விண்ணை முட்டும் விலை உயர்வு பெட்ரோல், டீசல் வாங்க நாடு விட்டு நாடு பயணிக்கும் மக்கள்...!

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாம் பெரும் நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கிறோம். ஆனால் அஸ்ஸாம் மக்களோ, பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்க விசித்திரமான ஒரு வழியை கண்டறிந்துள்ளனர்.

By Arun

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாம் பெரும் நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கிறோம். ஆனால் அஸ்ஸாம் மக்களோ, பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்க விசித்திரமான ஒரு வழியை கண்டறிந்துள்ளனர். நாடு விட்டு நாடு சென்று பெட்ரோல், டீசல் வாங்கி வருவதுதான் அந்த வழி. நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கிறதா? ஆனால் நம்பிதான் ஆக வேண்டும். இந்த ருசிகரமான செய்தியை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

 விண்ணை முட்டும் விலை உயர்வு பெட்ரோல், டீசல் வாங்க நாடு விட்டு நாடு பயணிக்கும் மக்கள்...!

விலை கிடு...கிடு...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயிக்கப்படுவது இல்லை. கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்தால், அதை காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை உயர்த்தப்படும். ஆனால் கச்சா எண்ணெய்யின் விலை அதலபாதாளத்திற்கு சென்றாலும் கூட பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்படாது. பெட்ரோல், டீசல் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம்தான் இதற்கு காரணம்.

 விண்ணை முட்டும் விலை உயர்வு பெட்ரோல், டீசல் வாங்க நாடு விட்டு நாடு பயணிக்கும் மக்கள்...!

வரி...வரி...வரி...

மத்திய அரசின் சுங்க வரி, அந்தந்த மாநில அரசுகளின் வாட் வரி உள்ளிட்டவைகள்தான் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு இருப்பதற்கு காரணம். இந்த வரிகளை எல்லாம் தவிர்த்து விட்டு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் வெகுவாக ஒலிக்க தொடங்கியுள்ளன. ஏனெனில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரும்போது, தற்போது உள்ளதை காட்டிலும் அதன் விலை வெகுவாக குறைந்து விடும். ஏனென்றால், ஜி.எஸ்.டியில் அதிகபட்சம் 28 சதவீதத்திற்கு மேல் வரி விதிக்க முடியாது. ஆனால் தற்போதோ அதை விட அதிக அளவிலான வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதாவது பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையில் 50 சதவீதத்தை நாம் வரியாக மட்டுமே கொடுத்து கொண்டிருக்கிறோம்.

 விண்ணை முட்டும் விலை உயர்வு பெட்ரோல், டீசல் வாங்க நாடு விட்டு நாடு பயணிக்கும் மக்கள்...!

விலை உயர்வுக்கு மூல காரணம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாம் படும் சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மூல காரணமே பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வுதான். இதை எப்படி சமாளிப்பது? என்று நாம் அனைவரும் சிந்தித்து கொண்டிருக்கும் வேளையில், அசாம் மக்கள் சற்று வித்தியாசமாக யோசித்துள்ளனர். நாடு விட்டு நாடு சென்று பெட்ரோல், டீசல் வாங்கி வருவதுதான் அவர்களின் திட்டம். ரூம் போட்டு யோசிச்சிருப்பாங்களோ? என நாம் எண்ணும் வகையில் உள்ளது அவர்களின் திட்டம்.

விண்ணை முட்டும் விலை உயர்வு பெட்ரோல், டீசல் வாங்க நாடு விட்டு நாடு பயணிக்கும் மக்கள்...!

சிரமப்படும் மக்கள்

இயற்கை அழகு கொஞ்சும் அஸ்ஸாம் மாநிலம் இந்தியாவின் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. பூடான் நாட்டை ஒட்டிதான் அஸ்ஸாம் மாநிலம் உள்ளது. பூடான் நாட்டு எல்லையை ஒட்டி வசிக்கும் அஸ்ஸாம் மக்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அஸ்ஸாமில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 ரூபாயை கடந்து விட்டது. ஒரு லிட்டர் டீசலின் விலையோ 64 ரூபாயை எட்டி விட்டது.

விண்ணை முட்டும் விலை உயர்வு பெட்ரோல், டீசல் வாங்க நாடு விட்டு நாடு பயணிக்கும் மக்கள்...!

நாடு விட்டு நாடு பயணம்

ஆனால் பூடான் நாட்டில் பெட்ரோல், டீசல் இதை விட மலிவான விலையில் கிடைக்கிறது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இந்திய மதிப்பில் 52 ரூபாய்தான். டீசலின் விலையோ இந்திய மதிப்பில் 39 ரூபாய் மட்டுமே. ஆக, இந்தியாவிற்கு பதிலாக பூடானில் பெட்ரோல் வாங்கினால் ஒரு லிட்டருக்கு 23 ரூபாய் மிச்சப்படுத்தலாம். ஒரு லிட்டர் டீசலுக்கு, 25 ரூபாய் மீதியாகும். எனவேதான் பூடான் சென்று பெட்ரோல், டீசல் வாங்கி வரும் எண்ணம் அஸ்ஸாம் மக்களுக்கு உதித்திருக்கிறது. தங்கள் ஊரில் இருந்து மிக நெருக்கமாக பூடான் அமைந்திருப்பதும், அவர்களுக்கு சவுகரியமாக அமைந்து விட்டது.

