கருப்பு, சிகப்பு கலர் கார்களை வாங்கினால் இப்படி ஒரு பிரச்னை வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே!

இந்தியாவில் சிறப்பான மற்றும் மோசமான ரீசேல் வேல்யூ கொண்ட கார் கலர்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கருப்பு, சிகப்பு கலர் கார்களை வாங்கினால் இப்படி ஒரு பிரச்னை வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே!

கார் வாங்கும்போது பல்வேறு விஷயங்களை நாம் கவனிப்போம். இதில், காரின் கலரும் (Colour) முக்கியமான ஒன்று. ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்தமான கலரில் காரை வாங்குகின்றனர். ஆனால் காரின் கலரை தேர்வு செய்யும்போது, அதன் ரீசேல் வேல்யூ (Resale Value) எப்படி உள்ளது? என்பதை தெரிந்து கொள்ள பலரும் தவறி விடுகின்றனர்.

கருப்பு, சிகப்பு கலர் கார்களை வாங்கினால் இப்படி ஒரு பிரச்னை வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே!

இந்திய சந்தையை பொறுத்தவரையில், ஒரு சில கலர்களுக்கு மிக சிறப்பான ரீசேல் வேல்யூ உள்ளது. அதே சமயம் வேறு சில கலர்களுக்கு ரீசேல் வேல்யூ மோசமாக உள்ளது. எனவே சிறப்பான ரீசேல் வேல்யூ உள்ள கலரை தேர்வு செய்வதுதான் உங்களுக்கு பலன் அளிக்கும். ஒருவேளை காரை விற்பனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், உங்களுக்கு நல்ல தொகை கிடைக்கும்.

கருப்பு, சிகப்பு கலர் கார்களை வாங்கினால் இப்படி ஒரு பிரச்னை வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே!

மாறாக ரீசேல் வேல்யூ இல்லாத கலரில் நீங்கள் காரை வாங்கினால், குறைந்த தொகையே கிடைக்கும். இந்த செய்தியில் சிறப்பான ரீசேல் வேல்யூ உள்ள கார் கலர்கள் மற்றும் ரீசேல் வேல்யூ பெரிதாக இல்லாத கார் கலர்கள் குறித்த விபரங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். காரின் கலரை தேர்வு செய்யும்போது, இந்த விஷயங்களை நீங்கள் மனதில் வைத்து கொண்டால், எதிர்காலத்தில் பலன் கிடைக்கும்.

கருப்பு, சிகப்பு கலர் கார்களை வாங்கினால் இப்படி ஒரு பிரச்னை வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே!

குறிப்பு: சந்தையில் செய்யப்பட்ட ஆய்வு மற்றும் சர்வேக்கள் அடிப்படையில் இந்த செய்தி எழுதப்பட்டுள்ளது. அத்துடன் இது காரின் கலரை மட்டுமே அடிப்படையாக கொண்டது. கார் தயாரிப்பு நிறுவனம், மாடல், தயாரிக்கப்பட்ட ஆண்டு, காரின் கண்டிஷன் ஆகியவற்றை பொறுத்து ரீசேல் வேல்யூ மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருப்பு, சிகப்பு கலர் கார்களை வாங்கினால் இப்படி ஒரு பிரச்னை வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே!

சிறப்பான ரீசேல் வேல்யூ கொண்ட கார் கலர்கள்

1. வெள்ளை (White)

இந்தியாவில் மட்டுமல்லாது, உலக அளவில் அதிகம் பேர் தேர்வு செய்யும் கார் கலர்களில் வெள்ளைக்கு மிக முக்கியமான இடம் உண்டு. வெள்ளை கலர் பாதுகாப்பானதும் கூட. ஆம், வெள்ளை கலர் கார்கள் சாலை விபத்துக்களில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. மற்ற கலர் கார்களை காட்டிலும், இரவு நேரங்களில் வெள்ளை கலர் கார்கள் தெளிவாக தெரியும்.

கருப்பு, சிகப்பு கலர் கார்களை வாங்கினால் இப்படி ஒரு பிரச்னை வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே!

எனவே மற்ற கலர்களுடன் ஒப்பிடும்போது, பாதுகாப்பு விஷயத்தில் வெள்ளை கலர் முன்னிலை பெறுகிறது. அத்துடன் வெள்ளை கலர் தூய்மையின் அடையாளமாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்தியாவின் ஏதாவது ஒரு சாலையில் சிறிது நேரம் நின்று பாருங்கள். வெள்ளை கலர் கார்கள்தான் அதிகமாக தென்படும். அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளதால், வெள்ளை கலர் சிறப்பான ரீசேல் வேல்யூயை கொண்டுள்ளது.

