- 124 ரஸ்லன் என்ற அந்த பிரம்மாண்ட சரக்கு விமானத்தின் சிறப்புகளை காண

உலகின் மிகப் பிரம்மாண்டமான சரக்கு விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருக்கும் செய்தி பரபரப்பாக ஊடகத்தினரால் பகிரப்படுகிறது. அன்டனோவ் ஏஎன்- 124 ரஸ்லன் என்ற அந்த பிரம்மாண்ட சரக்கு விமானத்தின் சிறப்புகளை இந்த செய்தியில் காணலாம்.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

சீனாவிலுள்ள ஜியாங் நகரில் இருந்து ராட்சத கருவிகள் இந்த விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. இதுபோன்ற பிரம்மாண்ட விமானம் சென்னையில் தரை இறங்குவது இதுவே முதல்முறையாகும். சென்னைவாசிகளை பெருமை கொள்ள செய்திருக்கும் இந்த விமானத்தில் பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

கடந்த 1982 முதல் 2004ம் ஆண்டு வரை இந்த விமானம் உற்பத்தி செய்யப்பட்டது. மொத்தம் 55 விமானங்கள் தயாரிக்கப்பட்டன. அதில், பல விமானங்கள் ஓரங்கட்டப்பட்ட நிலையில், தற்போது பயன்பாட்டில் சில விமானங்கள் மட்டுமே உள்ளன. சோவியத் ரஷ்யாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த உக்ரைன் நாட்டின் அன்டனோவ் நிறுவனவம்தான் இந்த பிரம்மாண்ட விமானங்களை உருவாக்கியது. ராணுவ பயன்பாட்டிற்காக ராட்சத ராணுவ தளவாடங்களை ஏற்றிச் செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டது.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

இந்த விமானத்தில் 150 டன் சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். இந்த விமானம் 226.3 அடி நீளமும், 68.2 அடி உயரமும், 240.5 அடி இறக்கை அகலமும் கொண்டது. இந்த விமானத்தில் 150 டன் வரை பாரம் ஏற்றிச் செல்ல முடியும். அதன் மேற்புறத்தில் இருக்கும் பயணிகள் பகுதியில் 88 பேர் பயணிக்கலாம்.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

இந்த விமானத்தில் 4 பிராக்ரெஸ் டி-18டி டர்போஃபேன் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு எஞ்சினும், 229.5 kN த்ரஸ்ட் சக்தியை வெளிப்படுத்தும். விமானத்தின் எடை, எரிபொருள் மற்றும் பாரத்தை சேர்த்து, அதிகபட்சமாக 405 டன் எடையுடன் மேல் எழும்பி பறக்கும் திறன் வாய்ந்தது.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

எரிபொருள் முழுமையாக நிரப்பினால், 5,200 கிமீ தூரம் வரை இடைநில்லாமல் பறந்து செல்லும் திறன் வாய்ந்நதது. அதிகபட்சமாக 39,370 அடி உயரத்தில் பறக்கும். மணிக்கு 865 கிமீ வேகத்தை அதிகபட்சமாக எட்டக்கூடியது இந்த விமானம். சராசரியாக 800 முதல் 850 கிமீ வேகத்தில் செல்லும்.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

இந்த விமானத்தை இயக்குவதற்கு தலைமை விமானி, துணை விமானி, வழிகாட்டும் நிபுணர், ரேடியோ மேன், 2 லோடு மாஸ்டர்கள், மூத்த விமான பொறியாளர் மற்றும் விமான பொறியாளர் உள்பட குறைந்தது 6 பேர் தேவைப்படும்.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

ரஷ்யா மட்டுமின்றி, இந்த விமானம் உலகின் பல்வேறு நாடுகளில் சரக்கு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுகிறது. மொத்தம் 24 விமானங்கள் தற்போது பயன்பாட்டில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் மட்டுமே மிகப்பெரிய விமானங்களை கையாளும் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், முதல்முறையாக சென்னை விமான நிலையமும், இதுபோன்ற பெரிய விமானத்தை சிறப்பாக கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டனோவ் ஏன்- 225 விமானத்தை பற்றி ஏற்கனவே டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் சிறப்புச் செய்தியை படித்திருப்பீர்கள். கடந்த ஆண்டு இந்த பிரம்மாண்ட விமானம், ஐரோப்பாவில் இருந்து மின்சார ஜெனரேட்டரை ஏற்றிக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில், இந்த விமானம் ஹைதராபாத்தில் தரையிறங்கியது.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

ஏர்பஸ் ஏ380 ஜுஜுபி

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380ஐ விட இந்த விமானம் பெரியது. ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பயணிகள், சரக்கு என இரண்டையும் சேர்த்து 157 டன் எடையை சுமந்து செல்லும் அல்லது ஏற்ற முடியும். ஆனால், இந்த சரக்கு விமானம் 253 டன் சரக்குடன் மேலே எழும்பும் திறன் கொண்டது.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

