ராணுவ வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி... மத்திய அரசின் அதிரடி உத்தரவிற்கு காரணம் இதுதான்...

ராணுவ வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராணுவ வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி... மத்திய அரசின் அதிரடி உத்தரவிற்கு காரணம் இதுதான்...

உலகில் காற்று அதிகம் மாசடைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் பல்வேறு முக்கியமான நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து வருகின்றன. நாட்டின் தலைநகர் டெல்லி இதற்கு மிகச்சிறந்த உதாரணம். எனவே காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ராணுவ வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி... மத்திய அரசின் அதிரடி உத்தரவிற்கு காரணம் இதுதான்...

இந்தியாவில் காற்று அதிகம் மாசடைந்து கொண்டிருப்பதற்கு பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை மிக முக்கியமான காரணம். எனினும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் மூலம் வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் காற்று மாசுபாடு பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என நம்பப்படுகிறது.

ராணுவ வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி... மத்திய அரசின் அதிரடி உத்தரவிற்கு காரணம் இதுதான்...

மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. அதற்குள் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் வாகனங்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தி விட வேண்டும். இதற்கு இன்னும் சுமார் 8 மாதங்கள் மட்டுமே உள்ளன.

ராணுவ வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி... மத்திய அரசின் அதிரடி உத்தரவிற்கு காரணம் இதுதான்...

எனவே இரு சக்கர மற்றும் நான்கு சக்கர என அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் மாடல்களை வேக வேகமாக பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து வருகின்றன. இந்தியாவில் பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான வாகனங்கள் தற்போதே கிடைக்க தொடங்கி விட்டன. வரும் மாதங்களில் இன்னும் பல்வேறு வாகனங்கள் பிஎஸ்-6 விதிகளுக்கு இணையான தரத்துடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.

ராணுவ வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி... மத்திய அரசின் அதிரடி உத்தரவிற்கு காரணம் இதுதான்...

இந்த சூழலில், இந்தியாவின் ஆர்ம்டு (ராணுவம், கப்பற்படை, விமானப்படை உள்ளிட்டவை) மற்றும் பாராமிலிட்டரி படைகளின் கவச வாகனங்கள் மற்றும் சிறப்பு வாகனங்களுக்கு பிஎஸ்-6 விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ராணுவ வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி... மத்திய அரசின் அதிரடி உத்தரவிற்கு காரணம் இதுதான்...

இந்த விதிமுறைகளுக்கு ஏற்ப பொருத்தமான இன்ஜினை உருவாக்க கணிசமான கால அவகாசம் தேவை என்பதால், ஆர்ம்டு மற்றும் பாராமிலிட்டரி படைகளின் கவச மற்றும் சிறப்பு வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கே பாதுகாப்பு தொடர்பான சவால்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

ராணுவ வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி... மத்திய அரசின் அதிரடி உத்தரவிற்கு காரணம் இதுதான்...

முன்னதாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அரசாங்க பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்களுக்கு பிஎஸ்-4 விதிமுறைகளில் இருந்தும் கடந்த 2017ம் ஆண்டு மே 19ம் தேதி அரசு விலக்கு அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவ வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி... மத்திய அரசின் அதிரடி உத்தரவிற்கு காரணம் இதுதான்...

இதனிடையே மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் காரணமாக வாகனங்களின் விலை சற்று உயரவுள்ளது. குறிப்பாக டீசல் கார்களின் விலை கணிசமாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நீங்கள் புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டிருந்தால், பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே வாங்கி விடுங்கள். இதன் மூலம் விலை உயர்வை தவிர்க்கலாம்.

ராணுவ வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி... மத்திய அரசின் அதிரடி உத்தரவிற்கு காரணம் இதுதான்...

இந்திய ஆட்டோமொபைல் துறை தற்போது தள்ளாடி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். மாருதி சுஸுகி உள்பட அனைத்து முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனையும் கடந்த சில மாதங்களாகவே மிக கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆனால் எதிர்வரும் பண்டிகை காலம் மற்றும் பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு கொஞ்சம் முன்பாக வாகன விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பிஎஸ்-6 விதிமுறையால் ஏற்படும் விலை உயர்வை தவிர்ப்பதற்காக மக்கள் வாகனங்களை அதிகளவில் வாங்குவார்கள் என வாகன உற்பத்தி நிறுவனங்கள் நம்புகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Armed, Paramilitary Forces Armoured, Specialised Vehicles Exempted From BS-6 Norms. Read in Tamil
Story first published: Saturday, August 3, 2019, 18:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X