வாகனங்களால் காற்று மாசடைவதை தவிர்க்க அருண் ஜெட்லியின் செம ஐடியா...

வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்று மாசடைவதைத் தவிர்க்க, 2030 ஆம் ஆண்டுக்குள் 30 சதவிகித எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

வாகனங்களால் காற்று மாசடைவதை தவிர்க்க அருண் ஜெட்லியின் செம ஐடியா...

உலக சந்தையில் வாகனங்களின் விற்பனை நாளுக்கு நாள் சூடிபிடித்து வரும் நிலைியல், சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

வாகனங்களால் காற்று மாசடைவதை தவிர்க்க அருண் ஜெட்லியின் செம ஐடியா...

அவ்வாறு பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை கார்பன்-டை-ஆக்ஸைடு என்னும் நச்சை வெளியிடுகிறது. இந்த நச்சால் காற்று மாசடைவதுடன் பல கொடிய நோய்களை மக்களிடையே பரப்பி வருகிறது.

வாகனங்களால் காற்று மாசடைவதை தவிர்க்க அருண் ஜெட்லியின் செம ஐடியா...

மேலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு பின்விளைவுகளையும் உருவாக்கிறது. இதனால் பசுமை வீடு விளைவு ஏற்பட்டு ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து பனிப் பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் உயர்கிறது.

வாகனங்களால் காற்று மாசடைவதை தவிர்க்க அருண் ஜெட்லியின் செம ஐடியா...

இதுபோன்ற பின்விளைவுகளைத் தவிர்க்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மக்களிடம் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையையும் ஊக்கப்படுத்தி வருகிறது.

வாகனங்களால் காற்று மாசடைவதை தவிர்க்க அருண் ஜெட்லியின் செம ஐடியா...

இதனால், எரிபொருளுக்காக பிற நாடுகளை எதிர்பார்க்கும் சூழல் தவிர்க்கப்படும். மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டு பொருளாதாரம் தக்க வைக்கப்படும்.

வாகனங்களால் காற்று மாசடைவதை தவிர்க்க அருண் ஜெட்லியின் செம ஐடியா...

இதுகுறித்து நேற்று (புதன்கிழமை) பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, அரசின் எலக்ட்ரிக் மொபிலிட்டி புரோக்ராம் மூலம் வேலை வாய்ப்பு, உற்பத்தி ஆகியவை அதிகமாகியிருப்பதாக தெரிவித்தார்.

வாகனங்களால் காற்று மாசடைவதை தவிர்க்க அருண் ஜெட்லியின் செம ஐடியா...

மேலும் பேசிய அவர், "எலக்ட்ரிக் மொபிலிட்டி ஒரு நிலைத்தன்மைக் கொண்ட, அனைவரையும் கவரக்கூடிய, அதிகளவில் பொருளாதாரம் ஈட்டக்கூடியத் திட்டமாகும். இதன் மூலம் மாசுகட்டுப்பாடு குறைக்கப்பட்டு, சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறது.

வாகனங்களால் காற்று மாசடைவதை தவிர்க்க அருண் ஜெட்லியின் செம ஐடியா...

நிதித்துறையின், பொருளாதார விவகாரங்கள் (The Department of Economic Effairs) அமைப்பு சார்பாக அரசு அதிகாரிகளின் பயன்பாட்டுக்கு 15 எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க கையெழுத்திடப்பட்டுள்ளது.

வாகனங்களால் காற்று மாசடைவதை தவிர்க்க அருண் ஜெட்லியின் செம ஐடியா...

இதன்மூலம் ஆண்டுக்கு 36 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் சேமிக்கப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், 440 டன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியிடுவதும் தவிர்க்கப்படும். இதன் அடுத்தகட்டமாக நாட்டில் 30 சதவிகிதம் வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்படும்" என அவர் தெரிவித்தார்.

Most Read Articles
English summary
Arun Jaitly Plans To 30 Percent E-Mobility In India By 2030. Read in Tamil
Story first published: Thursday, January 10, 2019, 18:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X