நீங்க எதுவும் பண்ண வேணாம்! தேவையான நேரத்தில் ஹெட்லேம்ப்கள் அதுவாகவே ஆன், ஆஃப் ஆகி கொள்ளும்! எப்படினு தெரியுமா?

காரில் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் எப்படி வேலை செய்கிறது? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

நீங்க எதுவும் பண்ண வேணாம்! தேவையான நேரத்தில் ஹெட்லேம்ப்கள் அதுவாகவே ஆன், ஆஃப் ஆகி கொள்ளும்! எப்படினு தெரியுமா?

ஆட்டோமொபைல் துறையில் ஒவ்வொரு நாளும் புதுமைகள் புகுந்து கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக கார்கள் மிகவும் நவீனமாக மாறி கொண்டுள்ளன. இந்த புதுமையான வசதிகள், டிரைவர்களுக்கு உதவியாக இருப்பதுடன், பயணிகளின் பாதுகாப்பையும் அதிகரிக்க செய்கின்றன. அப்படிப்பட்ட வசதிகளில் ஒன்றுதான் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் (Automatic Headlights).

நீங்க எதுவும் பண்ண வேணாம்! தேவையான நேரத்தில் ஹெட்லேம்ப்கள் அதுவாகவே ஆன், ஆஃப் ஆகி கொள்ளும்! எப்படினு தெரியுமா?

தற்போது விற்பனைக்கு வரும் ஏராளமான கார்களில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் எப்படி இயங்குகின்றன? என்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் வசதிக்கு பின்னால் உள்ள அறிவியலை இந்த செய்தியில் கூறியுள்ளோம்.

நீங்க எதுவும் பண்ண வேணாம்! தேவையான நேரத்தில் ஹெட்லேம்ப்கள் அதுவாகவே ஆன், ஆஃப் ஆகி கொள்ளும்! எப்படினு தெரியுமா?

சுற்றுப்புறத்தில் உள்ள வெளிச்சம் குறிப்பிட்ட அளவை மீறி குறையும்போது, ஹெட்லேம்ப்கள் ஆட்டோமேட்டிக்காக 'ஆன்' ஆகி விடும். இன்னும் எளிமையாக சொல்வதென்றால், இருள் சூழும் சமயங்களில் ஹெட்லேம்ப்கள் அதுவாகவே எரிய தொடங்கி விடும். அதே நேரத்தில் வெளிச்சம் அதிகமாக இருந்தால், ஹெட்லேம்ப்கள் ஆட்டோமேட்டிக்காக ஆஃப் ஆகி விடும். இதுதான் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள்.

நீங்க எதுவும் பண்ண வேணாம்! தேவையான நேரத்தில் ஹெட்லேம்ப்கள் அதுவாகவே ஆன், ஆஃப் ஆகி கொள்ளும்! எப்படினு தெரியுமா?

ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் எப்படி இயங்குகின்றன?

போட்டோஎலெக்ட்ரிசிட்டி (Photoelectricity) கொள்ளையின் அடிப்படையில் இது செயல்படுகிறது. அதாவது ஒளி கதிரில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது. காரின் டேஷ்போர்டு அல்லது உட்புற ரியர் வியூ மிரரின் பின் பகுதியில் போட்டோஎலெக்ட்ரிக் சென்சார் (Photoelectric Sensor) பொருத்தப்பட்டிருக்கும். இது சுற்றுப்புற ஒளியை பெறும்.

நீங்க எதுவும் பண்ண வேணாம்! தேவையான நேரத்தில் ஹெட்லேம்ப்கள் அதுவாகவே ஆன், ஆஃப் ஆகி கொள்ளும்! எப்படினு தெரியுமா?

சூரிய ஒளி மற்றும் தெரு விளக்குகளின் ஒளியை வேறுபடுத்தி பார்க்கும் திறன் இந்த சென்சாருக்கு உண்டு. சூரிய ஒளி இந்த சென்சாரின் மீது விழும்போது, மின்சாரம் உற்பத்தியாக தொடங்கும். இந்த மின்சாரம், எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட்டால் உணரப்படும். இந்த எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட்தான், காரின் லைட்டிங் சர்க்யூட்டை கட்டுப்படுத்துகிறது.

