ஏன் எஸ்யூவி கார்களை வாங்கவேண்டும்? 10 முக்கிய காரணங்கள்

நீங்கள் புதிதாக கார் வாங்குவது குறித்து யோசித்து கொண்டிருக்கிறீர்களா நீங்கள் ஏன் எஸ்யூவி காரை வாங்க வேண்டும் என் சில காரணங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

நாளுக்கு நாள் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. பலர் தங்கள் வசதிக்கு தகுந்த படி கார்களை வாங்குகின்றனர்.

ஏன் எஸ்யூவி கார்களை வாங்கவேண்டும்? 10 முக்கிய காரணங்கள்

ஆனால் நமது தேவைக்கு எந்த காரை வாங்க வேண்டும் என அவர்கள் தேர்வு செய்வதில் பெரும் குழப்பங்கள் நிலவுகிறது. கார்கள் வாங்கு நினைக்கும் பலர் எஸ்யூவி கார்களை தங்கள் பரீசிலனையிலேயே எடுத்துக்கொள்வதில்லை

ஏன் எஸ்யூவி கார்களை வாங்கவேண்டும்? 10 முக்கிய காரணங்கள்

எஸ்யூவி கார்களின் தோற்றத்தையும் அளவையும் பார்த்து அந்த கார்கள் விலை அதிகமாக இருக்கும் என அவர்களே ஒரு முடிவுக்கு வந்து விடுகின்றனர். ஆனால் அதில் உள்ள வசதிகள் குறித்து அவர்கள் தெரிந்துகொள்ளவதில்லை.

ஏன் எஸ்யூவி கார்களை வாங்கவேண்டும்? 10 முக்கிய காரணங்கள்

நீங்கள் புதிதாக கார் வாங்குவது குறித்து யோசித்து கொண்டிருக்கிறீர்களா நீங்கள் ஏன் எஸ்யூவி காரை வாங்க வேண்டும் என் சில காரணங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். அதன் படி உங்களுக்கு எஸ்யூவி கார் பலனளிக்கும் என்றால் உங்கள் பார்வையை எஸ்.யூவி பக்கம் திருப்புங்கள்.

ஏன் எஸ்யூவி கார்களை வாங்கவேண்டும்? 10 முக்கிய காரணங்கள்

01. அதிக பயணிகளுக்கான இடம்

உங்கள் குடும்பம் பெரிய குடும்பமாக இருந்தால் உங்களுக்கு எஸ்யூவி கார் தான் சரியான சாய்ஸ். ஹெட்ச்பேக் மற்றும் செடன் ரக கார்களை நீங்கள் வாங்குகின்றீர்கள் என்றால் நீங்கள் குடும்பத்துடன் வெளியில் செல்ல 2-3 டிரிப்கள் செல்ல வேண்டும் அல்லது 2-3 வாகனங்களில் செல்ல வேண்டும். இதுவே எஸ்யூவி கார் என்றால் மொத்த குடும்பத்தினரும் ஒரே காரில் ஒரே நேரத்தில் பயணம் செய்யலாம்.

ஏன் எஸ்யூவி கார்களை வாங்கவேண்டும்? 10 முக்கிய காரணங்கள்

02. சிறந்த மைலேஜ்

காரை பார்க்கும் பலர் பெரிய காராக இருப்பதால் அதிக மைலேஜ் தராது என நினைத்துக்கொள்வர் ஆனால் எஸ்யூவி கார் வந்த புதிதில் தான் இந்த பிரச்னை எல்லாம் இருந்தது. இப்பொழுது சிறந்த மைலேஜ் தரக்கூடிய எஸ்யூவி கார்களும் வந்துவிட்டது. நீங்கள் மற்ற கார்களில் 2-3 டிரிப்கள் போவதற்கு இந்த மைலேஜ் சிறப்பான மைலேஜாகவே இருக்கும்.

ஏன் எஸ்யூவி கார்களை வாங்கவேண்டும்? 10 முக்கிய காரணங்கள்

03. அதிக பாதுகாப்பு

சாதாரண கார்களைவிட எஸ்யூவி கார்களில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக இருக்கும். எஸ்யூவி கார்கள் பெரிய சைஸில் இருப்பதால் இது விபத்தில் சிக்கினாலும் குறைந்த அளவு சேதாரங்களையே ஏற்படுத்தும்.

