விமானங்களின் டயர்களில் ஏன் நைட்ரஜன் வாயுவை நிரப்பறாங்க தெரியுமா? ஒவ்வொரு காரணமும் நம்மை ஆச்சரியப்பட வைக்குது!

விமானங்களின் டயர்களில் ஏன் நைட்ரஜன் வாயுவை நிரப்புகின்றனர்? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்களின் டயர்களில் ஏன் நைட்ரஜன் வாயுவை நிரப்பறாங்க தெரியுமா? ஒவ்வொரு காரணமும் நம்மை ஆச்சரியப்பட வைக்குது!

கார் டயர்களில் சாதாரண காற்றை நிரப்புவது நல்லதா? அல்லது நைட்ரஜன் வாயுவை நிரப்புவது நல்லதா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. நிச்சயமாக நைட்ரஜன் வாயுவை நிரப்புவதுதான் நல்லது என்பதே இந்த சந்தேகத்திற்கான பதில். நைட்ரஜன் வாயுவை நிரப்புவதன் மூலம் பாதுகாப்பு உள்பட பல்வேறு விதங்களில் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.

விமானங்களின் டயர்களில் ஏன் நைட்ரஜன் வாயுவை நிரப்பறாங்க தெரியுமா? ஒவ்வொரு காரணமும் நம்மை ஆச்சரியப்பட வைக்குது!

சரி, விமானங்களின் டயர்களில் என்ன வாயு நிரப்பப்படுகிறது? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். பொதுவாக விமானங்களின் டயர்களில் நைட்ரஜன் வாயுதான் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணங்களை இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

விமானங்களின் டயர்களில் ஏன் நைட்ரஜன் வாயுவை நிரப்பறாங்க தெரியுமா? ஒவ்வொரு காரணமும் நம்மை ஆச்சரியப்பட வைக்குது!

பொதுவாக விமான பயணத்தில் இருப்பதிலேயே மிகவும் அபாயகரமான கட்டம் என்றால், அது டேக் ஆஃப் மற்றும் லேண்டிங்தான். விமானங்கள் டேக் ஆஃப் ஆகும்போதும், லேண்டிங் செய்யப்படும்போதும் விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே டேக் ஆஃப் மற்றும் லேண்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் டயர்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்தும் வழங்கப்படுகிறது.

விமானங்களின் டயர்களில் ஏன் நைட்ரஜன் வாயுவை நிரப்பறாங்க தெரியுமா? ஒவ்வொரு காரணமும் நம்மை ஆச்சரியப்பட வைக்குது!

விமானங்கள் லேண்டிங் ஆகும்போது, ரன்வே மற்றும் பிரேக்குகளின் கடுமையான உராய்வு, டயர்களில் மிக அதிக வெப்ப நிலையை உருவாக்குகிறது. விமானங்கள் டேக் ஆஃப் ஆகும்போதும் கூட இதே நிலைதான். ஏனெனில் டேக் ஆஃப் ஆகும்போது, எரிபொருள் அதிகமாக இருக்கும் என்பதால், விமானத்தின் எடையும் மிகவும் அதிகமாக இருக்கும். அத்துடன் விமானம் ரன்வே-யில் வேகமாக செல்லும்.

விமானங்களின் டயர்களில் ஏன் நைட்ரஜன் வாயுவை நிரப்பறாங்க தெரியுமா? ஒவ்வொரு காரணமும் நம்மை ஆச்சரியப்பட வைக்குது!

இதன் காரணமாக விமான டயர்களில் மிக அதிக வெப்ப நிலை உருவாகும். இந்த அதிகபட்ச வெப்ப நிலை காரணமாக விமானங்களின் டயர்களில் தீப்பற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நைட்ரஜன் வாயுவை நிரப்பினால், விமானங்களின் டயர்களில் தீப்பற்றுவது தடுக்கப்படும். எனினும் நைட்ரஜன் வாயுவை நிரப்புவதற்கு இன்னும் பல்வேறு காரணங்கள் உள்ளன.

விமானங்களின் டயர்களில் ஏன் நைட்ரஜன் வாயுவை நிரப்பறாங்க தெரியுமா? ஒவ்வொரு காரணமும் நம்மை ஆச்சரியப்பட வைக்குது!

ஈரப்பதம் காரணமாக சாதாரண காற்றில் தண்ணீர் இருக்கும். நிலைமை இப்படி இருக்கும்போது, விமானம் மிக அதிக உயரத்தில் பறக்கும் சமயங்களில், வெப்ப நிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கூட சென்று விடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் சாதாரண காற்று நிரப்பப்பட்ட டயர்கள் உறைந்து போய் விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

விமானங்களின் டயர்களில் ஏன் நைட்ரஜன் வாயுவை நிரப்பறாங்க தெரியுமா? ஒவ்வொரு காரணமும் நம்மை ஆச்சரியப்பட வைக்குது!

ஆனால் மிகவும் அதிக உயரத்தில் நைட்ரஜன், மைனஸ் 170 டிகிரி செல்சியஸில்தான் வாயு நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறும். இதன் காரணமாகவும் விமானங்களின் டயர்களில் நைட்ரஜன் வாயு பயன்படுத்த முன்னுரிமை வழங்கப்படுகிறது. விமான டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்பப்படுவதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உள்ளது.

விமானங்களின் டயர்களில் ஏன் நைட்ரஜன் வாயுவை நிரப்பறாங்க தெரியுமா? ஒவ்வொரு காரணமும் நம்மை ஆச்சரியப்பட வைக்குது!

பொதுவாக நைட்ரஜன் வாயு செயலற்றதாகவும், மந்தமாகவும் இருக்கும். எனவே அது மற்ற பொருட்களுடன் வினையாற்றுவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படும். ஆனால் மறுபக்கம் சாதாரண காற்று, அதிக வெப்ப நிலைகளில், டயரில் உள்ள ரப்பருடன் வினையாற்றும். நைட்ரஜனை விட மிகவும் அதிக வேகத்தில், ரப்பருடன் சாதாரண காற்று வினைபுரிந்து விடும்.

விமானங்களின் டயர்களில் ஏன் நைட்ரஜன் வாயுவை நிரப்பறாங்க தெரியுமா? ஒவ்வொரு காரணமும் நம்மை ஆச்சரியப்பட வைக்குது!

எனவே விமான டயர்களில் சாதாரண காற்றை நிரப்பும்போது, காற்றழுத்தம் நீடித்திருக்காது. ஆனால் விமான டயர்களில் நைட்ரஜன் வாயுவை நிரப்பும்போது, காற்றழுத்தம் நீண்ட நேரத்திற்கு நீடித்து நிலைத்திருக்கும். எனவே விமானங்களின் பராமரிப்பு பணிகள் குறையும் என்பதால், செலவும் குறையும். எனவேதான் விமானங்களின் டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்பப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Benefits Of Filling Nitrogen In Airplane Tyres. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X