ஸ்கூட்டரில் சிறுவர்கள் வீலிங் செய்தால் இது தான் தண்டனை; பெங்களுரூவில் போலீஸ் அதிரடி

பெங்களூரு போலீசார் நேற்று முன் தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது இது போன்ற செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களை அவர்கள் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த ஹோண்டா ஆக்டிவா, டியோ போன்ற ஸ்கூட்டர்களையும

By Balasubramanian

சில ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர்கள் பல்சர் பைக், அப்பாச்சி பைக் என அதிக சிசி கொண்ட பைக்குகளை அதிகமாக விரும்பினர். வேகமாக செல்லலாம். பார்க்க சிறந்த லுக் போன்ற பல்வேறு காரணங்களால் அதை அவர்கள் விரும்பினர்.

ஸ்கூட்டரில் சிறுவர்கள் வீலிங் செய்தால் இது தான் தண்டனை; பெங்களுரூவில் போலீஸ் அதிரடி

அந்த பைக்குகளில் அதிக வேகத்தில் நகருக்குள் வலம் வருவது. பைக்கில் வித்தைகள் காட்டுவது என பல ஆபத்தான விளையாட்டுக்களை செய்து வந்தனர். இதனால் பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்பட்டன. மேலும் இவ்வாறு செய்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கையும் எடுத்து இதை கட்டுப்படுத்த முயற்சித்தனர்.

ஸ்கூட்டரில் சிறுவர்கள் வீலிங் செய்தால் இது தான் தண்டனை; பெங்களுரூவில் போலீஸ் அதிரடி

ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. இன்றைய இளைஞர்களுக்கு பல்சர் அப்பாச்சி, கேடிஎம் போன்ற பைக்குகளை விட டியோ, ஆக்டிவா, யமஹா ரே போன்ற ஸ்கூட்டர்கள் மீது தான் ஆலாதி பிரியம் இருக்கிறது.

ஸ்கூட்டரில் சிறுவர்கள் வீலிங் செய்தால் இது தான் தண்டனை; பெங்களுரூவில் போலீஸ் அதிரடி

இன்றைய இளைஞர்கள் இந்த ஸ்கூட்டரில் சீட்டாய் பாய்வதும், வீலிங் செய்வதும் என ஆபத்தான செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்கள் மீதும் போலீசார் அதிரடி நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இது போன்ற சம்பவம் சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் அதிக அளவில் நடந்து வருகிறது.

ஸ்கூட்டரில் சிறுவர்கள் வீலிங் செய்தால் இது தான் தண்டனை; பெங்களுரூவில் போலீஸ் அதிரடி

இந்நிலையில் பெங்களூரு போலீசார் நேற்று முன் தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது இது போன்ற செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களை அவர்கள் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த ஹோண்டா ஆக்டிவா, டியோ போன்ற ஸ்கூட்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

ஸ்கூட்டரில் சிறுவர்கள் வீலிங் செய்தால் இது தான் தண்டனை; பெங்களுரூவில் போலீஸ் அதிரடி

கைது செய்யப்பட்டவர்கள் ஆபத்து விளைவிக்கும் வகையில் பைக் ஓட்டியது. ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டியது. உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டது. அதன் பின் அவர்கள் ஸ்டேஷன் பெயிலில் அனுப்பபட்டனர். விரைவில் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

ஸ்கூட்டரில் சிறுவர்கள் வீலிங் செய்தால் இது தான் தண்டனை; பெங்களுரூவில் போலீஸ் அதிரடி

இது போன்ற செயல்களில் ஈடுபடும் பலருக்கு டிரைவிங் லைசன்ஸ் எடுக்கும் வயது கூட வரவில்லை. பலர் 18 வயது கூட நிரம்பாதவர்களாக இருக்கின்றனர். இவ்வாறாக 16 வயதுக்குட்டபவர்கள் ஸ்கூட்டர் ஓட்டி போலீசில் சிக்கினாலோ, அல்லது 18 வயதிற்குட்பட்டவர்கள் பைக் ஓட்டி போலீசில் சிக்கினாலோ அந்த பைக்கின் ஓனருக்கு தண்டனைகளை போலீசார் வழங்குகின்றனர்.

ஸ்கூட்டரில் சிறுவர்கள் வீலிங் செய்தால் இது தான் தண்டனை; பெங்களுரூவில் போலீஸ் அதிரடி

இதில் பெரும்பாலும் சிக்குவது அவர்களின் பெற்றோர்கள் தான். வீட்டில் இவர்களின் தொல்லை தாங்காமல் இவர்களை பைக்/ ஸ்கூட்டர் ஓட்ட அனுமதிக்கின்றனர். ஆனால் பொது ரோடுகளில் இவர்களை பைக்/ ஸ்கூட்டர் ஒட்ட அனுமதிப்பது குற்றமாகும்.

ஸ்கூட்டரில் சிறுவர்கள் வீலிங் செய்தால் இது தான் தண்டனை; பெங்களுரூவில் போலீஸ் அதிரடி

ஆனால் இந்த இளைஞர்கள் நடு ரோட்டில் பைக் ஓட்டும் போது பைக் மட்டும் ஓட்டுவதில்லை மாறாக பைக்கில் வீலிங் செய்வது. வேகமாக செல்வது, ரோட்டில் செல்பவர்களை அச்சுறுத்தும்படி வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக பெங்களூரு, மும்பை, கோல்கட்டா, சென்னை போன்ற நகரங்களில் இதை அதிகமாக பார்க்க முடியும்.

ஸ்கூட்டரில் சிறுவர்கள் வீலிங் செய்தால் இது தான் தண்டனை; பெங்களுரூவில் போலீஸ் அதிரடி

இவர்கள் சாகசத்தில் ஈடுபடும் ஸ்கூட்டர்கள் எல்லாம் ஸ்டாண்ட் செய்யும் படியாக டிசைன்செய்யப்படவில்லை. அவர்கள் அவ்வாறு எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் சாகசம் செய்யும் போது பேலன்ஸ் கொஞ்சமாக மிஸ் ஆனால் போதும் மொத்தமாக கீழே விழுந்து விட வேண்டியது தான். இதனால் காயமோ அல்லது பெரும் உயிரிழப்போ கூட ஏற்படும்.

ஸ்கூட்டரில் சிறுவர்கள் வீலிங் செய்தால் இது தான் தண்டனை; பெங்களுரூவில் போலீஸ் அதிரடி

மேலும் இவ்வாறு ஸ்டண்டில் ஈடுபடும் ஸ்கூட்டர்கள் தங்கள் வாழ்நாளையும் இழக்கிறது. இதில் உள்ள பாகங்கள் விரைவாக தேய்மானம் அடைகிறது. இதன் சேஸிஸ், இன்ஜின், கியர்பாக்ஸ், எல்லாம் ஸ்டண்ட் செய்யும் போது அதிகமாக சேதமாகிறது. ஸ்டண்டில் ஈடுபடாத பைக்குகள் சுமார் 1 லட்சம் கி.மீ. வரை எந்த வித பிரச்னையும் இல்லாமல் இயங்கும் திறன்படைத்தவையாக இருக்கம்.

Most Read Articles
English summary
Bangalore police SEIZE Honda Activa & Dio scooters for ‘Wheelies’. Read in Tamil
Story first published: Friday, August 17, 2018, 19:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X