நடத்துனரிடம் சில்லறை கேட்டு தொந்தரவு செய்தால் சிறைத்தண்டனை- நல்லவேளை நம்ம தமிழ்நாட்டில் இல்லை, எங்கு தெரியுமா?

வடமேற்கு கர்நாடகா சாலை போக்குவரத்து அமைச்சகம் வித்தியாசமான அறிவிப்பு போஸ்டர்களை அதன் அரசு பேருந்துகளில் ஒட்டியுள்ளது. அப்படி என்ன போஸ்டர் இது? இதற்கு பொதுமக்களின் நிலைப்பாடு என்ன என்பதை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

நடத்துனரிடம் சில்லறை கேட்டு தொந்தரவு செய்தால் சிறைத்தண்டனை- நல்லவேளை நம்ம தமிழ்நாட்டில் இல்லை, எங்கு தெரியுமா?

பொதுமக்களுக்காக தான் அரசாங்கங்கள் செயல்படுகின்றன. என்றாலும் மக்களின் சீரான இயல்பு வாழ்க்கைக்காக சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் அரசாங்கங்களுக்கு ஏற்படுகிறது. அத்தகைய அறிவிப்புகள் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், பலருக்கு நன்மை பயக்ககூடியவைகளாக இருக்கும். உதாரணத்திற்கு, கொரோனா வைரஸ் பரவலால் கொண்டுவரப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவுகள்.

நடத்துனரிடம் சில்லறை கேட்டு தொந்தரவு செய்தால் சிறைத்தண்டனை- நல்லவேளை நம்ம தமிழ்நாட்டில் இல்லை, எங்கு தெரியுமா?

இந்த வகையில் NWKRTC எனப்படும் வடமேற்கு கர்நாடகா சாலை போக்குவரத்து அமைச்சகம், அரசு பேருந்துகளில் நடத்துனரிடம் அவ்வப்போது சில்லறை கேட்டு தொந்தரவு செய்வது, அரசாங்க ஊழியரை பணி செய்யவிடாமல் தடுப்பதற்கு சமம் என தனது கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அரசு பேருந்துகளில் போஸ்டர்களை ஒட்டியுள்ளது.

நடத்துனரிடம் சில்லறை கேட்டு தொந்தரவு செய்தால் சிறைத்தண்டனை- நல்லவேளை நம்ம தமிழ்நாட்டில் இல்லை, எங்கு தெரியுமா?

இதன்படி நடத்துனரை அடிக்கடி சில்லறை கேட்டு தொந்தரவு செய்யும் நபர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு அதிகப்பட்சமாக 3 வருட சிறைத்தண்டனை வரை வழங்கப்படலாம் என சட்டம் கூறுகிறது. கர்நாடகா மாநிலத்தில் NWKRTC மொத்தம் 6 மாவட்டங்களில் சாலை போக்குவரத்தை கவனித்து கொள்கிறது. இந்த 6 மாவட்டங்களில் சுமார் 4,428 கிராமங்கள் அடங்குகின்றன.

நடத்துனரிடம் சில்லறை கேட்டு தொந்தரவு செய்தால் சிறைத்தண்டனை- நல்லவேளை நம்ம தமிழ்நாட்டில் இல்லை, எங்கு தெரியுமா?

இவை அனைத்திற்கும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டம் செல்லப்படியாகும். கர்நாடகா மாநிலம் மட்டுமல்ல, நமது தமிழகம் உள்பட எந்தவொரு மாநிலத்திலும் பொது பயன்பாட்டு பேருந்தில் பயணிக்கும்போது சில்லறை சம்மந்தமாக பயணிகளுக்கும், நடத்துனர் & ஓட்டுனர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது சகஜமான ஒன்றாகவே உள்ளது.

நடத்துனரிடம் சில்லறை கேட்டு தொந்தரவு செய்தால் சிறைத்தண்டனை- நல்லவேளை நம்ம தமிழ்நாட்டில் இல்லை, எங்கு தெரியுமா?

இந்த வாக்குவாதம் சில சமயங்களில் கைக்கலப்புகளில் கூட சென்று முடிந்துள்ளன. இதனாலேயே பயணம் சில நிமிடங்கள் தாமதமாகினாலும் பரவாயில்லை என சாலை ஓரங்களில் பேருந்தை நிறுத்திவிட்டு, அடுத்ததாக பேருந்தில் இருந்து வெளியேற உள்ளவர்களுக்கு சில்லறைகளை நடத்துனர்கள் வழங்குகிறார்கள். இத்தகைய சம்பவங்களை சென்னை போன்ற மாநகரங்களில் தினந்தோறும் பார்க்க முடியும்.

நடத்துனரிடம் சில்லறை கேட்டு தொந்தரவு செய்தால் சிறைத்தண்டனை- நல்லவேளை நம்ம தமிழ்நாட்டில் இல்லை, எங்கு தெரியுமா?

