மீண்டும் ராயல் என்பீல்டை "யானை" என கிண்டல் செய்யும் பஜாஜ்

டாமினோர் வெளியானது முதல் தனது விளம்பரங்களில் ராயல் என்பீல்டை வம்பிற்கு இழுத்துள்ளது. தற்போது பஜாஜ் நிறுவனம் மீண்டும் ராயல் என்பீல்டை கிண்டல் செய்து அடுத்த இரண்டு விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

By Balasubramanian

பஜாஜ் நிறுவனம் தனது டாமினோர் வாகனத்தை ராயல் என்பீல்டிற்கு போட்டியான வெளியிட்டது. டாமினோர் வெளியானது முதல் தனது விளம்பரங்களில் ராயல் என்பீல்டை வம்பிற்கு இழுத்துள்ளது.

மீண்டும் ராயல் என்பீல்டை

டாமினோருக்காக இதுவரை வெளியான மூன்று விளம்பரங்களில் ராயல் என்பீல்டை 'ஹாத்தி மாட் பலோ' (யானையை எழுப்பாதே)

என கிண்டல் செய்திருந்தது. அதில் ராயல் என்பீல்டு பைக்குகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிகாட்டியிருந்தது.

மீண்டும் ராயல் என்பீல்டை

இந்த விளம்பரங்களில் ராயல் என்பீல்டு பைக்கை யானையாக உருவகப்படுத்திருந்தது. முதல் விளம்பரத்தில் ராயல் என்பீல்டு பைக்குகளில் உள்ள பிரேக்கிங் குறைபாட்டை கிண்டல் செய்திருந்தது.

மீண்டும் ராயல் என்பீல்டை

இரண்டாவது விளம்பரத்தில் ராயல் என்பீல்டு பைக்கை ஸ்டார்ட் செய்வதில் உள்ள குறையையும், மூன்றாவது விளம்பரத்தில் ராயல் என்பீல்டு மலைகளில் ஏறுவதில் சீரமம் ஏற்படுவதாகவும் கிண்டல் செய்திருந்தது.

மீண்டும் ராயல் என்பீல்டை

தற்போது பஜாஜ் நிறுவனம் மீண்டும் ராயல் என்பீல்டை கிண்டல் செய்து அடுத்த இரண்டு விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. அதிலும் ராயல் என்பீல்டை யானையாவே சித்தரித்துள்ளது.

மீண்டும் ராயல் என்பீல்டை

ராயல் என்பீல்டு நிறுவனம் பல ஆண்டுகளாக ஓரே ஹெட்லைட்டை பயன்படுத்தி வருவது நமக்கு தெரிந்த விஷயம் தான். இதை தற்போது வெளியிட்டுள்ள விளம்பரத்தில் பஜாஜ் கிண்டல் செய்துள்ளது. ராயல் என்பீல்டு ஹெட்லைட்டை டார்ச் லைட்டுடன் ஒப்பிட்டு இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த விளம்பரத்தை நீங்கள் கீழே பார்க்கலாம்.

அடுத்ததாக வெளியான விளம்பரத்தில் ஆப் ரோட்டில் டாமினோர் செயல்பாட்டுடன் ராயல் என்பீல்டு செயல்பாட்டை ஒப்பிட்டு விளம்பரத்தில் கிண்டல் செய்துள்ளது.

மீண்டும் ராயல் என்பீல்டை

ரோட்டில் மரம் விழுந்து செல்ல முடியாத நிலையில் யானையில் சிலர் யானையில் உட்காந்திருப்பது போலவும், டாமினோரில் வருபவர்கள் ஆப் ரோட்டில் ஈசியாக பயணம் செய்து கடப்பவர்கள் போலவும் சித்தரித்துள்ளனர். இறுதியாக டாமினோரில் வருபவர்கள் யானைக்கு வாழைப்பழம் வழங்குவது தான் இந்த விளம்பரத்தின் ஹெலேட். இந்த விளம்பரத்தை நீங்கள் கீழே பார்க்கலாம்.

இந்த விளம்பரத்தில் கூறியுள்ளதுபோல் ராயல் என்பீல்டை விட டாமினோர் சிறந்த ஹெட்லைட் அசம்சத்தை கொண்டுள்ளது. மேலும் ராயல் என்பீல்டில் இல்லாத பல அம்சங்கள் டாமினோரில் உள்ளது.

மீண்டும் ராயல் என்பீல்டை

டாமினோர் எதிர்பார்த்த அளவு விற்பனையாகவிட்டாலும், ராயல் என்பீல்டு வைத்திருப்பவர்களை டாமினோர் வாங்க வைக்க கடும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

மீண்டும் ராயல் என்பீல்டை

சமீபத்தில் வெளியான டாமினோர் 400 (2018) ல் புதிய கலர்கள், தங்க நிற ஆலாய் வீல்கள், முழு டிஜிட்டல் கிளஸ்டர், ஸ்லிப்பர் கிளட்ச், இரண்டு ஏ.பி.எஸ்., ஆகிய அம்சங்களில் வெளியாகியுள்ள நிலையில் தற்போது இந்த விளம்பரங்களை வெளியிட்டுள்ளது பஜாஜ்

மீண்டும் ராயல் என்பீல்டை

பஜாஜ் டாமினோர்- 400 பைக் 373 சிசி பவர், ஒரு சிலிண்டர் இன்ஜினுடன் 35 பி.எச்.பி., மற்றும் 35 என்.எம் டார்க் திறனை வெளிபடுத்தும் திறன் படைத்ததாக இருக்கிறது. ஏ.பி.எஸ்.,மற்றும் ஏ.பி.எஸ்., இல்லாமலும் கிடைக்கும் இந்த பைக்கின் விலை ரூ 1.42 லட்சத்தில் இருந்து ஆரம்பமாகிறது.

மீண்டும் ராயல் என்பீல்டை

டாமினோர் பைக் ராயல் என்பீல்டை விட மார்டனாவும், பல புதிய அம்சங்கள் கொண்டிருந்தாலும், தற்போது ஆரோக்கியமான போட்டியை சந்தித்து வருகிறது. எனினும் டாமினோரும், ராயல் என்பீல்டும் வெவ்வேறு வகைகளில் சிறந்து விளங்குவதால் இரண்டையும் ஒன்றோடு ஒன்று ஒப்பிட முடியாதது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Bajaj Is Back With The 'Haathi Mat Paalo' Ads; Makes Mockery Of Royal Enfield. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X