வைரலாகும் மாட்டு சாணி கோட்டிங்: மஹிந்திரா காரை சாணியால் பூசி மெழுகிய கேன்சர் மருத்துவர்...!

அஹமதாபாத்தைத் தொடர்ந்து, புனே நகரத்தில் உள்ள ஒருவரும் தனது காருக்கு மாட்டு சாணத்தால் கோட்டிங் கொடுத்துள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

வைரலாகும் மாட்டு சாணி கோட்டிங்: மஹிந்திரா காரை சாணியால் பூசி மொழுகிய கேன்சர் மருத்துவர்...!

தமிழகத்தில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த மே மாதம் 4ம் தேதி முதல் தொடங்கியது. இது கடந்த 29ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் அனல் காற்று வீசிக் கொண்டுதான் இருக்கின்றன. ஜன்னலைத் திறந்து காற்று வாங்கும் காலம் மாறி, தற்போது அனல் காற்று வீசுது ஜன்னலை அடையுங்கள் என்று கூறும் அளவிற்கு கடுமையான அனல் காற்று வீசி வருகின்றது.

வைரலாகும் மாட்டு சாணி கோட்டிங்: மஹிந்திரா காரை சாணியால் பூசி மொழுகிய கேன்சர் மருத்துவர்...!

இதற்கு, மழை பொய்த்துபோனதும், வளர்ச்சி என்ற பெயரில் மரங்களையும், காடுகளையும் நாம் அழித்துக் கொண்டு வருவதும்தான் முக்கிய காரணமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில், அண்மையில் தோன்றிய ஃபானி புயலும் தமிழகத்தை தாக்காமல், தாக்கிவிட்டுச் சென்றுள்ளது.

வைரலாகும் மாட்டு சாணி கோட்டிங்: மஹிந்திரா காரை சாணியால் பூசி மொழுகிய கேன்சர் மருத்துவர்...!

ஃபானி புயல் தாக்கியது என்னமோ, ஒடிசா மாநிலத்தைத் தான், ஆனால், அதன் தாக்கம் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் கடுமையான பின் விளைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடுமையான வெயிலை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் தமிழகத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திசை மாறி, ஒடிசாவின் புரி பகுதி அருகே கரையைக் கடந்தது.

வைரலாகும் மாட்டு சாணி கோட்டிங்: மஹிந்திரா காரை சாணியால் பூசி மொழுகிய கேன்சர் மருத்துவர்...!

அப்போது, இந்த ஃபானி புயல் அதன் சுற்றுப்பகுதியில் இருந்த அனைத்து ஈரக் காற்றையும் தன்னோடு வாரி எடுத்துக்கொண்டு, மற்ற பகுதியில் அதிக வெப்பச் சூழ்நிலைக்கு தள்ளிவிட்டது. சாதரணமாகவே, தமிழகத்தில் வெயில் உக்கரமாக வீசிக் கொண்டிக்கும். இந்த நிலையில், ஃபானி புயலின் இந்த தீவிரத்தால் கடுமையான வறட்சிக்கு தமிழகம் உட்பட சில மாநிலங்கள் தள்ளப்பட்டன.

வைரலாகும் மாட்டு சாணி கோட்டிங்: மஹிந்திரா காரை சாணியால் பூசி மொழுகிய கேன்சர் மருத்துவர்...!

இதுபோன்ற சில காரணங்கள் தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெயில், நமது கிரிக்கெட் வீரர் சச்சினைப் போல் தினமும் சதமடித்து வருகின்றது. இதில், பெரும்பாலும் வாகன ஓட்டிகளே அதிகமாக சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

வைரலாகும் மாட்டு சாணி கோட்டிங்: மஹிந்திரா காரை சாணியால் பூசி மொழுகிய கேன்சர் மருத்துவர்...!

இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஷேஜல் ஷா என்ற பெண்மணி, வெயில் கொடுமையில் இருந்து தன்னையும், தன் காரையும் காக்கும் வகையில், மாட்டுச் சாணத்தால் கோட்டிங் செய்திருந்தார். அவ்வாறு, சாணத்தால் கோட்டிங் செய்யப்பட்டிருந்த காரின் புகைப்படங்கள், சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ள அனைத்திலும் வைரலாக பரவ ஆரம்பித்தன.

வைரலாகும் மாட்டு சாணி கோட்டிங்: மஹிந்திரா காரை சாணியால் பூசி மொழுகிய கேன்சர் மருத்துவர்...!

காருக்கு இவ்வாறு மாட்டு சாணத்தால் கோட்டிங் கொடுத்ததால், காரின் உட்பக்க தட்பவெப்ப நிலை சீராக இருப்பதாக அவர் தெரிவத்திருந்தார். மேலும், இவ்வாறு கோட்டிங் செய்யப்பட்ட காரில் உச்சி வெயிலில் செல்லும்போதுகூட வெயிலின் தாக்கம் பெரிதாக காரின் உள்பகுதியில் தெரியவில்லை என அவர் ஏஎன்ஐ-க்கு தெரிவித்திருந்தார்.

வைரலாகும் மாட்டு சாணி கோட்டிங்: மஹிந்திரா காரை சாணியால் பூசி மொழுகிய கேன்சர் மருத்துவர்...!