கர்நாடகா தலைநகர் பெங்களூருவிலும் சரியாக அனைவருக்கும் பயணச்சீட்டுகளையும், சில்லறைகளையும் வழங்க நடத்துனர்கள் இவ்வாறான முறைகளை கையாளுகின்றனர். ஆதலால் இந்த மாநகரங்களில் அரசு பேருந்துகளில் செல்லவுள்ளீர்கள் என்றால், கட்டாயம் பயணச்சீட்டிற்கான சரியான சில்லறையினை எடுத்து செல்ல வேண்டியது அவசியமாகும். ஆனால் கிராமங்கள் நிறைந்த வடமேற்கு கர்நாடகாவில் இத்தகைய அறிவிப்பு அறிவிக்கப்பட்டிருப்பதுதான் சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

நடத்துனரிடம் சில்லறை கேட்டு தொந்தரவு செய்தால் சிறைத்தண்டனை- நல்லவேளை நம்ம தமிழ்நாட்டில் இல்லை, எங்கு தெரியுமா?

இந்த அறிவிப்பு பயணிகளை சரியான சில்லறையை எடுத்துவர வழிவகுக்கும் என்றாலும், இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான பயணிகள் NWKRTC-இன் இந்த அறிவிப்பை பேருந்துகளில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து பகல்கோட் பகுதியில் தினசரி அரசு பேருந்துகளை பயன்படுத்தும் பயணி ஒருவர், "பேருந்தில் ஏறுவதற்கு முன், சரியாக பயணச்சீட்டிற்கான தொகையினை வைத்துள்ளேனா என ஒருமுறை எனது பர்ஸை சரிப்பார்த்து கொண்டேன்.

நடத்துனரிடம் சில்லறை கேட்டு தொந்தரவு செய்தால் சிறைத்தண்டனை- நல்லவேளை நம்ம தமிழ்நாட்டில் இல்லை, எங்கு தெரியுமா?

அதன் பின்னரே நான் எனது பயணத்தை தொடர்ந்தேன். சரியான சில்லறை வைத்தில்லை என்றால் 3 வருட சிறைத்தண்டனை உண்மைத்தானா? ஆர்டிசி இந்த புதிய விதியினை தொடர்ந்து அமலில் வைத்திருந்தால், பயணிகள் தனியார் பேருந்துகளுக்கு மாறிவிடுவார்கள்" என்றார். இந்திய தண்டனை சட்டம் 21வது பிரிவின்கீழ், உச்ச நீதிமன்றம் NWKRTC ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை பொது ஊழியர்களாக அடையாளம் கண்டுள்ளது.

நடத்துனரிடம் சில்லறை கேட்டு தொந்தரவு செய்தால் சிறைத்தண்டனை- நல்லவேளை நம்ம தமிழ்நாட்டில் இல்லை, எங்கு தெரியுமா?

எனவே பணிக்கு இடையூறு விளைவிப்பது அல்லது ஓட்டுனர் (அ) நடத்துனரை பணி செய்யவிடாமல் தடுப்பது (அ) தாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு குறைந்தப்பட்சமாக ஐபிசி பிரிவு 186இன் கீழ் 3 மாத சிறைத்தண்டனையும், அதிகப்பட்சமாக பிரிவு 332 மற்றும் 335இன் கீழ் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

நடத்துனரிடம் சில்லறை கேட்டு தொந்தரவு செய்தால் சிறைத்தண்டனை- நல்லவேளை நம்ம தமிழ்நாட்டில் இல்லை, எங்கு தெரியுமா?

பேருந்துகளில் சில்லறை தொடர்பாக எழும் வாக்குவாதங்களையும், மோதல்களையும் தவிர்க்க, மாநிலம் முழுவதும் பணம் இல்லா பணப்பரிவர்த்தனையை கொண்டுவர கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது. தற்சமயம் அனைவரிடத்திலும் மொபைல் போன் இருந்தாலும், அதில் எத்தனை பேர் மொபைல் போன் மூலமாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியே.

நடத்துனரிடம் சில்லறை கேட்டு தொந்தரவு செய்தால் சிறைத்தண்டனை- நல்லவேளை நம்ம தமிழ்நாட்டில் இல்லை, எங்கு தெரியுமா?

ஆதலால் கர்நாடக அரசு பேருந்துகளில் டிஜிட்டல் மூலமாக பயணச்சீட்டிற்கான தொகையினை செலுத்தும் முறை பயன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் சில காலங்கள் ஆகலாம். இதன் மூலமாக மட்டுமே பேருந்துகளில் உருவாகும் சில்லறை மோதல்களை தடுக்க இயலும். நமது தமிழகத்தில் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் முறை வருவதற்கு இன்னும் பல ஆண்டுகளாகிவிடும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Asking for 'change' in NWKRTC government buses can land you in jail.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X