விண்ணை முட்டும் விலை உயர்வு பெட்ரோல், டீசல் வாங்க நாடு விட்டு நாடு பயணிக்கும் மக்கள்...!

கரன்ஸி, விசா பிரச்னையில்லை

பூடானிஸ் நெகுல்ட்ரம் என்ற கரன்ஸிதான் பூடானில் பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமல்ல, இந்திய எல்லையை ஒட்டி உள்ள பூடான் நாட்டு நகரங்களில் நாம் பயன்படுத்தும் இந்தியா ரூபாயும் எவ்வித பிரச்னையும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படும். சரி, விசா தேவைப்படாதா? என்ற கேள்வி எழலாம். இந்திய குடிமகன் ஒருவர் பூடானிற்குள் நுழைய விசா எதுவும் தேவையில்லை. பெட்ரோல், டீசல் விலையில் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் மிகப்பெரும் வித்தியாசத்தால், முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது அஸ்ஸாம் மக்கள் பூடானுக்கு படையெடுத்து வருகின்றனர்.

 விண்ணை முட்டும் விலை உயர்வு பெட்ரோல், டீசல் வாங்க நாடு விட்டு நாடு பயணிக்கும் மக்கள்...!

வினோதம்

இதில், மற்றொரு வினோதம் என்னவென்றால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள்தான் பூடானுக்கு பெட்ரோல், டீசலை சப்ளை செய்கின்றன. ஆனால் இந்தியாவிற்கும், பூடானுக்கும் இடையே உள்ள பூஜ்ய வரி உடன்படிக்கை காரணமாக, பூடானில் பெட்ரோல், டீசல் விலை மலிவாக கிடைக்கிறது. பூடானுக்கு கலால் வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாலும், அவர்களால் இவ்வளவு மலிவான விலையில் பெட்ரோல், டீசலை விற்பனை செய்ய முடிகிறது. அதே நேரத்தில் இதன் காரணமாக பூடான் அரசாங்கத்திற்கு வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது என்பதையும் மறுக்க முடியாது.

 விண்ணை முட்டும் விலை உயர்வு பெட்ரோல், டீசல் வாங்க நாடு விட்டு நாடு பயணிக்கும் மக்கள்...!

கட்டுப்பாடு

இந்திய மதிப்பில் 500 ரூபாய்க்கு மட்டுமே பூடானில் ப்யூயல் நிரப்பி கொள்ள முடியும். பைக் என்றால் கூடுதலாக 3 லிட்டரை பெறலாம். தங்களின் மலிவு விலை பெட்ரோல், டீசலை இந்திய மக்கள் யாரும் தவறாக பயன்படுத்தி விட கூடாது என்பதற்காகவே பூடான் இந்த கட்டுப்பாடுகளை விதித்திருப்பது போல் தெரிகிறது.

 விண்ணை முட்டும் விலை உயர்வு பெட்ரோல், டீசல் வாங்க நாடு விட்டு நாடு பயணிக்கும் மக்கள்...!

பெட்ரோலுடன் பீர்

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நகரம் கவுஹாத்திதான். அங்கு ஒரு பீர் பாட்டிலின் விலை 140 ரூபாய். ஆனால் பூடானில் வெறும் 120 ரூபாய்க்கு 2 பீர் கேன்களை வாங்க முடியும். எனவே பூடான் சென்றால், மலிவான விலையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுடன், பீரையும் வாங்கி வர முடியும். பூடானில் உள்ள சாம்ட்ரப் ஜோங்கர் என்ற நகரத்திற்குதான் அஸ்ஸாம் மக்கள் சென்று வருகின்றனர். ஏனெனில் இந்த நகரம்தான் இந்திய எல்லையை ஒட்டி மிக நெருக்கமாக அமைந்துள்ளது.

 விண்ணை முட்டும் விலை உயர்வு பெட்ரோல், டீசல் வாங்க நாடு விட்டு நாடு பயணிக்கும் மக்கள்...!

ஜி.எஸ்.டி வரம்புக்குள் வருமா?

இந்தியாவில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வந்தால் மட்டுமே அவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசும் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் பேட்டியளித்த பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோலை, டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைப்பேன் என கூறியுள்ளார். இது மக்கள் மத்தியில் பாசிட்டிவ்-ஆன விஷயமாக பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Assam Residents Visiting Bhutan For Cheap Petrol & Diesel..Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X