Just In
- 11 hrs ago
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- 13 hrs ago
அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய ஸ்கார்பியோ காரின் அறிமுகம் எப்போது? அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!
- 14 hrs ago
ரயில் இன்ஜின் ஹாரனிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா? எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
- 16 hrs ago
மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்ப அவரு வாங்கியிருக்க கார பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!
Don't Miss!
- News
லடாக்கில் பாலம்..ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி...சீனா சொந்தம் கொண்டாடுவதை ஏற்கமாட்டோம் - அரிந்தம் பக்சி
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Movies
கேன்ஸ் திரைப்பட விழா : மோடியை பாராட்டிய மாதவன்… எதுக்குனு தெரியுமா ?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விமானத்தில் பவர் பேங்க்கை கொண்டு செல்ல முடியுமா? அடிக்கடி போறவங்களுக்கு கூட இந்த வினோதமான ரூல்ஸ் தெரியாது!
விமானத்தில் பவர் பேங்க்குகளை கொண்டு செல்வது தொடர்பாக பின்பற்றப்பட்டு வரும் விதிமுறை குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முன்பெல்லாம் விமானங்களில் பயணம் செய்வது என்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டது. ஆனால் தற்போது கிட்டத்தட்ட அனைவராலும் விமானத்தில் எளிதாக பயணம் செய்ய முடிகிறது. இதன் மூலம் ஒரு காலத்தில் மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்பட்ட விமான பயணம் தற்போது நமக்கு நன்கு பரிட்சயமான ஒன்றாக மாறிவிட்டது.

எனினும் விமான பயணங்கள் தொடர்பான ஒரு சில விதிமுறைகள் குறித்தும், அந்த விதிமுறைகள் ஏன் பின்பற்றப்பட்டு வருகின்றன? என்பது குறித்தும் நமக்கு இன்னமும் கூட சரியாக தெரிவதில்லை என்பதுதான் உண்மை. விமானத்தில் பவர் பேங்க்குகளை (Power Bank) கொண்டு செல்வது தொடர்பாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு விதிமுறையை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

பொதுவாக விமானத்தின் செக்-இன் பேக்கில் (Check-in Bag) உங்கள் செல்போன்களுக்கான பவர் பேங்க்குகளை கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் உங்கள் கேபின் பேக்கில் (Cabin Bag) பவர் பேங்க்குகளை கொண்டு செல்ல முடியும். விமான நிறுவனங்களால் பின்பற்றப்பட்டு வரும் இந்த விதிமுறை கேட்பதற்கு உங்களுக்கு ஏதோ வினோதமாக தோன்றலாம்.

அத்துடன் இந்த விதிமுறைக்கு பின்னால் உள்ள காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அதை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, செக்-இன் பேக் மற்றும் கேபின் பேக் ஆகிய இரண்டுக்கும் இடையேயான வித்தியாசத்தை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். முதலில் செக்-இன் பேக் பற்றி பார்த்து விடலாம்.

செக்-இன் பேக்கை உங்களுடன் கையில் எடுத்து செல்ல முடியாது. ஆனால் நீங்கள் பயணிக்கும் அதே விமானத்தில்தான் செக்-இன் பேக்கும் வரும். அதாவது செக்-இன் பேக்கை டெக்கிற்கு (Deck) கீழே, சரக்குகளுடன் வைத்து கொண்டு வருவார்கள். அடுத்தது கேபின் பேக். கேபின் பேக்கிற்கு அதன் பெயரிலேயே அர்த்தம் உள்ளது.

கேபின் பேக்கை விமானத்தின் கேபினுக்கு உள்ளேயே எடுத்து செல்லலாம். அதாவது உங்கள் பயணம் முழுவதும் அதை நீங்கள் உங்களுடனேயே வைத்திருக்க முடியும். பவர் பேங்க்கை விமானத்தின் கேபினுக்கு உள்ளேயே அனுமதிக்கும்போது, ஏன் சரக்குகள் வைத்திருக்கும் பகுதியில் மட்டும் அனுமதிப்பதில்லை? என்ற குழப்பம் உங்களுக்கு ஏற்படலாம்.

பாதுகாப்பு கருதிதான் செல்போன்களுக்கான பவர் பேங்க்குகளை செக்-இன் பேக்கில் வைப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருதலாம். பொதுவாக பவர் பேங்க்குகளில் லித்தியம் செல்கள் (Lithium Cells) இருக்கும். லித்தியம் பேட்டரிகள் தீ பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அப்படி விமானத்தில் தீ பற்றும் பட்சத்தில் மோசமான சூழ்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் காரணமாகவே விமானத்தின் செக்-இன் பேக்குகளில் பவர் பேங்க்குகள் அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியானால் ஏன் கேபின் பேக்கில் மட்டும் பவர் பேங்க்குகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது? என்ற சந்தேகம் உங்கள் மனதில் தற்போது எழுந்திருக்கலாம்.

விமானத்தின் சரக்குகள் வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் செக்-இன் பேக்கிற்கு உள்ளே இருக்கும் பவர் பேங்க் காரணமாக தீப்பற்றினால் அதனை கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். அல்லது தீ பற்றியிருப்பது மிகவும் தாமதமாக தெரிய வரலாம். இந்த தாமதம், பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதுபோன்ற சூழல்களில் ஒவ்வொரு நொடியும் முக்கியம்.

ஆனால் பவர் பேங்க் பயணிகளுடன் இருந்தால், அதாவது கேபினில் இருந்தால், தீ பற்றினாலும் உடனடியாக கண்டறிந்து விட முடியும். அத்துடன் விமானத்தின் கேபினில் தீ அணைப்பான்களும் வைக்கப்பட்டிருக்கும். எனவே ஒருவேளை தீ பற்றினாலும் கூட அதனை உடனடியாக கண்டறிந்து, வேகமாகவும், எளிதாகவும் அணைத்து விட முடியும்.

விமானத்தின் செக்-இன் பேக்குகளில் பவர் பேங்க்குகளை வைப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதற்கும், கேபின் பேக்கில் வைப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதற்கும் இதுவே காரணம். செல்போன்களை போல் பவர் பேங்க்குகளும் தற்போது நமது வாழ்வின் ஒரு அங்கமாக மாறி விட்டன. தற்போது நம்மில் பலரும் பவர் பேங்க்குகளை கூடவே வைத்திருப்பதை வழக்கமாக பின்பற்றி வருகின்றனர்.

ஆனால் பவர் பேங்க்குகள் தொடர்பாக பின்பற்றப்பட்டு வரும் இந்த விதிமுறை தெரியாமல் விமான நிலையங்களில் பயணிகள் பலர் அடிக்கடி சிரமப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது உங்களுக்கு இந்த விதிமுறை பற்றியும், அதற்கான காரணம் என்ன? என்பதும் தெரிந்து விட்டது. எனவே இனிமேல் இந்த விதிமுறையை மனதில் வைத்து கொண்டு செயல்படுங்கள்.
Note: Images used are for representational purpose only.
-
வழியில வேறு எங்கேயுமே சார்ஜ் போடல... 200 கிமீட்டரை அசால்டாக கடந்த ஓலா எலெக்ட்ரிக் உரிமையாளர்!
-
பரிதாபத்திற்குள்ளான பஜாஜ் பல்சர்.. இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே நினைச்சு பார்த்திருக்க மாட்டாங்க...
-
ஸ்கோடா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் ஸ்லாவியா... ஏப்ரல் மாசம் எவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கு தெரியுமா?