மற்ற மாநில வாகனங்கள் தலைநகரில் நுழைய தடை: டெல்லி அரசு அதிரடி...???

நாட்டின் தலைநகரான டெல்லியில் மற்ற மாநிலத்தின் பழைய வாகனங்கள் நுழைய தடை விதித்து அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பழைய வாகனங்களுக்கு தடை

தேசத்தின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன் வீரியமானது, அங்கு செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் அதன் தாக்கம் கடுமையான பின்விளைவை ஏற்படுத்தி வருகிறது.

காற்று மாசுபடுவதை ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் (AQI) என்று குறிப்பிட்டு வருகிறோம். அதன்படி, காற்றினை அளவீடு செய்யும்போது 0-50 வரை இருந்தால் தூய்மையான காற்று என்று அர்த்தம். அதேபோல், 51ல் இருந்து 100 ஆக இருந்தால் திருப்தி அளிக்கக்கூடிய அளவு என்று எடுத்துக்கொள்ளப்படும். அதுவே, 101-200 ஆக இருந்தால் காற்றில் மிதமான மாசு கலந்து இருப்பதாக அர்த்தம். மேலும், 201-300 வரை இருந்தால் காற்று நிச்சயம் மாசபாடு அடைந்துள்ளது என்று பொருள். 301க்கும் மேலாக இருந்தால் காற்று கடுமையாக மாசடைந்துவிட்டது என்று கருதப்படும்.

பழைய வாகனங்களுக்கு தடை

இந்த அளவீட்டின்படி, பார்ப்போமேயானால் டெல்லியில் அதிகபட்சம் 590க்கும் அதிமான அளவில் காற்று மாசுபாடு அடைந்துள்ளதாக சமீபத்திய புள்ளி விவரம் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த அளவிற்கு டெல்லியல் மாசுபடுதல் ஏற்பட, பஞ்சாப் மற்றும் அரியானாவில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளும், அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களும் தான் காரணம் என கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, மாநிலத்தில் அதிகரித்து வரும் மாசுபடுதலைத் தவிர்க்கும் விதமாக டெல்லி அரசு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவ்வாறு, அதிக மாசினை உருவாக்கும் வாகனங்களை கண்டறிய டெல்லியில் ரிமோட் சென்சார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சூற்றுச்சூழல் மாசுகட்டுப்பாட்டு ஆணையத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பழைய வாகனங்களுக்கு தடை

மேலும், 10 அல்லது 15க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழைமையான வாகனங்களை மாநிலத்திற்குள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, அதிகளவு மாசினை ஏற்படுத்தும் வாகனங்களைப் பறிமுதல் செய்து, அந்த வாகனத்தின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க டெல்லி அரசு முடிவு செய்தது.

டெல்லி இந்தியாவின் தலைநகரம் என்பதால் நாளுக்கு நாள் உள் மற்றும் வெளி மாநலிங்களில் இருந்தும் வாகனங்கள் தினந்தோறும் வந்து செல்லும். அவ்வாறு, வந்துச் செல்லும் வாகனங்களாலும் மாசுபாடு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உள் மாநிலத்தின் பழைய வாகனங்களின் தடையைப்போன்று, வெளி மாநிலங்களில் இருந்து வரும் பழைய வாகனங்களுக்கும் தடைவிதிப்பதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

பழைய வாகனங்களுக்கு தடை

இதுகுறித்து டெல்லி காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது, "நாள்தோறும் உள்மாநிலம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான வாகனங்கள் டெல்லிக்கு வந்து செல்கின்றன. இதன்காரணமாக, காற்று மாசுபாடு அபாயத்தின் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்தே, மற்ற மாநிலத்தின் பழைய வாகனங்களும் டெல்லியல் நுழைய தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக" என்றார்.

பழைய வாகனங்களுக்கு தடை

மேலும், இந்த தடை உத்தரவை மீறும் வாகனங்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என டெல்லி போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வாகனத்தை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ban On Old Cars In Delhi: Old Cars From Other States Are Not Allowed In Delhi Either. Read In Tamil.
Story first published: Friday, February 15, 2019, 16:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X