டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு இப்படியொரு ரசிகரா!! அசத்திவிட்டார் போங்க...

இந்த ஆண்டு துவக்கத்தில் டொயோட்டா நிறுவனம் அதன் பிரபல எஸ்யூவி காரான ஃபார்ச்சூனரின் 2021 வெர்சனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதனுடன் ஃபார்ச்சூனர் லெஜண்டர் காரும் கொண்டுவரப்பட்டது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு இப்படியொரு ரசிகரா!! அசத்திவிட்டார் போங்க...

ஃபார்ச்சூனர் உடன் ஒப்பிடும்போது அதன் லெஜண்டர் வெர்சன் பார்ப்பதற்கு முரட்டுத்தனமான தோற்றத்திலும், கூடுதல் ப்ரீமியம் தரத்திலும் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதனால் லெஜண்டருக்கென்றே தனி ரசிகர் கூட்டம் எல்லாம் இருக்கு.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு இப்படியொரு ரசிகரா!! அசத்திவிட்டார் போங்க...

அவர்களில் ஒருவர் தான் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர் எஸ்யூவி காரை முழுக்க முழுக்க மர பலகைகளில் உருவாக்கியுள்ளார். இது தொடர்பாக வுட் வொர்க்கிங் ஆர்ட் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ இதோ உங்களுக்காக...

Image Courtesy: Woodworking Art

தேர்வு செய்யப்பட்ட ஃபார்ச்சூனர் லெஜண்டர் காரின் படத்தை இந்த கலைஞர் பார்ப்பதில் இருந்து வீடியோ துவங்குகிறது. காரின் முன்பகுதி, பக்கவாட்டு பகுதி மற்றும் பின்பகுதிகளுக்காக ஒரு மரப்பலகையை மூன்றாக அவர் வெட்டி கொள்கிறார்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு இப்படியொரு ரசிகரா!! அசத்திவிட்டார் போங்க...

மரப்பலகை தேவைக்கு ஏற்ப வெட்டப்பட்ட உடன் காரின் பக்கவாட்டு பகுதி இரம்பத்தின் உதவியுடன் வடிவமைக்கப்படுகிறது. முதலில் கதவுகள் இல்லாமல் காரின் பக்கவாட்டு பகுதிகள் உருவாக்கப்படுகின்றன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு இப்படியொரு ரசிகரா!! அசத்திவிட்டார் போங்க...

அதன்பின்பே கதவுகள் மற்றும் சக்கர வளைவுகள் உள்ளிட்டவை கூடுதல் மரத்துண்டுகளில் கொண்டுவரப்படுகின்றன. பின்னர் வெட்டப்பட்டு தனியாக வைக்கப்பட்டிருந்த மரப்பலகைகள் பக்கவாட்டு மரப்பலகைகளுக்கு முன்பகுதியிலும், பின்பகுதியிலும் வைக்கப்படுகின்றன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு இப்படியொரு ரசிகரா!! அசத்திவிட்டார் போங்க...

காரின் வெளிப்பக்கத்தை வடிவமைக்க இந்த கலைஞர் சில தொழிற்நுட்ப கருவிகளை பயன்படுத்தினாலும், உட்புறத்தை வெறும் கையாலேயே செதுக்கியுள்ளார். உட்புற வேலைகள் முடிந்தவுடன் ஒரு மரத்துண்டின் மூலமாக இந்த மர காருக்கு மேற்கூரை கொடுக்கப்படுகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு இப்படியொரு ரசிகரா!! அசத்திவிட்டார் போங்க...

கதவுகள், பொனெட் மற்றும் பூட் ஸ்பேஸை உருவாக்குவதற்கு சில மாற்றங்கள் காரின் டிசைனில் கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது படத்தில் இருக்கும் லெஜண்டர் காருக்கும் இந்த மர லெஜண்டர் காருக்கு மேற்கூறப்பட்ட பகுதிகளில் சிறிய வித்தியாசம் இருக்கும்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு இப்படியொரு ரசிகரா!! அசத்திவிட்டார் போங்க...

ஜன்னல்களில் கண்ணாடி என்பதை கொண்டுவர மரத்துண்டுகளுக்கு கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹெட்லைட்கள் & டெயில்லைட்களுக்கு அவற்றிற்கு ஏற்ற நிறங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு இப்படியொரு ரசிகரா!! அசத்திவிட்டார் போங்க...

இந்த மரத்திலான காரின் முன்பக்க பம்பர், ஹெட்லேம்ப்கள், க்ரில் மட்டுமின்றி என்ஜின் பகுதி கூட உளியால் செதுக்கப்பட்டுள்ளது. சக்கரங்களை கூட மரத்தினால் உருவாக்கி இருப்பது தான் இதில் ஹைலைட்டே.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு இப்படியொரு ரசிகரா!! அசத்திவிட்டார் போங்க...

அதிலும் குறிப்பாக டயர்களுக்காக வட்டமாக வெட்டப்பட்ட மரத்துண்டுகளின் வெளிப்புற பரப்பு மிக சிறிய சிறிய கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த கலைஞர் லெஜண்டரின் உண்மையான அலாய் சக்கரங்களின் டிசைனை கூட அப்படியே கொண்டுவந்துள்ளார்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு இப்படியொரு ரசிகரா!! அசத்திவிட்டார் போங்க...

இந்த மர லெஜண்டர் கார் முன் மற்றும் பின்பக்கத்தில் சஸ்பென்ஷன் அமைப்பை கூட கொண்டுள்ளது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா. உட்புறத்தில் மூன்று இருக்கை வரிசைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Artist carves Toyota Fortuner Legender from wood.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X