பாத்திரங்களை போல் விமானத்தையும் அலுமினியத்தில்தான் உருவாக்கறாங்க! இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

வீட்டு சமையல் அறை பாத்திரங்களை போல், விமானங்களையும் ஏன் அலுமினியத்தால் தயார் செய்கின்றனர்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாத்திரங்களை போல் விமானத்தையும் அலுமினியத்தில்தான் உருவாக்கறாங்க! இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

நமது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக தற்போது அலுமினியம் (Aluminum) உருவெடுத்து விட்டது. நீங்கள் தலையை எங்கு திருப்பினாலும், அங்கு அலுமினியத்தால் செய்யப்பட்ட ஏதேனும் ஒரு பொருள் இருக்கலாம். நாம் தினசரி பயன்படுத்தும் சாதாரண பொருட்கள் மட்டுமல்லாது, வானில் பறக்கும் விமானங்களும் கூட அலுமினியத்தால்தான் உருவாக்கப்படுகின்றன.

பாத்திரங்களை போல் விமானத்தையும் அலுமினியத்தில்தான் உருவாக்கறாங்க! இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

ஆம், விமானங்களை உருவாக்குவதற்கு அலுமினியம்தான் மிகவும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எஃகு (Steel) மற்றும் இரும்பு (Iron) போன்ற பல்வேறு மெட்டீரியல்கள் இருக்கும்போது, விமானங்களை உருவாக்குவதற்கு ஏன் அலுமினியத்தை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாத்திரங்களை போல் விமானத்தையும் அலுமினியத்தில்தான் உருவாக்கறாங்க! இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

அலுமினியம் மிக வலிமையானது (Strong). எடை குறைவானது (Lightweight). மலிவான விலையில் கிடைக்க கூடியது (Inexpensive). எஃகு மற்றும் இரும்பு ஆகிய இரண்டுமே அலுமினியத்தை காட்டிலும் வலிமையானவைதான். ஆனால் வலிமை என்ற ஒரு பண்பு மட்டும் விமானங்களை உருவாக்குவதற்கு போதுமானதாக இருக்காது.

பாத்திரங்களை போல் விமானத்தையும் அலுமினியத்தில்தான் உருவாக்கறாங்க! இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

எஃகு மற்றும் இரும்பு ஆகிய 2 மெட்டீரியல்களிடமும் இருக்கும் பிரச்னையே அவற்றின் அதிகமான எடைதான். அலுமினியத்தை காட்டிலும் இந்த 2 மெட்டீரியல்களும் அதிக எடையுடன் இருப்பதால்தான், விமானங்களை உருவாக்குவதில் அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. ஏனெனில் எடை அதிகமாக இருந்தால் விமானத்தின் டேக் ஆஃப் மற்றும் பறக்கும் திறன்கள் பாதிக்கப்படலாம்.

பாத்திரங்களை போல் விமானத்தையும் அலுமினியத்தில்தான் உருவாக்கறாங்க! இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

மறுபக்கம் அலுமினியம் லைட்வெயிட்-ஆக உள்ளது. எனவே அலுமினியத்தை பயன்படுத்தினால் விமானத்தின் எடையை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க முடியும். இது விமானம் வானில் சிறப்பாக பறப்பதற்கு உதவி செய்வதுடன் மட்டுமல்லாது, விமானத்தின் எரிபொருள் சிக்கனத்தையும் அதிகரிக்கிறது. எடை குறைவாக இருந்தால், மைலேஜ் அதிகமாக கிடைக்கும் என்பது பொதுவான விதி.

பாத்திரங்களை போல் விமானத்தையும் அலுமினியத்தில்தான் உருவாக்கறாங்க! இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

அத்துடன் அலுமினியத்தை பயன்படுத்துவதன் மூலமாக எடை குறைகிறது என்பதால், அதிக சரக்குகளையும் விமானத்தால் கொண்டு செல்ல முடியும். மேலும் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், அலுமினியம் வலிமையான உலோகங்களில் ஒன்றுதான். வலிமை மற்றும் குறைவான எடை என 2 பண்புகளையும் கொண்டிருப்பதால்தான், விமானங்களை தயாரிக்க ஏற்றதாக அலுமினியம் திகழ்கிறது.

பாத்திரங்களை போல் விமானத்தையும் அலுமினியத்தில்தான் உருவாக்கறாங்க! இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

மேலும் அலுமினியத்திற்கு அரிப்பை எதிர்த்து நிற்க கூடிய பண்பும் உள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த பண்பு மிகவும் முக்கியமானது. பொதுவாக விமானங்கள் பல்வேறு சூழல்களில் பறக்கும். எனவே அரிப்பு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அலுமினியத்தை பயன்படுத்தினால் இந்த பிரச்னைகளை தவிர்க்கலாம்.

பாத்திரங்களை போல் விமானத்தையும் அலுமினியத்தில்தான் உருவாக்கறாங்க! இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

சரி, விமானங்கள் எந்த வகையான அலுமினியத்தால் உருவாக்கப்படுகின்றன? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். வீட்டு சமையலறை பாத்திரங்களை உருவாக்குவதற்கு பயன்படும் அதே அலுமினியம்தான் விமானங்களை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறதா? எனவும் நீங்கள் நினைக்கலாம். இந்த கேள்விக்கு 'இல்லை' என்பதுதான் பதில். அனைத்து அலுமினியங்களும் ஒன்றல்ல.

பாத்திரங்களை போல் விமானத்தையும் அலுமினியத்தில்தான் உருவாக்கறாங்க! இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

பொதுவாக பார்த்தால் அனைத்தும் அலுமினியம்தான். ஆனால் விமானங்களை உருவாக்க பயன்படுத்தப்படும் அலுமினியத்தின் கிரேடு (Grade) மிகவும் வித்தியாசமானது. மிகவும் தரம் வாய்ந்த அலுமினியங்கள்தான், விமானங்களை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. விமான பொறியியல் துறையில் பல்வேறு வகையான அலுமினியங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

பாத்திரங்களை போல் விமானத்தையும் அலுமினியத்தில்தான் உருவாக்கறாங்க! இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

இதில், அலுமினியம் 2024, அலுமினியம் 7075, அலுமினியம் 3003, அலுமினியம் 5052 மற்றும் அலுமினியம் 6061 போன்றவை முக்கியமானவை. இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் எண்கள் அலுமினியத்தின் கிரேடுகளை குறிக்கின்றன. இதில், அலுமினியம் 2024 மற்றும் அலுமினியம் 7075 ஆகியவை, விமானங்களை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் மிகவும் முக்கியமான கிரேடுகளாக உள்ளன.

பாத்திரங்களை போல் விமானத்தையும் அலுமினியத்தில்தான் உருவாக்கறாங்க! இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய ரகசியம் இருக்கா?

விமானத்தின் உடற்பகுதி (Fuselage) மற்றும் இறக்கைகள் (Wings) ஆகியவற்றில், அலுமினியம் 2024 பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் 'விங் ஸ்பர்' (Wing Spar) போன்றவற்றில், அலுமினியம் 7075 பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனிதர்கள் வானத்தில் பறக்கும் காலம் இருக்கும் வரை, அலுமினியம் மதிப்புமிக்க மெட்டீரியலாக இருக்கும் என்பது உறுதி.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Benefits of aluminum in airplane manufacturing
Story first published: Tuesday, June 28, 2022, 19:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X