சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாணியைக் கையாண்ட ஆட்டோ டிரைவர்... குவியும் பாராட்டு...

சூப்பர் ஸ்டார் ரஜினி தனது பாடலில் கூறியதைப்போல, கர்நாடகாவில் உள்ள ஆட்டோ டிரைவர் தனது நிஜ வாழ்க்கையில் செய்துள்ளார். இதற்காக தற்போது அவர் பாராட்டு மழையில் மூழ்கியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாணியைக் கையாண்ட ஆட்டோ டிரைவர்...

ஒரு பெண் தன் வாழ்நாளின் பிறவி பலனாக கருதுவது கருவுற்றல். இதற்காக பல இன்னல்களைச் சந்தித்து தான் அவள் அந்த பாக்கியத்தைப் பெறுகிறாள். அதேப்போல பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணின் மறு ஜென்மம் என்றே கருதப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாணியைக் கையாண்ட ஆட்டோ டிரைவர்...

ஏனென்றால், பிரசவத்தின்போது அவள் இறப்பின் நுழைவாயில் வரைச் சென்று மறுபிறவியைப் பெறுகிறாள். உண்மையைக் கூற வேண்டுமானால், பிரசவ வலியை எந்தவொரு ஆணாலும் தாங்கவே முடியாது. இதுமறுக்க முடியாத உண்மை. ஏனென்றால், பிரசவ வலியானது, உடலில் உள்ள அனைத்து எலும்புகளையும் உடைப்பதற்கு ஈடான வலியை ஏற்படுத்தும்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாணியைக் கையாண்ட ஆட்டோ டிரைவர்...

ஆனால், அதைப்பொருத்து தனது இல்லற வாழ்க்கையை இனிதே நடத்து வருகிறாள். இதுபோன்ற உண்ணத படைப்பான பெண், நம் சமூகத்தில் பல இன்னல்களையும், துயரங்களையும் சந்தித்து வருகிறாள். மேலும், சமீபலகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

MOST READ: பெட்ரோல் பைக்குகளுக்கு காத்திருக்கும் புது ஆபத்து...மோடி அரசின் அடுத்த அதிர்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாணியைக் கையாண்ட ஆட்டோ டிரைவர்...

சமீபத்தில், சென்னை பெருங்குடியில் உள்ள குப்பை சேகரிக்கும் பகுதியில், ஒரு பெண்ணின் கை, கால்கள் துண்டிக்கப்பட்டு வீசப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை அந்த பெண்ணின் மற்ற உடல் பாகங்கள் கண்டுபிடிக்கவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாணியைக் கையாண்ட ஆட்டோ டிரைவர்...

இதைப்போலவே சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த சிறுமியை, அங்கு பணி புரியும் வேலைக்காரர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாணியைக் கையாண்ட ஆட்டோ டிரைவர்...

இதைப்போன்று பெண்களுக்கு எதிரான சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மேலும், இதுபோன்ற ஆண்கள் உள்ள இந்த சமுதாயத்தில் பெண்களை தங்களது கண்களாகப் பேற்றும் சில நபர்களும் உள்ளனர். இதனை நிரூபிக்கும் விதமாக, பிரசவத்துக்கு இலவசாக ஆட்டோவை இயக்கி வருகிறார் கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜீனா.

MOST READ: எடப்பாடியின் முயற்சியால் சென்னைக்கு வரவிருக்கும் 7000 கோடி முதலீடு...!!!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாணியைக் கையாண்ட ஆட்டோ டிரைவர்...

IMAGE SOURCE 6,7: NDTV

பிரசவத்துக்கு இலவசம், முதியவர்களுக்கு இலவசம் என்ற விஷயங்களை திரைப்படங்கள் மற்றும் நாட்டின் ஏதே ஒரு மூலையில் கேட்டிருப்போம். மேலும், கண்டும் இருப்போம். ஆனால், நமது அண்டை மாநிலமான, கர்நாடகத்தில் உள்ள கல்புரகி நகரத்தில் வசித்து வரும் ஆட்டோ டிரைவர் தன் நிஜ வாழ்க்கையில் செய்து வருகிறார். இதற்காக அவர் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாணியைக் கையாண்ட ஆட்டோ டிரைவர்...

மல்லிகார்ஜீனா, தனக்குச் சொந்தமான ஐந்து ஆட்டோக்களில், பிரசவத்துக்கு இலவசம் என எழுதியுள்ளார். மேலும், அதில் அவருடைய கைப்பேசி எண்ணை இணைத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவசர உதவி தேவை என்றால் 24*7 மணி நேரமும் தன்னை அழைக்கலாம் என வாசகத்தையும் அவர் எழுதியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாணியைக் கையாண்ட ஆட்டோ டிரைவர்...

இந்த உண்ணதமான சேவையை அவர் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக செய்து வருதாகக் கூறப்படுகிறது. இதுவரை அவர் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு இந்த உதவி செய்துள்ளார்.

MOST READ: கார் விபத்தில் பிரபல கல்லூரி மாணவர் பரிதாப பலி... காரணம் என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாணியைக் கையாண்ட ஆட்டோ டிரைவர்...

இதுகுறித்து ஆட்டோ டிரைவர் மல்லிகார்ஜுன் கூறுகையில், "என்னுடைய தங்கை கர்ப்பமுற்று இருந்தபோது, அவளை பிரசவத்துக்காக மருத்துவமனை அழைத்துச் செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டது. அப்போது எங்களுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. ஆம்புலன்ஸும் குறிப்பிட்ட நேரத்துக்கு வரவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாணியைக் கையாண்ட ஆட்டோ டிரைவர்...

இதனால் அவள் மிகுந்த துன்பத்தை அனுபவித்தாள். அப்போது அவள் வலியால் துடித்த கதறிய நிகழ்வு இன்றும் என் கண்கள் முன் நடப்பது போலவே உள்ளது. அப்போது தான் என் தங்கை அனுபவித்த இந்த துன்பத்தை வேறு யாரும் அனுபவிக்க கூடாது என நினைத்து இந்த சேவையை செய்ய தொடங்கினேன்" என்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாணியைக் கையாண்ட ஆட்டோ டிரைவர்...

ஆட்டோ டிரைவர் மல்லிகார்ஜீனாவின் இந்த மகத்தான சேவையைப் பார்த்து அப்பகுதியில் உள்ள அவரை வாழ்த்தி வருகின்றனர். உலகில் மனிதநேயம் அழியவில்லை என்பதுக்கு சான்றாக இவர் இருப்பதாக சிலர் தெரிவித்தனர்.

Most Read Articles

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Auto Driver Gives Free Rides To Pregnant Women In Karnataka. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more