இந்திய சாலைகள் ரொம்ப ஆபத்தானது! நைட் டிராவல் போறதுக்கு முன்னாடி இதை எல்லாம் ஒருவாட்டி கவனிச்சிடுங்க!!

சொந்த கார்ல இரவு நேர பயணத்திற்கு பிளான் பண்ணியிருக்கீங்களா?, இதோ நீங்கள் கடைபிடிக்க டாப்9 முக்கிய டிப்ஸ்களை இப்பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

இந்திய சாலைகள் ரொம்ப ஆபத்தானது! நைட் டிராவல் போறதுக்கு முன்னாடி இதை எல்லாம் ஒருவாட்டி கவனிச்சிடுங்க!!

மிகவும் ஆபத்தான சாலைகளைக் கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் பெரும்பாலான சாலைகளில் பகல் நேரத்தில் பயணிப்பதே மிகுந்த சவாலானதாக இருக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் இரவு நேர பயணத்தைப் பற்றி நாங்கள் சொல்லவே தேவையில்லை. ஏனெனில், இந்தியாவில் இரவு நேர பயணம் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தவர்கள் பலர் நம்மில் உண்டு.

இந்திய சாலைகள் ரொம்ப ஆபத்தானது! நைட் டிராவல் போறதுக்கு முன்னாடி இதை எல்லாம் ஒருவாட்டி கவனிச்சிடுங்க!!

குறிப்பாக, சாலையில் மின் விளக்கு இல்லாதது, நடு ரோட்டில் ஆடு, மாடுகள் படுத்திருப்பது, ஹை பீம் மின் விளக்குகளை ஒளிர விட்டவாறு எதிரில் வரும் வாகனங்கள் செல்வது இப்படி பல்வேறு பிரச்னைகளும், இன்னல்களும் இந்தியாவின் அனைத்தும் சாலைகளிலும் தென்படுகின்றன.

இந்திய சாலைகள் ரொம்ப ஆபத்தானது! நைட் டிராவல் போறதுக்கு முன்னாடி இதை எல்லாம் ஒருவாட்டி கவனிச்சிடுங்க!!

எனவேதான், குறிப்பிட்ட விஷயங்களை முன்கூட்டியே இரவு நேர பயணத்தின்போது செய்துவிட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம். அந்தவகையில், இரவு நேர பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டிய டாப்9 முக்கிய வழிகாட்டுதல்களையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

இந்திய சாலைகள் ரொம்ப ஆபத்தானது! நைட் டிராவல் போறதுக்கு முன்னாடி இதை எல்லாம் ஒருவாட்டி கவனிச்சிடுங்க!!

மின் விளக்குகள்

இரவு நேர பயணத்தை மேற்கொள்ளும் முன்பு வாகனத்தின் அனைத்து மின் விளக்குகளும் சரியாக இயங்குகின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக ஹெட்லைட், ஸ்டாப் மின் விளக்கு மற்றும் இன்டிகேட்டர்கள் பக்காவான இயக்க நிலையில் இருக்க வேண்டும். ஒரு வேலை வாகனத்தில் பழைய மின் விளக்கு பிரச்னையுடன் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக அவற்றை மாற்றிவிடுவது நல்லது.

இந்திய சாலைகள் ரொம்ப ஆபத்தானது! நைட் டிராவல் போறதுக்கு முன்னாடி இதை எல்லாம் ஒருவாட்டி கவனிச்சிடுங்க!!

இந்தியாவின் பெரும்பாலான நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகள் என்பதே இருக்காது. இந்த மாதிரியான நேரங்களில் நம்முடைய வாகனங்களில் மின் விளக்குகள் இல்லை என்றால் நிலைமை மிக மோசமாகிவிடும். ஆகையால், மின் விளக்குகள் நன்றாக ஒளிர்வதை ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்திய சாலைகள் ரொம்ப ஆபத்தானது! நைட் டிராவல் போறதுக்கு முன்னாடி இதை எல்லாம் ஒருவாட்டி கவனிச்சிடுங்க!!

பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள்

இந்த விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் தேவை. ஆமாங்க, பின்னாடி வரும் வாகனம் அதிக வெளிச்சத்தை எழுப்பும் மின் விளக்குடன் வருமானால் அது எவ்வளவு இடைவெளியில் இருக்கின்றது என்பதை நம்மால் தெளிவாக உணர முடியாது. ஆகையால், காருக்குள் இருக்கும் பின் பக்கத்தைப் பார்க்க உதவும் கண்ணாடிகளை (IRVM) ஒலி எதிர்ப்பு (Anti glare) திறன் கொண்டதாக மாற்றிக் கொள்ள வேண்டும். இது தெளிவான பார்வை திறனை வழங்க உதவும்.

இந்திய சாலைகள் ரொம்ப ஆபத்தானது! நைட் டிராவல் போறதுக்கு முன்னாடி இதை எல்லாம் ஒருவாட்டி கவனிச்சிடுங்க!!

தற்காப்புடன் வாகனத்தை ஓட்டுவது உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

பாதுகாப்பாக பயணம் செய்வது உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது, ரேஸ் மற்றும் அவசரமான இயக்குதலை முழுமையாக தவிர்த்தல் வேண்டும். இதுமட்டுமின்றி, மது அருந்துவது அறவே கூடாது. இவையனைத்தும் நம் பாதுகாப்பான பயணத்திற்கு குந்தகத்தை விளைவித்துவிடும்.

இந்திய சாலைகள் ரொம்ப ஆபத்தானது! நைட் டிராவல் போறதுக்கு முன்னாடி இதை எல்லாம் ஒருவாட்டி கவனிச்சிடுங்க!!

விண்ட்ஷீல்டை சுத்தமாக வைத்திருங்கள்

விண்ட்ஷீல்டு சுத்தமாக இல்லையெனில் இரவு நேர பயணம் மிக மோசமானதாக மாறிவிடும். அதாவது, தெளிவான பார்வையை நம்மால் பார்க்க முடியாது. எதிரில் வாகனத்தின் ஒளி நம் பார்வையை முழுமையாக மறைக்க நேரிடும். ஆகையால், இரவு நேர பயணத்திற்கு முன்னர் விண்ட் ஷீல்டு தூய்மையாக இருக்கின்றதா என்பதை ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்திய சாலைகள் ரொம்ப ஆபத்தானது! நைட் டிராவல் போறதுக்கு முன்னாடி இதை எல்லாம் ஒருவாட்டி கவனிச்சிடுங்க!!

ஹை-பீம், லோ-பீம் எப்போது பயன்படுத்த வேண்டும்?

அடர் இருட்டான சாலைகளில் பயணிக்கும்போது குறிப்பாக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஹை-பீமைப் பயன்படுத்தலாம். ஆனால், வாகன நெரிசல் சற்று கூடுதலாக இருக்கும் நகர்புற சாலைகளில் ஹை-பீமை பயன்படுத்துவது எதிர்புறத்தில் வருபவர்களுக்கு மிக மோசமான பார்வை திறனை வழங்க வழிவகுக்கும். ஆகையால், நகர்புறங்களில் பயணிக்கும்போது லோ-பீம் மின் விளக்கைப் பயன்படுத்துவதே மிக சிறந்தது.

இந்திய சாலைகள் ரொம்ப ஆபத்தானது! நைட் டிராவல் போறதுக்கு முன்னாடி இதை எல்லாம் ஒருவாட்டி கவனிச்சிடுங்க!!

தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்

இரவு என்றால் பலருக்கு கட்டுக்கடங்காமல் தூக்கம் வரும். ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தினால் இரவு நேர பயணத்தில் ஈடுபடுகின்றோம் என்றால் அதிகம் நீர் அல்லது காஃபி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இது தூக்கம் மற்றும் கலைப்பை விரட்ட உதவும். இதுதவிர, ஏசி-யை ஆஃப் செய்துவிட்டு புத்துணர்வான வெளிக்காற்றை வாங்குவது உங்கள் குறைக்க உதவும்.

இந்திய சாலைகள் ரொம்ப ஆபத்தானது! நைட் டிராவல் போறதுக்கு முன்னாடி இதை எல்லாம் ஒருவாட்டி கவனிச்சிடுங்க!!

பொறுமையாவே போங்க

கட்டுப்படுத்தக் கூடிய வேகத்தில் பயணிப்பது மிக சிறந்தது. ஏனெனில், இந்திய நெடுஞ்சாலைகளில் மனிதன் எப்போது குறுக்கே வருவான், விலங்கு எப்போது குறுக்கே ஓடும் என்பது யாருமே அறியாத ஒன்று. ஆகையால், முடிந்தளவு கட்டுப்படுத்தக் கூடிய வேகத்தில் பயணிப்பது மிக சிறந்த பயண அனுபவத்தை வழங்க உதவும்.

இந்திய சாலைகள் ரொம்ப ஆபத்தானது! நைட் டிராவல் போறதுக்கு முன்னாடி இதை எல்லாம் ஒருவாட்டி கவனிச்சிடுங்க!!

பகல் நேரத்தைக் காட்டிலும் இரவு நேரங்களில் பார்வை குறைவாகவே தெரியும் என்பதால் பள்ளம், மேடு மற்றும் வளைவு ஆகியவற்றைக் காண்பதில் அதிகம் சிரமம் நிலவும். இதுமாதிரியான நேரத்தில் குறைந்த வேகத்தில் சென்றால் நல்ல கட்டுப்பாட்டைப் பெற முடியும். அதாவது, திடீர் திருப்பங்களில் வாகனத்தின் வேகத்தைக் குறைத்து பயணத்தை மேலும் தொடர முடியும்.

இந்திய சாலைகள் ரொம்ப ஆபத்தானது! நைட் டிராவல் போறதுக்கு முன்னாடி இதை எல்லாம் ஒருவாட்டி கவனிச்சிடுங்க!!

மலை சாலைகளில் இதை மறந்துவிடாதீங்க

மலை பாதையில் பயணிக்கும்போது எந்த பக்கமும் கவனத்தைச் சிதறடிக்காமல் சாலைமீது மட்டும் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். ஏனெனில், மலை பாதைகளில் கொண்டை ஊசி வலைவுகள் பொதுவானவை. அவற்றில் வாகனங்களை திருப்புவது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. ஆகையால், மலை பாங்கான சாலைகளில் முன்னெச்சரிக்கையுடன் பயணிப்பது நல்லது.

இந்திய சாலைகள் ரொம்ப ஆபத்தானது! நைட் டிராவல் போறதுக்கு முன்னாடி இதை எல்லாம் ஒருவாட்டி கவனிச்சிடுங்க!!

திட்டமிடுதல்

திடீர் பயணத்தின்போது நிச்சயம் நம்மால் முன்கூட்டியே திட்டமிட முடியாது. இருப்பினும், சிறிது நேரம் ஒதுக்கி எந்த பாதையில் செல்லலாம், நாம் தேர்வு செய்யும் பாதை பாதுகாப்பானதா, எரிபொருள் நிலையங்கள் போதுமான அளவில் இருக்குமா அறிந்து பயணத்தைத் தொடங்குவது நல்ல பலனை அளிக்கும். இரவு நேர பயணத்தின்போது பாதை தெரியாமல் சிக்கலில் சிக்கியவர்கள்குறித்த செய்தி அவ்வப்போது வெளி வந்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான நிலையைத் தவிர்க்க திட்டமிடுதல் உதவும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Are You Planning To Make Night Drive; Here is Some Usefull Tips For You. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X