டிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்?

சென்னை - பெங்களூர் இடையிலான தூரத்தை சதாப்தி ரயில் 5 மணிநேரத்தில் கடக்கிறது. அதுவே, டிரெயின் -18 ரயில் அறிமுகம் செய்யப்பட்டால், இரண்டரை மணி முதல் மூன்று மணிநேரத்திற்குள் இரு நகரங்களையும் இணைத்துவிடும்.

சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கு புல்லட் ரயில் இயக்குவதற்கான சாத்திக்கூறுகள் குறித்து ஜெர்மனியை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு செய்து ரயில்வே துறையிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். பெரும் பொருட்செலவு கொண்ட இந்த திட்டத்தின் மூலமாக சென்னையிலிருந்து பெங்களூருக்கு 2 மணிநேரத்தில் சென்றுவிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்?

இந்த நிலையில், சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் அதிவேக டிரெயின்- 18 ரயில் மூலமாக இதற்கு நெருக்கமான நேரத்தில் சென்னை - பெங்களூரை இணைத்துவிடலாம். ஜெர்மனியின் புல்லட் ரயில் திட்டத்தை ஒப்பிடும்போது, டிரெயின் - 18 ரயிலுக்கான தயாரிப்பு செலவீனம், கட்டமைப்பு செலவீனம் வெகுவாக குறையும்.

டிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்?

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் டிரெயின்- 18 என்ற அதிவேக ரயில் தயாரிப்பு பணிகள் துவங்கின. இந்த ரயிலில் தனியாக எஞ்சின் இல்லாமல், புறநகர் மின்சார ரயில்கள் போலவே, ரயில் பெட்டிகளிலேயே சக்திவாய்ந்த மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டன.

டிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்?

தவிர, ரயில் பெட்டியிலேயே ரயிலை இயக்குவதற்கான ஓட்டுனர் கேபின் இருபுறத்திலும் கொடுக்கப்பட்டது. சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவதில் இந்த ரயில் வெறும் 18 மாதங்களில் தயாரிக்கப்பட்டது. தானியங்கி கதவுகள், சிசிடிவி கேமரா பாதுகாப்பு, குளிர்சாதன வசதி என பல நவீன வசதிகளுடன் இந்த ரயில் வந்துள்ளது.

டிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்?

அண்மையில் ஐசிஎஃப்-ல் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த டிரெயின்-18 அதிவேக ரயில் தற்போது ராஜஸ்தான் மாநிலம், கோட்டா - சவாய் மாதோப்பூர் இடையில் வைத்து தீவிரமான சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

டிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்?

தற்போது டிரெயின் -18 ரயில் தீவிர சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. சோதனை ஓட்டத்தின்போது இந்த ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தை தொட்டு சாதனை படைத்தது. இந்த ரயிலை மணிக்கு 200 கிமீ வேகம் வரை செமி புல்லட் ரயிலாக இயக்க முடியும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்?

கடந்த ஆண்டு ஸ்பெயின் நாட்டு தயாரிப்பான டால்கோ ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. எனினும், வர்த்தக ரீதியில் டால்கோ ரயிலை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு ரயிலில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருப்பதோடு, இறக்குமதி செய்வதால் அதிக விலை கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் இருந்தது.

டிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்?

இந்த சூழலில், டிரெயின்-18 சோதனை ஓட்டம் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கும் இவ்வேளையில், மற்றொரு செய்தி நமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம், டிரெயின் 18 ரயிலை அதிவேகத்தில் இயக்குவதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், 160 கிமீ வேகத்தில் மட்டுமே இயக்க முடியும்.

டிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்?

அதுவும், கதிமான் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக கட்டமைப்பு மேம்படுத்தப்பட்ட டெல்லி- ஆக்ரா தடத்தில் மட்டுமே இந்த வேகத்தில் செலுத்த முடியும். பிற பகுதிகளில் இந்த ரயிலை இயக்க வேண்டுமெனில், கட்டமைப்பு வசதிகளை வெகுவாக மேம்படுத்த வேண்டும்.

டிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்?

உதாரணத்திற்கு சென்னை - பெங்களூர் இடையிலான தூரத்தை சதாப்தி ரயில் 5 மணிநேரத்தில் கடக்கிறது. அதுவே, டிரெயின் -18 ரயில் அறிமுகம் செய்யப்பட்டால், இரண்டரை மணி முதல் மூன்று மணிநேரத்திற்குள் இரு நகரங்களையும் இணைத்துவிடும். காபியை குடித்துவிட்டு, காலை 6 மணிக்கு சென்னையில் புறப்பட்டால் 9 மணிக்குள் காலை உணவுக்கு பெங்களூர் சென்றுவிடலாம்.

டிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்?

இந்த ரயில் 200 கிமீ வேகத்தில் செல்லும் திறனை பெற்றிருருந்தாலும், அது போதிய பலன் தராத நிலை இருப்பதாக சில தினங்களுக்கு முன் வெளியான செய்தி தெரிவிக்கிறது. அதாவது, அதற்கான பாதுகாப்பு கட்டமைப்புகள், வலிமையான தண்டவாளங்கள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

டிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்?

சென்னையிலிருந்து பெங்களூருக்கு இரண்டரை மணிநேரத்தில் செல்ல வேண்டுமெனில், 200 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியம். சராசரியாக மணிக்கு 150 கிமீ வேகத்திற்கு மேல் செல்ல வேண்டியிருக்கும்.

டிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்?

ஆனால், உலகிலேயே மிகப்பெரிய தண்டவாள அமைப்பை கொண்டதாக இருக்கும் நம் நாட்டு ரயில்வே துறையில், மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயக்குவதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதாவது, வெறும் 0.3 சதவீத தண்டவாளங்கள் மட்டுமே 160 கிமீ வேகத்தில் இயக்குவதற்கான கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கிறது.

டிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்?

வலிமையான தண்டவாளம், சிக்னல் சிஸ்டம், விபத்துக்களை தவிர்க்கும் கருவிகள், மனிதர்கள் மற்றும் விலங்குகள் குறுக்கிடாத வகையிலான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகி இருக்கிறது. தற்போது இதற்காக விசேஷ திட்டத்தை ரயில்வே துறை செயல்படுத்தி வருகிறது.

டிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்?

தண்டவாளங்களை மாற்றுவதுடன், ஆளில்லா லெவல் கிராசிங்குகளை முற்றிலும் ஒழிக்கவும், விபத்து பகுதிகளை கண்டறிந்து தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளை ரயில்வே துறை முடுக்கிவிட்டுள்ளது. மேலும், சிக்னல்களையும் மேம்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கிறது.

டிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்?

அப்போதுதான், டிரெயின் 18 தயாரித்ததற்கான முழுப் பயனையும், ரயில்வே துறையும், பயணிகளும் பெற முடியும். இந்தநிலையில், புதிய ரயில்களை குறைந்தது 3 மாதங்கள் சோதனை ஓட்டம் நடத்திய பிறகே, பயணிகள் சேவைக்கு கொண்டு வரப்படும்.

டிரெயின் 18 ரயில் மூலம் சென்னை டு பெங்களூர் 3 மணிநேரத்தில் சாத்தியமே... ஆனால்?

ஆனால், டிரெயின் -18 ரயிலின் சோதனை ஓட்டங்கள் மிக வெற்றிகரமாக அமைந்ததுடன், இதுவரை தொழில்நுட்ப பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை. எனவே, அடுத்த மாதமே பயணிகள் சேவைக்கு கொண்டு வரப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், வட இந்தியாவில்தான் டிரெயின் 18 சேவைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

மேலும், டிசம்பர் 25ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை கருத்தில்கொண்டு இந்த ரயில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பயன்பாட்டிற்கது வரும்போது இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமையை பெறும்.

Image Courtesy:Financial Express

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bengaluru to Chennai in 3 Hours? Train 18 can make it possible! Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X