நீங்க எதுவும் பண்ண வேணாம்! தேவையான நேரத்தில் ஹெட்லேம்ப்கள் அதுவாகவே ஆன், ஆஃப் ஆகி கொள்ளும்! எப்படினு தெரியுமா?

சென்சாரிடம் இருந்து மின்சாரத்தை பெறும்போது, இது ஹெட்லேம்ப்களை ஆஃப் செய்து வைத்திருக்கும். அதே நேரத்தில் இயற்கையான ஒளி மங்க தொடங்கியவுடன் போட்டோஎலெக்ட்ரிக் சென்சார் மின்சாரம் உற்பத்தி செய்வதை நிறுத்தி விடும். அப்போது எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட் ஹெட்லேம்ப்களை ஆன் செய்து விடும்.

நீங்க எதுவும் பண்ண வேணாம்! தேவையான நேரத்தில் ஹெட்லேம்ப்கள் அதுவாகவே ஆன், ஆஃப் ஆகி கொள்ளும்! எப்படினு தெரியுமா?

ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் வசதி இப்படிதான் இயங்குகிறது. சுற்றுப்புறத்தில் உள்ள ஒளியின் அளவை பொறுத்து ஹெட்லேம்ப்கள் ஆட்டோமேட்டிக்காக ஆன் அல்லது ஆஃப் ஆவதுதான், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள். டிரைவர் மேனுவலாக ஹெட்லேப்களை ஆன் அல்லது ஆஃப் செய்ய வேண்டிய தேவையை ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் நீக்கியுள்ளன.

நீங்க எதுவும் பண்ண வேணாம்! தேவையான நேரத்தில் ஹெட்லேம்ப்கள் அதுவாகவே ஆன், ஆஃப் ஆகி கொள்ளும்! எப்படினு தெரியுமா?

ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தக்கூடிய போட்டோஎலெக்ட்ரிக் சென்சாரின் ஆயுட்காலம் அதிகம். அவை மிகவும் நீண்ட நாட்களுக்கு உழைக்க கூடியவை. அத்துடன் இந்த சென்சார் காரின் உட்புறத்தில் பொருத்தப்படுகிறது என்பதால், இது சேதம் அடைவதற்கான வாய்ப்புகளும் குறைவு.

நீங்க எதுவும் பண்ண வேணாம்! தேவையான நேரத்தில் ஹெட்லேம்ப்கள் அதுவாகவே ஆன், ஆஃப் ஆகி கொள்ளும்! எப்படினு தெரியுமா?

ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் வசதி உள்ள கார்களில் ஸ்விட்ச் ஒன்று வழங்கப்பட்டிருக்கும். இதன் மூலம் இந்த வசதியை ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளலாம். ஆனால் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் வசதியை எப்போதும் ஆன் செய்து வைத்து கொள்வது நல்லது. ஏனெனில் தேவைப்படும் நேரங்களில் அதுவே ஹெட்லேம்ப்களை ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளும்.

நீங்க எதுவும் பண்ண வேணாம்! தேவையான நேரத்தில் ஹெட்லேம்ப்கள் அதுவாகவே ஆன், ஆஃப் ஆகி கொள்ளும்! எப்படினு தெரியுமா?

ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் உங்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உதவி செய்யும். தற்போதைய நிறைய கார்களில் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் வசதி வழங்கப்படுவது சிறப்பான விஷயம். இந்திய சந்தையை பொறுத்தவரையில் டாடா அல்ட்ராஸ் போன்ற பல்வேறு கார்களில் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் வசதி வழங்கப்படுகிறது.

நீங்க எதுவும் பண்ண வேணாம்! தேவையான நேரத்தில் ஹெட்லேம்ப்கள் அதுவாகவே ஆன், ஆஃப் ஆகி கொள்ளும்! எப்படினு தெரியுமா?

ஒரு காலத்தில் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் மட்டும்தான் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் வசதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சாதாரண கார்களில் கூட ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் வசதி கிடைக்கிறது. ஒரு சமயத்தில் சொகுசு கார்களில் மட்டுமே காணப்பட்ட இதேபோன்ற பல்வேறு வசதிகள் தற்போது சாதாரண கார்களையும் வந்தடைந்துள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Automatic headlights heres everything you need to know
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X