கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... கொத்து கொத்தாக தூக்கும் தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்...

கொரோனா வைரஸை ஒழித்து கட்டுவதற்காக, தமிழ்நாடு போலீசார் தரமான சம்பவத்தை செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... கொத்து கொத்தாக தூக்கும் தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்...

கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ் (கோவிட்-19), மனித குலத்திற்கே பெரும் சவாலாக மாறியுள்ளது. கோவிட்-19 வைரஸை எதிர்கொள்ள முடியாமல், வல்லரசு நாடுகள் கூட தடுமாறி கொண்டுள்ளன. இதற்கு அமெரிக்கா ஒரு நல்ல உதாரணம். அமெரிக்கா மட்டுமின்றி இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளும் கோவிட்-19 வைரஸால் நிலைகுலைந்து போயுள்ளன.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... கொத்து கொத்தாக தூக்கும் தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்...

மக்கள் அடர்த்தி மிகுந்த இந்தியாவும் கோவிட்-19 வைரஸிடம் இருந்து தப்பவில்லை. இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு இயந்திரம் முழு வீச்சில் களத்தில் இறங்கியுள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தியாவில் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... கொத்து கொத்தாக தூக்கும் தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்...

இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு என்ற அறிவிப்பு வெளியான சமயத்தில், மக்கள் அதனை மீறி வாகனங்களில் வெளியே சுற்றினர். பொதுமக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்வதுதான் கோவிட்-19 வைரஸை வெல்வதற்கான ஆயுதம் என அரசு பல முறை எடுத்துரைத்தது. ஆனால் அரசின் எச்சரிக்கையை பெரும்பாலானோர் காதில் போட்டு கொள்ளவில்லை.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... கொத்து கொத்தாக தூக்கும் தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்...

அத்தியாவசிய பணிகள் இருந்தால் மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என அரசு கூறியிருந்தது. ஆனால் அதனை மீறி தேவையே இல்லாமல் ஒரு சிலர் ஜாலியாக வாகனங்களில் வலம் வர தொடங்கினர். எனவே அத்தகைய நபர்களுக்கு எதிராக காவல் துறை நடவடிக்கையை முடுக்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக வாகன ஓட்டிகள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர்.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... கொத்து கொத்தாக தூக்கும் தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்...

ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், பல்வேறு வித்தியாசமான நடவடிக்கைகளுக்கு காவல் துறை மாறியது. இதன்படி கோவிட்-19 வைரஸ் பற்றிய விழிப்புணர்வு தேர்வை நடத்துவது, தோப்புக்கரணம் போட சொல்வது போன்ற நடவடிக்கைகளை காவல் துறையினர் எடுத்தனர். இதற்கு ஓரளவிற்கு நல்ல பலன் கிடைத்தது.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... கொத்து கொத்தாக தூக்கும் தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்...

எனினும் கடந்த ஒரு சில நாட்களாக மக்கள் தேவையே இல்லாமல் வாகனங்களில் வெளியே வருவது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக காவல் துறை மீண்டும் கடுமையான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக, 2 லட்சத்து 50,230 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... கொத்து கொத்தாக தூக்கும் தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்...

கைது செய்யப்பட்டவர்கள் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சரியாக சொல்வதென்றால், 2 லட்சத்து 11,467 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தமிழக போலீசாரால், ஏப்ரல் 20ம் தேதி (நேற்று) காலை வரை எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... கொத்து கொத்தாக தூக்கும் தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்...

தேவை இல்லாமல் வெளியே சுற்றி திரிபவர்களை தடுப்பதற்காக, வருகின்ற நாட்களில் தமிழக போலீசாரின் நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நீங்கள் வீடுகளுக்குள் இருப்பது நல்லது. இது காவல் துறையின் நடவடிக்கைகளில் இருந்து மட்டுமல்லாது, கோவிட்-19 வைரஸ் தொற்றில் இருந்தும் உங்களை பாதுகாக்கும்.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... கொத்து கொத்தாக தூக்கும் தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்...

தமிழக போலீசார் வாகனங்களை கொத்து கொத்தாக தூக்குவதை போல், தேவை இல்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது மற்ற மாநில காவல் துறையினரும் கடும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இதற்கு கர்நாடக மாநிலம் ஒரு நல்ல உதாரணம். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸை ஒழித்து கட்ட அதிரடி... கொத்து கொத்தாக தூக்கும் தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்...

இதுதவிர குல்பர்கா போலீசாரும் வாகனங்களை பறிமுதல் செய்து கொண்டுள்ளனர். இதன்படி ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக, இதுவரை கிட்டத்தட்ட 4,500 வாகனங்களை குல்பர்கா காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்த முடியும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Around 2 Lakh Vehicles Seized By Tamil Nadu Police So Far For Violating Covid-19 Lockdown. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X