கருப்பு, சிகப்பு கலர் கார்களை வாங்கினால் இப்படி ஒரு பிரச்னை வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே!

2. சில்வர் (Silver)

இந்தியாவில் வெள்ளை நிறத்திற்கு அடுத்தபடியாக அதிகம் பேர் தேர்வு செய்யும் கார் கலர்களில் ஒன்றாக சில்வர் உள்ளது. எனவே சில்வர் கலரும் நல்ல ரீசேல் வேல்யூவை கொண்டுள்ளது. கிட்டத்தட்ட எல்லா வகையான கார் செக்மெண்ட்களிலும் சில்வர் நிறம் ஒரு பகுதியாக உள்ளது. எந்த வகையான கார் என்றாலும் கூட சில்வர் நிறம் நன்றாக பொருந்தும்.

கருப்பு, சிகப்பு கலர் கார்களை வாங்கினால் இப்படி ஒரு பிரச்னை வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே!

3. க்ரே (Grey)

இந்திய சந்தையில் சிறப்பான ரீசேல் வேல்யூ கொண்ட கார் கலர்களின் பட்டியலில், க்ரே கலருக்கும் நிச்சயம் இடமுண்டு. இதன் காரணமாக க்ரே கலர் கார்களை மறுவிற்பனை செய்வதும் எளிமையானது. அதிகம் பேர் விரும்பக்கூடிய கலர் என்பதால், க்ரே கலர் கார்களுக்கு நல்ல தொகையும் கிடைக்கும். இனி மோசமான ரீசேல் வேல்யூ கொண்ட கார் கலர்களை பார்க்கலாம்.

கருப்பு, சிகப்பு கலர் கார்களை வாங்கினால் இப்படி ஒரு பிரச்னை வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே!

மோசமான ரீசேல் வேல்யூ கொண்ட கார் கலர்கள்

1. சிகப்பு (Red)

சிகப்பு கலர் கார்களுக்கு பெரிதாக ரீசேல் வேல்யூ இல்லை. மிகவும் பிரகாசமாக இருப்பதால், சிகப்பு கலர் கார்களை பலரும் விரும்புவதில்லை. சந்தையில் கிடைக்க கூடிய ஒரு சில கார்கள் மட்டுமே சிகப்பு கலரில் நன்றாக இருக்கும். ஃபெராரி கார்கள் இதற்கு நல்ல உதாரணம். ஆனால் மற்ற பெரும்பாலான சிகப்பு கலர் கார்களை வாடிக்கையாளர்கள் பலரும் விரும்புவதில்லை.

கருப்பு, சிகப்பு கலர் கார்களை வாங்கினால் இப்படி ஒரு பிரச்னை வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே!

2. கருப்பு (Black)

கருப்பு நிறத்தை இந்த பட்டியலில் சேர்த்திருப்பதற்காக நீங்கள் வாதிடலாம். உண்மையில் கருப்பு கலர் கார்கள் சாலையில் கம்பீரமாக இருக்கும் என்பதில் எங்களுக்கும் சந்தேகமில்லைதான். ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில், கருப்பு துரதிருஷ்டவசமான கலர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே கருப்பு கலர் கார்களை பலரும் விரும்புவதில்லை. இதன் காரணமாக இதன் ரீசேல் வேல்யூ குறைவாக இருக்கிறது.

கருப்பு, சிகப்பு கலர் கார்களை வாங்கினால் இப்படி ஒரு பிரச்னை வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே!

3. மற்ற கலர்கள்

சிகப்பு மற்றும் கருப்பு ஆகிய கலர்களை போல், வயலெட் (Violet), மெஜந்தா (Magenta) மற்றும் ப்ரவுன் (Brown) ஆகிய கலர்களுக்கும் இந்திய சந்தையில் சிறப்பான ரீசேல் வேல்யூ கிடையாது. ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி, காரின் ரீசேல் வேல்யூ என்பது, மாடல், கண்டிஷன் போன்ற மற்ற காரணிகளையும் அடிப்படையாக கொண்டது என்பதை மறந்து விட வேண்டாம். கலர் என்பது ஒரு காரணி மட்டுமே.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Best and worst car colours for resale value in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X