சாலையில் சாதாரணமாக பைக் ஓட்டி வரும் இந்த பிரபலம் யாரென்று தெரிகிறதா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க

அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா காண்டு ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார். எதற்காக? என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா?

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் முதல் அமைச்சராக இருப்பவர் பீமா காண்டு (Pema Khandu). பைக் பயணங்களில் அதிக ஆர்வம் கொண்டவரான பீமா காண்டு, ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Royal Enfield Interceptor 650) மோட்டார்சைக்கிளில் தற்போது 'லாங் டிரிப்' ஒன்றை அடித்துள்ளார். இதன்மூலமாக அனைவரின் கவனத்தையும் பீமா காண்டு ஈர்த்துள்ளார்.

சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா?

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் யிங்கியோங்கில் இருந்து பசிகாட் வரை ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளில் பயணம் செய்துள்ளார் பீமா காண்டு. இது 122 கிலோமீட்டர் தொலைவு கொண்ட சாலையாகும். இயற்கை அழகு நிறைந்த இந்த ரூட், இந்தியாவில் பைக் டிரிப் அடிப்பதற்கு மிகவும் உகந்த வழித்தடங்களில் ஒன்றாக திகழ்கிறது.

சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா?

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சுற்றுலாவை பிரபலப்படுத்தும் விதத்தில்தான் முதல்வர் பீமா காண்டு இந்த பைக் டிரிப்பை அடித்துள்ளார். அத்துடன் அருணாச்சல பிரதேசத்திற்கு பைக் ரைடர்கள் சுற்றுலா வருவதற்கு இது மிகவும் சரியான நேரம் எனவும் முதல்வர் பீமா காண்டு கூறியுள்ளார். முதல்வர் பீமா காண்டுவின் பைக் ரைடு வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

அருணாச்சல பிரதேச முதல்வர் டிரிப் அடித்த ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக் சிறப்பான டூரிங் மோட்டார்சைக்கிளாக கருதப்படுகிறது. இன்டர்செப்டார் 650 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் கடந்த ஆண்டுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்தியாவில் தற்போது கிடைக்கும் மலிவான ட்வின் சிலிண்டர் பைக்காக இது திகழ்கிறது.

சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா?

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கில், 647 சிசி, ப்யூயல்-இன்ஜெக்டட், ஆயில் மற்றும் ஏர் கூல்டு, பேரலல் ட்வின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா?

அத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச், டெலஸ்கோபிக் ஃப்ரண்ட் ஃபோர்க்குகள், ட்யூப் டைப் டயர்கள், ட்யூயல் சேனல் ஏபிஎஸ் ஆகிய வசதிகளும் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கில் உள்ளன. இந்த பைக்கின் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கின் விலை 2.37 லட்ச ரூபாயில் (எக்ஸ் ஷோரூம்) இருந்து தொடங்குகிறது.

சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா?

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் வெற்றிகரமான மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக இன்டர்செப்டார் 650 பைக்கை குறிப்பிடலாம். மலிவான விலை என்பதால், அடிக்கடி டூர் செல்லும் வாடிக்கையாளர்கள் மத்தியில் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் மிகவும் பிரபலமான மாடலாக திகழ்கிறது.

சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா?

அதே நேரத்தில் அருணாச்சல பிரதேச மாநில முதல்வர் ராயல் என்பீல்டு பைக்கில் டிரிப் அடிப்பது இது முதல் முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை அவர் ஓட்டுவதை பார்க்க முடிந்துள்ளது. இதை எல்லாம் வைத்து பார்க்கையில், கார்களை காட்டிலும் பைக்குகள் மீதுதான் அவருக்கு அதிக ஆர்வம் இருப்பது போல் தெரிகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Arunachal Pradesh Chief Minister Pema Khandu Rides Royal Enfield Interceptor 650: Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X