அவ்வாறு, காரின் வெளிப்பகுதி 45 டிகிரி செல்சியஸ் இருந்தபோதும், காருக்குள்ளே ஏசியை ஆன் செய்யாமலே, 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக காணப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். ஷேஜலின் இந்த முயற்சியானது, சற்று முனுமுனைப்பை ஏற்படுத்தினாலும், இயற்கைக்கு எந்தவொரு தீங்கும் விளைவிக்காத இந்த நடவடிக்கை பலரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

வைரலாகும் மாட்டு சாணி கோட்டிங்: மஹிந்திரா காரை சாணியால் பூசி மொழுகிய கேன்சர் மருத்துவர்...!

அந்தவகையில், தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் தனது மஹிந்திரா எஸ்யூவி காருக்கு மாட்டு சாண கோட்டிங்கைக் கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் தகவலை கார்டாக் என்ற ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

வைரலாகும் மாட்டு சாணி கோட்டிங்: மஹிந்திரா காரை சாணியால் பூசி மொழுகிய கேன்சர் மருத்துவர்...!

புனே பகுதியில் வசித்து வரும் நவ்நத் தூதல் என்பவர்தான், தற்போது இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். இவர் ஓர் தனியார் மருத்துவமனையில் மூத்த மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர், தனது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரை வெயிலில் இருந்து காப்பதற்காக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஷேஜலைப் போன்று, மாட்டு சாண கோட்டிங்கைக் கொடுத்துள்ளார்.

வைரலாகும் மாட்டு சாணி கோட்டிங்: மஹிந்திரா காரை சாணியால் பூசி மொழுகிய கேன்சர் மருத்துவர்...!

அந்தவகையில், டாக்டர் நவ்நத் துதால், தனது காரின் கண்ணாடிப் பகுதிகளைத் தவிர, மற்ற அனைத்து பக்கங்களுக்கும் சாணத்தால் கோட்டிங் வழங்கியுள்ளார். அவ்வாறு, அவர் காருக்கு மூன்று கோட்டிங் வழங்கியுள்ளார். இதனால், காருக்கு வெளியிலிருக்கும் தட்பவெப்ப நிலையைக் காட்டிலும் 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக, காரின் கேபினுக்குள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

வைரலாகும் மாட்டு சாணி கோட்டிங்: மஹிந்திரா காரை சாணியால் பூசி மொழுகிய கேன்சர் மருத்துவர்...!

மேலும், பேசிய அவர், "மாட்டு சாணியை கோட்டிங்காக காருக்கு வழங்குவதால், பெயிண்டிற்கு எதாவது ஆகிவிடுமோ என அஞ்ச வேண்டும். அது ஒருபோதும் உங்கள் காரின் பெயிண்டை பாதிக்காது. இது காரில் ஏசியை ஆன் செய்யாமலே, குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவும். அதோபன்று, சாணத்தைப் பூசுவதனால் காருக்குள்ளே துர்நாற்றமும் வீசவில்லை" என தெரிவித்தார்.

வைரலாகும் மாட்டு சாணி கோட்டிங்: மஹிந்திரா காரை சாணியால் பூசி மொழுகிய கேன்சர் மருத்துவர்...!

மும்பையில் செயல்பட்டு வரும் டாடா கேன்சர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் நவ்நத் தூதல், மாட்டு சாணம் மற்றும் அதன் சிறுநீர் குறித்த படிப்பை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மாட்டின் கோமியம், கேன்சர் நோயாளிகளிகளுக்கு சிறந்த மருந்தாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

வைரலாகும் மாட்டு சாணி கோட்டிங்: மஹிந்திரா காரை சாணியால் பூசி மொழுகிய கேன்சர் மருத்துவர்...!

இந்தியர்களின் பண்டைய கால வாழ்க்கையில் இருந்தே மாட்டு சாணம் பல்வேறு விதங்களில் பயன்பட்டு வருகின்றது. தற்போது, மாட்டு சாணம் வரட்டியாக சில கோவில்களில் பொங்கள் வைக்க பயன்படுகிறது. ஆனால், முந்தைய காலக்கட்டத்தில் வீட்டு வாசலை பூசி மொழுகவும், மண் சுவர்களில் கோட்டிங் கொடுக்கவும் இது பயன்படுத்தப்பட்டு வந்தது.

வைரலாகும் மாட்டு சாணி கோட்டிங்: மஹிந்திரா காரை சாணியால் பூசி மொழுகிய கேன்சர் மருத்துவர்...!

இவ்வாறு, மாட்டு சாணத்தை வீடுகளில் பயன்படுத்துவதனால், வீட்டில் இருக்கும் துர்தேவதை, நம்மை விட்டு விலகும் என நம்முடையை மூதாதையர்கள் நம்பிக்கையாக இருந்து வந்தது. காலப்போக்கில், அனைத்து மண் சுவர் வீடுகளும் செங்கற்கள் வீடுகளாக மாறியதை அடுத்து இந்த பழக்க வழக்கங்கள் தற்போது முற்றிலுமாக அழிந்துவிட்டது. ஆனால், இதனை மீண்டும் புதுப்பிக்கும் விதமாக கார்களுக்கு மாட்டுச் சாணத்தால் கோட்டிங் கொடுக்கும் பழக்கம் புழக்கத்தில் வர ஆரம்பித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Applying Cow Dung On Cars Is Trending In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X