ஏன் எஸ்யூவி கார்களை வாங்கவேண்டும்? 10 முக்கிய காரணங்கள்

04. டோ செய்தவற்கு சிறந்த கார்

சிலருக்க காரில் சிலவற்றை டோ செய்து செல்லவேண்டிய கட்டாயம் இருக்கும். குறிப்பாக கடலுக்கு செல்பவர்கள் காருக்கு பின்னாடி படகை ஒரு வண்டியில் கட்டி டோ செய்து செல்வர், சிலர் மற்ற வாகனங்களை டோ செய்வர். இவ்வாறான செல்களுக்கு சாதாரண கார்களை விட எஸ்யூவி அதிக ஈடு கொடுக்கும். இதனால் எளிதாக டோ செய்து செல்ல முடியும்.

ஏன் எஸ்யூவி கார்களை வாங்கவேண்டும்? 10 முக்கிய காரணங்கள்

05. ஆப் ரோடு டிரைவிங்

டிரக்கிங் செல்ல பழக்கம் உள்ளவர்கள் அதிகமாக ஆப் ரோடு டிரைவிங் செல்ல வேண்டியது இருக்கும் உயரம் காரணமாகவும், அமைப்பு காரணமாகவும், சாதாரண கார்களை விட எஸ்யூவி கார்கள் ஆப் ரோட்டில் சிறப்பான பெர்பாமன்ஸை வழங்கும்.

ஏன் எஸ்யூவி கார்களை வாங்கவேண்டும்? 10 முக்கிய காரணங்கள்

06. செல்லபிராணிகளுக்கு செல்லமான கார்

நீங்கள் வளர்த்து வரும் நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளை சாதரண காரில் எடுத்து சென்றார். அவற்றை ஏதேனும் ஒரு கூண்டில் அடைத்து தான் எடுத்து செல்ல வேண்டியது. வரும். இதுவே எஸ்.யூவி காராக இருந்தால் பின் பக்க கேபின் முழுவதும் உங்கள் செல்லப்பிராணிகள் உலாவ வசதியாக இருக்கும்.

ஏன் எஸ்யூவி கார்களை வாங்கவேண்டும்? 10 முக்கிய காரணங்கள்

07. வெள்ளத்தின் போது தாக்கு பிடிக்கும்

மழை வெள்ள காலங்களில் எஸ்யூவி காரின் உயரம் காரணமாக காருக்குள் தண்ணீர் என்பது அரிதான விஷயம் தான். ஆனால் சிறிய ரக கார்களில் எளிதாக தண்ணீர் புகுந்துவிடும். மேலும் அகலம் காரணமாக காருக்கும் தண்ணீர் பரவும் நேரமும் எஸ்.யூவி கார்களில், சாதாரண காரை ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கும்.

ஏன் எஸ்யூவி கார்களை வாங்கவேண்டும்? 10 முக்கிய காரணங்கள்

08. அதிக பொருட்களை ஏற்றி செல்லலாம்

சாதாரண காரை விட எஸ்யூவி காரில் அதிக பொருட்களை ஏற்றி செல்ல முடியும். இதில் உள்ள அதிக இட வசதியும், உயரமும் தான் இந்த காரில் உள்ள நல்ல வசதி என கூறலாம். சாதாரண செடன் காரிலோ, அல்லது ஹெட்ச்பேக் காரிலோ அதிகமான பொருட்களை எடுத்து செல்ல முடியாது.

ஏன் எஸ்யூவி கார்களை வாங்கவேண்டும்? 10 முக்கிய காரணங்கள்

09. தேவைக்கு ஏற்ப சீட்களை மாற்றி கொள்ளலாம்

சாதாரண கார்களில் முன்பக்கம் இரண்டு சீட் பின் பக்கம் மூன்று சீட் என்ற அமைப்பில் தான். இருக்கும் இதைநாம் மாற்ற முடியாது. அதுவே எஸ்.வி., கார் என்றால் சீட்டை நம் விருப்பத்திற்கு மாற்றியமைத்து கொள்ளலாம். இதனால் நம் தேவைக்கு ஏற்ப காரை பயன்படுத்த முடியும்.

ஏன் எஸ்யூவி கார்களை வாங்கவேண்டும்? 10 முக்கிய காரணங்கள்

10. சிறப்பான லுக்

சாதார காரை காட்டிலும் எஸ்யூவி காரின் லுக் என்பது சிறப்பாக இருக்கும். மேலும் இது சமுகத்தில் உங்களது மதிப்பையும் உயர்த்தி காட்டும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
10 Best Reasons to Buy an SUV or Crossover. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X