கிட்டத்தட்ட ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கான வடிவத்தை பெற்றது. அதாவது, கால்பந்து மைதானத்தைவிட 10 அடி மட்டுமே குறைவாக இருக்கும். இந்த விமானத்தில் 52 யானைகளுக்கு இணையான எடையை ஏற்ற முடியும்.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

காக்பிட், பணியாளர்கள் அறை தவிர்த்து சரக்கு ஏற்றும் இடம் மட்டும் 43.32 மீட்டர் நீளமும், 6.4 மீட்டர் அகலமும், 4.4 மீட்டர் உயரமும் கொண்டது. எனவே, மிக பிரம்மாண்டமான வடிவம் கொண்ட சரக்குகளை கூட அசால்ட்டாக ஏற்ற முடியும்.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

இந்த விமானம் மணிக்கு 850 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 15,300 கிமீ தூரம் பறக்கும். ஆனால், சரக்கு எடைக்கு தகுந்தவாறு பறக்கும் தூரம் குறையும். தற்போது 116 டன் எடையுடைய ஜெனரேட்டரை ஏற்றி வந்தால், ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 4,000 கிமீ தூரம் மட்டுமே பறக்கும்.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

பணியாளர்கள் இந்த விமானத்தை இயக்குவதற்கு பைலட்டுகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என 6 பேர் தேவை. அதுதவிர, விமானத்தில் மொத்தமாக 20 பேர் பணிபுரிகின்றனர். ஹைதராபாத் வந்தபோது 20 விமான பணியாளர்கள் மற்றும் சரக்கை கண்காணிக்கும் பொறுப்பில் 6 பணியாளர்கள் என மொத்தம் 26 பேர் வந்திருந்தனர்.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

சாதனைகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில் இருக்கும் இந்த விமானம் இதுவரை 240 சாதனைகளை படைத்துள்ளது. அதில், 186.7 டன் எடையுடையே ஒற்றை சரக்கை ஏற்றிச் சென்றதுடன், 42.1 மீட்டர் நீளமுடைய சரக்கையும் ஏற்றிச் சென்று பல உலக சாதனைகளை படைத்திருக்கிறது.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

இந்த விமானத்திற்கான வாடகை மிக அதிகம். 2004ம் ஆண்டு டென்மார்க் நாட்டிலிருந்து கஜகஸ்தான் நாட்டிற்கு செல்வதற்கு 3 லட்சம் டாலர் வாடகை வசூலிக்கப்பட்டது. இப்போது எவ்வளவு மடங்கு அதிகரித்திருக்கும் என்பதே தலை சுற்ற வைக்கும் செய்திதான்.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

பொதுவாக சரக்கு விமானங்களில் பின்புறம்தான் வழி மற்றும் சரக்கு ஏற்றுவதற்கான மேடை உள்ளிட்டவற்றை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த விமானத்தின் முன்பகுதி வழியாகத்தான் சரக்குகள் ஏற்றப்படுகிறது. அதாவது, காக்பிட் அமைந்திருக்கும் மூக்குப் பகுதியை மேலே தூக்கிக் கொள்ளும். இதனால், பின்புற கதவு, மேடைகள் போன்றவற்றின் எடை வெகுவாக குறைந்திருக்கிறது.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

கடந்த 1988ம் ஆண்டு முதல்முறையாக பறந்தது இந்த விமானம். ரஷ்ய விண்வெளி ஓடத்தை தரையிறங்கிய இடத்திலிருந்து ஏவக்கூடிய இடத்திற்கு சுமந்து செல்வதற்காகவே வடிவமைக்கப்பட்டது. பின்னர், வர்த்தக ரீதியில் இயக்கப்பட்டு வருகிறது. 1989ம் ஆண்டு முதுகில் புரான் விண்வெளி ஓடத்துடன் பாரிஸ் ஏர் ஷோவிற்கு வருகை தந்திருந்தது.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

வான்வழியாக எடுத்துச் செல்லவே முடியாது என்று கருதும் பிரம்மாண்ட பொருட்களை கூட எளிதாக எடுத்துச் சென்று சேவையாற்றி வருகிறது. 6 எஞ்சின்கள், 32 சக்கரங்கள் என பிரம்மாண்ட இறக்கைகள், வால் பகுதி என வியக்க வைக்கும் இந்த விமானத்தில் போயிங் 737 விமானத்தையே அடக்கிவிட முடியுமாம்.

சென்னைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தின் சிறப்பம்சங்கள்!!

இந்தியாவில் நடுத்தர வகை விமானங்களை தயாரிப்பதற்காக, அனில் அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன், இந்த விமானத்தை தயாரித்த உக்ரைன் நாட்டின் ஆன்டோனோவ் நிறுவனம் கடந்த மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலமாக, பொது சந்தை மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கான விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஒத்துழைப்புடன் தயாரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இரண்டாம் உலகப்போரை நினைவுபடுத்தும் வகையில் ராயல் என்பீல்டு நிறுவனம் லான்ச் செய்த பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளின் ஆல்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
One of world's biggest cargo plane Antonov AN124 has landed in Chennai airport. We compiled some interesting technical facts about AN124. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X